இனிமையான கடற்கரை காற்று வீசியது. அதை அனுபவித்தபடியே நடந்தேன்.
”அய்யா தர்மம் பண்ணுங்கய்யா”
குரல் கேட்டு திரும்பினேன். ஒரு வயதான மூதாட்டி நின்று கொண்டிருந்தாள்.
யோசித்தேன். பிறகு சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு 1 ரூபாய் நாணயத்தை எடுத்து அவளுக்கு போட்டேன்.
”தர்மராசா நீங்க நல்லாயிருக்கணும்”
நான் புன்னகைத்து கொண்டே நடந்தேன்.
நேரம் மாலை 4. 15
கடல் மணலை எட்டி உதைத்தேன். கடல் மணல் கண்ணில் விழுந்தது.
”டேய் நில்லுடா”
”குரல் கேட்டு நின்றேன்”
”டேய் நீ இங்கியா இருக்க, அவசரமாக ஒரு 100 ரூபா இருந்தா தாடா ரொம்ப அர்ஜண்டுடா”
அவன் முகத்தை பார்த்தேன். பாக்கெட்டில் இருக்கும் பணத்தை தொட்டு பார்த்தேன்.
”இல்லடா என் கிட்ட ஏது பணம் நானே வேலை வெட்டி இல்லாம ஊரை சுத்திகிட்டு இருக்கேன்.”
”டேய் பிளீஸ்டா ரொம்ப அவசரம்டா”
”டேய் சத்தியமா என்கிட்ட எந்த பணமும் இல்ல” சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தேன். அவன் நம்பாத பார்வை பார்த்தவாறே சென்றான்.
ரொம்ப அவசரமாம். பணம் வாங்கிட்டு குடிக்கதானே போகப்போறான். பணம் போனாலும் திரும்பி வராது. இவனுக்கெல்லாம் எவன் பணம் தருவான்?
நேரம் மாலை 4. 00
கடலும் வானமும் நீலமாக தெரிந்தது. உண்மையில் இரண்டிற்கும் அது உண்மையான நிறமில்லை. ஆனாலும் நம் கண்ணுக்கு அதுதான் தெரிகிறது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.
மெதுவாக யோசித்து கொண்டே நடந்தேன். மீதமிருக்கும் பணத்தை என்ன செய்வது?
திடீரென என் பேண்ட் பாக்கெட்டில் யாரோ கைவிடுவது போல இருந்தது. சடாரென திரும்பினேன். ஒருவன் என் பேண்ட் பாக்கெட்டில் கைவிட முயன்றான் அவனை பிடித்தேன். பளாரென அறை விட்டேன்.
”என்னடா பிக்பாக்கெட்டா” கோபமாக கேட்டேன். இதற்குள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சூழ்ந்தனர்.
”என்ன சார் பிக்பாக்கெட்டா?” “இந்த வயசிலேயாவா” ”இவனையெல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுக்கணும்”
சிலர் விமர்சித்தனர். சிலர் அவனை கொஞ்சம் அடிக்க ஆரம்பித்தனர். அவன் அழம்பித்தான்.
“நிறுத்துங்க” அவனை பார்த்தேன். விடலை வயது. “அவனை விட்ருங்க பரவாயில்லை” ”டேய் மறுபடியும் இந்த மாதிரி பண்னாதடா” என மிரட்டினேன். அவன் தலையாட்டி விட்டு ஓடினான். எல்லோரும் முணுமுணுத்துக் கொண்டே சென்றனர்.
நேரம் மாலை 3.00
கதவை தட்டினேன். அவன் திறந்தான்.
”என்ன சார் பணம் கொண்டு வந்திருக்கிங்களா”
”ம்”
உள்ளே சென்றேன்.
”எவ்வளவு”
யோசித்தேன். இரண்டு லட்சம் உள்ளது. எல்லாவற்றையும் கொடுக்கலாமா? ம்ஹூம் வேண்டாம்.
”ஒரு லட்சம்”
”கொடுங்க”
”உன்னோட கமிஷன் போக மீதியை கட்டிடு”
”இந்த தடவையாவது நல்ல அமவுண்ட் கிடைக்குமா”
”நானா சார் ஓடறேன். எல்லாம் ஓடற குதிரைங்க கையிலதான் ஜாக்பாட் இருக்கு”
நேரம் மதியம் 12.00
அந்த பஸ் ஸ்டாப்பில் நான், ஒரு பெண், ஒரு ஆள் மட்டுமே இருந்தோம்.
அந்த ஆளின் செல்ஃபோன் ஒலித்தது. “சொல்லுமா பணத்தை ரெடி பண்ணிட்டேன். கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்” சத்தமாக பேச ஆரம்பித்தார். அவர் சத்தமாக பேசியது அந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை போல மூஞ்சை சுளித்துக் கொண்டு திரும்பிக் கொண்டது. அது அவரின் இயல்புபோல தொடர்ந்து சத்தமாக பேசினார்.
