Friday, November 26, 2010
பெண் மன வானில்.....
பெண் மனதை வெளிப்படுத்தும் அல்லது பெண் பாடகர்கள் பாடிய பாடல்கள் பற்றிய இத்தொடருக்கு அழைத்த நண்பர் ராஜாவிற்கு நன்றியும் வணக்கங்களும்!
பெண் மனம் ஆழமானது ஒரு வானம்போல பரந்தது அதில் பல்வேறு உணர்வுகள் இருந்தாலும் பல சமயங்களில் அவற்றை ஆண்கள் போல வெளிப்படுத்த முடிவதில்லை. திரைப்படங்களில் பெண்கள் மட்டும் பாடல்கள், பெண் மனதை வெளிப்படுத்தும் பாடல்கள் பல வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலனவை காதல் சார்ந்தவையாக வந்துள்ளன. தாய்ப்பாசம் கூட ஆண் பாடுவது போலதான் பல பாடல்கள் உள்ளன. உண்மையில் மற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் திரைப்படங்கள் அதிகமாக இல்லை என்பதே உண்மை.
பொதுவாக எனக்கு மெலடி பாடல்களே அதிகமாக பிடிக்கும். அவற்றை கேட்கையில் மனம் லேசாகிவிடுகிறது. எனக்கு பிடித்த பெண் மனதை வெளிப்படுத்தும் அல்லது பெண் பாடகர்கள் பாடிய பாடல்கள் ஏராளமாக உள்ளன. எல்லாவற்றையும் எழுத முடியாததால் அவற்றில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன். எல்லாப் பாடல்களை கேட்கவும் லிங்க் தந்துள்ளேன். கிளிக் செய்து கேட்கலாம்.
1. ஸ்ரேயா கோஷல் அவர்கள் பாடி ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற எனக்கு பிடித்த பாடல் என்ற பாடல். இப்பாடலில் ஏதோ ஒரு புரியாத உணர்வு ஏற்படும். ஸ்ரேயா அவர்களின் குரல் மிக இனிமையாக இருக்கும்.
2. எங்கே என் புன்னகை (தாளம்). இப்பாடலை ஷோபா என்பவர் பாடியுள்ளார் (எஸ்பிபி அவர்களின் குரலும் சிறிது வரும்). ஒரு பெண்ணின் காதல் ஏக்கம் இதில் தெரியும். பலருக்கு இந்த பாடலும், இசையும் மிகவும் பிடிக்கும்.
3. என்னுள்ளே என்னுள்ளே (வள்ளி) : ஸ்வர்ணலதா அவர்களின் பெரும்பாலான பாடல்கள் இனிமையாகவே இருக்கும். இது மிக உருக்கும் குரலான் ஆன பாடல். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்.
4. சித்ரா அவர்கள் பாடிய பல பாடல்கள் சிறப்பாக இருக்கும். அதில் இந்த இரண்டு பாடல்கள் சிந்து பைரவி படத்தில் இடம்பெற்றவை முதல் படம், முதல் பாடல் போல் தெரியாமல் அற்புதமாக பாடியிருப்பார்.
ஒரு மகள் பெற்றோர் அன்புக்காக ஏங்கும் பாடல் - நானொரு சிந்து
இது சித்ரா அவர்களின் முதல் பாடல்- பாடறியேன் படிப்பறியேன்
5. ஜானகி அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும் அவர்களின் பாடல்கள் பல எனக்கு பிடிக்கும் அதில் சில:
சாதனை படத்தில் இடம்பெற்ற அன்பே அன்பே, அத்தி மர பூவிது ஆகிய இரண்டு பாடல்கள்.
தாய் பாடும் பாடல் - பிள்ளை நிலா (நீங்கள் கேட்டவை)
காதல், ஆசை கலந்த ஒரு பெண்ணின் பாடல் - பொன்வானம் பன்னீர் தூவுது (நேற்று நீ நாளை நான்)
சின்ன சின்ன (மௌன ராகம்)
காற்றில் எந்தன் (ஜானி)
6 ஜென்சி அவர்கள் ஒரு கால கட்டத்தில் அவரின் பாடல்கள் மிக பிரபலம். அதில் ஜானி படத்தில் வரும் இப்பாடல் என் வானிலே - வெறுமை நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை
7. ஏண்டி முத்தம்மா (ஆறு புஷ்பங்கள்)- இது ஒரு ஆண் பாடும் பாடல் ஆனால் பெண்ணின் வெட்கத்தை சொல்லும் பாடல். இசையமைத்து பாடியவர் சந்திரபோஸ் அவர்கள்.
8. சில பழைய பாடல்கள்:
* கண்ணும் கண்ணும் (வஞ்சி கோட்டை வாலிபன்) - பெண்கள் போட்டியிடுவது போல பல பாடல்கள் திரைப்படங்களில் வந்தாலும் இப்பாடல் அவற்றிற்கு முன்னோடி. கேட்பதை விட பார்க்க நன்றாக இருக்கும். இப்பாடலை பாடியவர்கள் ஜிக்கி, பி.லீலா
* நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா (உயர்ந்த மனிதன்) - இந்த பாடல் பி. சுசீலா அவர்களால் பாடப்பட்ட இப்பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்ததாம். மிக அருமையான பாடல். அவரின் மற்றுமொரு பாடல் மயங்கினேன் (நானே ராஜா நானே மந்திரி)
* காதோடுதான் நான் பாடுவேன் (வெள்ளி விழா) - எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் கணீர் குரல் அற்புதமானது. இதில் மென்மையாக பாடுவார். மிக இனிமையான பாடல்.
* பூவாகி காயாகி (அன்னை) - பானுமதி அவர்கள் பாடிய தாய்ப் பாசம் உணர்த்தும் பாடல்
* பழம் நீயப்பா (திருவிளையாடல்)- இந்த கணீர் குரலும் கம்பீரமும் எந்த பெண் பாடகிக்கும் இருந்ததில்லை. அதுதான் இவரின் சிறப்பு நடிப்பு பாடல் என சிறப்பாக செய்திருப்பார் கே.பி. சுந்தராம்பாள்.
9. கடவுள் தந்த (மாயாவி): இந்த பாட்டு இந்த லிஸ்டில் சேருமா என தெரியவில்லை. ஆனால் கல்பனா என்ற பாடகி இந்த பாடலை சிறப்பாக பாடியிருப்பார். அவர் குரல் மிக நன்றாக இருந்தது, கூடவே எஸ்பிபி சரணும்.
10. ஆறும் அது ஆழமில்ல (முதல் வசந்தம்) - இளையராஜா அவர்கள் பாடிய பாடல்.
இது போல பல பாடல்கள் உள்ளன. எனக்கு இப்போதைக்கு நினைவில் இருக்கும் பாடல்களை தந்துள்ளேன். இந்த தொடர்பதிவை விருப்பமுள்ளவர்கள் யாரும் தொடரலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல செலக்ஷன்
ReplyDeletegood collections
ReplyDeleteகே.பி. சுந்தராம்பாள்.//காஸ்ட்லி குரலும் கூட..அந்த காலத்துலியே ஒரு லட்சம் சம்பளம் வாங்குனவங்களாச்சே
ReplyDeleteஇண்ட்லி யிலாவது இணைக்கலாமே..ஏன்..திரட்டிகள் மீது வெறுப்பு?
ReplyDeleteபாடகிகள் வைத்து தொகுத்து இருப்பது சூப்பர் எஸ் கே
ReplyDeleteநல்ல பாடல் தேர்வுகள்.....! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதில் வரும் சில பாடல்களை நான் கேட்டது இல்லையென்றாலும் அனைத்துமே அருமையான பாடல்கள்.
ReplyDeleteநல்ல தொகுப்பு..
ReplyDeleteசில பாடல்களை நான் கேட்டதில்லை .. தெரிந்த வரைக்கும் அனைத்து பாடல்களும் அருமை.. தொடர்ந்தமைக்கு நன்றி தல
ReplyDeleteநல்ல மெலோடியஸ் பாடல்கள்
ReplyDeleteநல்ல செலக்ஷன்
ReplyDeleteஎல்லாமே சூப்பர் படல்கள். கேடக அலுக்காத பாடல்கள்.
ReplyDelete"மாலை பொழுதின் மயக்கத்திலே" சுசீலா பாடலையும் மறக்க முடியாது......என்ன சொல்றீங்க!
ReplyDelete// KANA VARO//
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
//Madhavan Srinivasagopalan//
மிக்க நன்றி!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//
மிக்க நன்றி!
//ஆர்.கே.சதீஷ்குமார//
ரொம்ப நன்றிங்க!
திரட்டிங்க மீது வெறுப்பு இல்லீங்க! விருப்பம் இல்ல அவ்வளவுதான்!
//அருண் பிரசாத்//
ரொம்ப நன்றி!
//பன்னிக்குட்டி ராம்சாமி//
மிக்க நன்றி!