”இங்க ஏதோ கலாட்டாவாமா, பஸ் ரொம்ப நேரமா காணோம், ஆட்டோ கூட பக்கத்தில் இல்லை. பஸ் கிடைச்ச உடனே ஆஸ்பிடலுக்கு வந்திடறேன்மா”
”அழாத அதான் பணம் தயாரா இருக்குன்றேன்ல, நாளைக்கு நம்ம குழந்தை ஆபரேசன் கண்டிப்பா நடக்கும். என் பிரெண்டு 2 லட்சம் ஒரு இடத்தில் கடன் வாங்கி கொடுத்தான். ” அவர் பார்வை கையில் வைத்திருந்த கைப்பைக்கு யதேச்சையாய் போனது.
”நான் வந்துருவேன் கவலைப்படாத குழந்தை எப்படி இருக்கான் தூங்குறனா”அப்போது தூரத்தில் ஏதோ பஸ் வந்தது.
”இரும்மா பஸ் வர மாதிரி இருக்கு” சொல்லிக் கொண்டே திரும்பினார்.
இதுவரை கவனித்துக் கொண்டிருந்த நான் அவரருகே சென்று அவரின் கைப்பையை பிடுங்கிக் கொண்டு பயங்கர வேகமாக ஓடினேன்.
நன்றாயிருக்கிறது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த தடவையாவது நல்ல அமவுண்ட் கிடைக்குமா”
ReplyDelete”நானா சார் ஓடறேன். எல்லாம் ஓடற குதிரைங்க கையிலதான் ஜாக்பாட் இருக்கு”////
எல்லாம் ஜாக்பாட்க்கு போகுதா....?
// ஜீ... said...//
ReplyDeleteநன்றிங்க!
// சௌந்தர் said...//
குதிரை ரேஸுக்கு பணம் கட்டுறார்னு சொல்ல, அப்படி எழுதினேன் அவ்வளவுதான்!
அருமையா சொல்லியிருக்கீங்க... நல்லாயிருக்கு கூறிய விதம்...
ReplyDeleteதிருடுபவனுக்கு தெரிவதில்லை பறிகொடுத்தவனின் வலி..
கதை சொல்லியிருக்கற விதம் அருமை..
ReplyDeleteசூப்பருங்க.. டைம் லைன் மிக அருமை.. கலக்கிட்டீங்க..
ReplyDelete//வெறும்பய said...//
ReplyDeleteஉண்மைதான் நண்பா! நன்றி!
//பதிவுலகில் பாபு said...//
ரொம்ப நன்றிங்க!
//பிரியமுடன் ரமேஷ் said...//
மிக்க நன்றிங்க!
ரிவர்ஸ் ஆடர் சூப்பருங்க...
ReplyDelete//அருண் பிரசாத் said...//
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
nalla irukku
ReplyDeleteகலக்கீடீங்க அண்ணா .,
ReplyDeleteஇந்த மாதிரி பின்னாடி இருந்து நான் கதை படிக்கிறது இதுதான் முதல் முறை . உண்மையாவே உங்களுக்கு அருமையா எழுத வருது . அதிலும் இது புதிய முயற்சி.. செமையா இருக்கு ..!
நல்லா இருக்குங்க. இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.
ReplyDelete// TERROR-PANDIYAN(VAS) said..//
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி!
//ப.செல்வக்குமார் said...//
மிக்க மிக்க நன்றி நண்பா!
//நாகராஜசோழன் MA said.//
நன்றிங்க! முதல் முயற்சிங்கிறதால நிறைய சேர்க்கலை!
ஆஹா, சூப்பர், நல்ல முயற்சி, நன்றாக வந்திருக்கிறது, பாராட்டுக்கள் மற்றும், வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்ன ஓட்டுப் பொட்டி எதுவும் இல்லியா?
ReplyDeleteஅடுத்து தொடர் கதை முயற்சியா?
ReplyDeleteம்ம்ம்ம்.. எதுவும் நடக்கலாம்..
நல்ல இருக்குங்க தொகுப்பு..
ReplyDeleteஆனாலும், கடைசி பகுதி, படித்து மனசுக்கு கஷ்டமாச்சு :(
மருத்துவமனைக்கு வைத்திருந்த பணம் பிக்பாக்கெட் அடிக்கப் பட்டது தான் வருத்தம்..!!
ReplyDeleteஎஸ் .கே நல்ல இருக்கு reverse ஆர்டர்ல இன்னும் விதயசமாக எழுதுங்க மக்கா தொடரட்டும் .....
ReplyDeleteநன்றாக இருக