//நாகராஜசோழன் MA//
மிக்க நன்றி!
//வெறும்பய//
ரொம்ப மகிழ்ச்சி!
// "ராஜா"//
மகிழ்ச்சி! மிக்க நன்றி!
//மங்குனி அமைச்சர்//
மிக்க நன்றி!
//S Maharajan//
மிக்க நன்றிங்க!
//நித்திலம்-சிப்பிக்குள் முத்து//
மிக்க நன்றிங்க! கேடக அலுக்காத பாடல்கள்தான்!
// சிவகுமார்//
நிறைய பாடல்கள் விட்டுட்டேங்க! அதில் நீங்க சொன்னதும் ஒண்ணு!
வருகைக்கு மிக்க நன்றி!
அருமையான பாடல்களின் தொகுப்பு.
ReplyDeleteஜூலி கணபதி பாடல் இசைத்தாலாட்டு.
நல்ல ரசனை உங்களுக்கு...
//3. என்னுள்ளே என்னுள்ளே (வள்ளி) ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்.//
ReplyDelete//சாதனை படத்தில் இடம்பெற்ற அத்தி மர பூவிது //
//சின்ன சின்ன (மௌன ராகம்)
காற்றில் எந்தன் (ஜானி)//
//* காதோடுதான் நான் பாடுவேன் (வெள்ளி விழா) //-
இவையெல்லாம் எம் பார்வையில் மிக அருமையான பாடல்கள்.
அருமையான தொகுப்பு வாழ்த்துகள் எல் கே
ReplyDeleteநல்ல தொகுப்பு ...
ReplyDelete//பாரத்... பாரதி... said... //
ReplyDeleteமிக்க நன்றிங்க!
//rk guru said... //
ரொம்ப நன்றிங்க!
அருமையான தொகுப்பு.மிக மிக ரசித்தேன். பாராட்டுக்கள்...
ReplyDeleteஅருமையான இனிய பதிவும்கூட....
ReplyDeleteஅனைத்துமே கேட்ட பாடல்கள் என்பதனால் முதல் வரிகளை பார்த்தவுடனே மிச்ச வரிகளையும் உதட்டில் உச்சரித்துக்கொண்டு...
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்... அன்பான பாராட்டுகள்...
மிக்க நன்றி...
நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துக்கள்..
ReplyDelete//எனக்கு பிடித்த பாடல்//
ReplyDeletesuper! :))
Nice post!
அருமை..அருமை.
ReplyDeleteஅருமையான பாடல்கள்..
ReplyDeleteஇவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்று நினைக்கும் பொழுது எந்த அளவுக்குப் பெண்கள் மனதை வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.. தமிழ்த் திரைப்படங்களில் பெண் கவிஞர்கள் ஏன் அதிகம் இல்லை?
ReplyDelete//திரைப்படங்களில் பெண்கள் மட்டும் பாடல்கள், பெண் மனதை வெளிப்படுத்தும் பாடல்கள் பல வந்திருந்தாலும் //
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html
நன்றி
நல்ல தொகுப்பு.
ReplyDeleteஇது எப்ப ஆரம்பிச்சீங்க.
சொல்லவே இல்ல.
Nice post SK.
ReplyDeleteநல்ல தொகுப்பு அண்ணா ..!!
ReplyDeleteகாதோடுதான் நான் பாடுவேன் (வெள்ளி விழா) - எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் கணீர் குரல் அற்புதமானது. இதில் மென்மையாக பாடுவார். மிக இனிமையான பாடல்./////
ReplyDeleteஇந்த படத்தில் ஜானகி நான் சத்தம் போட்டு தன பாடுவேன் என்று ஒரு பாடல் பாடி இருப்பார் .
அது எல்.ஆர். ஈஸ்வரி பாட வேண்டிய பாடல் .மாற்றி குடுத்திருப்பாங்க
நல்ல தொகுப்பு நண்பரே
ReplyDeleteஎன்ன ஒரு ரசனை!!!!
ReplyDeleteஉண்மையிலேயே அருமையான தேர்வு. என்னுடைய கலெக்க்ஷனில் சில பாடல்கள் இல்லை. உங்களால் லிங்க் கிடைத்து டவுன்லோட் செய்து கொண்டேன் நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிக அருமையான தொகுப்பு..வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல தொகுப்பு எஸ்.கே.இவை அனைத்துப்பாடல்களையும் கேட்டு இருக்கின்றேன்.
ReplyDeleteநல்ல ரசனை உங்களுக்கு!!!!!
ReplyDeleteஎல்லாமே நான் ரசிக்கும் பாடல்கள்
நல்ல தொகுப்பு
பாடல்கள் அருமை.
ReplyDeleteஅருமையான தொகுப்பு.. பெரும்பாலான பாடல்கள் எனக்கும் பிடித்தவை.. :-))
ReplyDeleteஎனக்கு இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும் என்ற போதிலும் அவற்றில் அவரின் இசையே மெய்மறக்க வைத்து விடும் காரணத்தால் வரிகளை யோசிக்கும் முன்பே இசை என்னை வருடி செல்கிறது. இருப்பினும்
ReplyDelete1. செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம்
2. நன்றி சொல்ல உனக்கு
3. தீபங்கள் பேசும் திருகார்த்திகை மாசம்
ஆகியவை எப்போதும் பிடிக்கும்.
புதியதில் எனக்கு ஏராளமான பாடல்கள் பிடிக்கும்
1.ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராப் )(எத்தனை பாடல்கள் வந்த போதும் இந்த ஒரு பாடல் போதும்
)
2.மே மாதம் 98 இல் மேஜர் ஆனேன் (ஜே.ஜே)
3.தரை இறங்கிய பறவை போலவே (ஈரம்)
4.அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே(மின்சார கனவு)
5.இதுவரை நான் தனியே (கவிதை குண்டர்கள்)
6.வரும் வழி எங்கிலும் (பொக்கிஷம்)
7.உனக்குள் நானே உருகும் இரவில் (பச்சைக்கிளி முத்துச்சரம்)
8.உன் சிரிப்பினில்(பச்சைக்கிளி முத்துச்சரம்)
9.மன்னிப்பாயா (விண்ணை தாண்டி வருவாயா)
10.எதோ ஒரு பாட்டு என் காதினில் கேட்கும் (ஆனந்த பூங்காற்றே)
அருமையான தொகுப்புகள்...
ReplyDeleteதங்களின் இந்த மேலான பணி தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
இன்றுதான் தங்களின் தள தரிசனம் கிடைத்தது...
ReplyDeleteபொறுமையா எல்லாபதிவுகளையும் படிச்சிடறேன்...
நன்றி
//3. தீபங்கள் பேசும் திருகார்த்திகை மாசம்//
ReplyDeletenice song
எதோ ஒரு பாட்டு என் காதினில் கேட்கும்
ReplyDeleteபடம் :உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..
@பாரத்... பாரதி.
ReplyDelete//எதோ ஒரு பாட்டு என் காதினில் கேட்கும்
படம் :உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..//
நீங்கள் கூறியதுதான் சரி. தவறுக்கு வருந்துகிறேன்.
//பழம் நீயப்பா (திருவிளையாடல்)- இந்த கணீர் குரலும் கம்பீரமும் எந்த பெண் பாடகிக்கும் இருந்ததில்லை. அதுதான் இவரின் சிறப்பு நடிப்பு பாடல் என சிறப்பாக செய்திருப்பார் கே.பி. சுந்தராம்பாள்.//
ReplyDeleteநல்ல பாட்டுங்க ..
16 வயதினிலே- ஜானகியின் செந்தூரப்பூவே பாடல்
ReplyDeleteசத்ரியன் - ஸ்வர்ணலதா வின் "மாலையில் யாரோ"
ரோசாப்பூ ரவிக்கைக்காரி- என்னுள்ளே எங்கோ
---லிஸ்டில் சேர்த்துக்கங்க சார்.
நல்ல தொகுப்பு. Thanks
walla thokuppu saarநல்ல தொகுப்பு சார்
ReplyDeleteஉங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து உள்ளேன் (கமெண்ட் பாக்ஸில் உள்ளது. ). நேரம் இருந்தால் எழுதவும்.
ReplyDeletehttp://balepandiya.blogspot.com/2010/12/blog-post_19.html
அடுத்தது?
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
ReplyDelete-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com
very nice!!! good collection here...
ReplyDeleteNice selection of songs...happy new year
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவலையுலக சீனியர் எஸ்.கே. அவர்களுக்கு
ReplyDeleteரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா....
ReplyDeletemost of these my favourites too..thanks for sharing with links...had a chance to hear them once again.... thanks
ReplyDeleteஅனைத்துப்பாடல்களுமே சிறப்பான தொகுப்பு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க...
மிக அருமையான ரசனை...... அத்தனையும் மனதை தைக்கும் பாடல்கள்.... பாராட்டுக்கள்
ReplyDeleteபுத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteSuper selection
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete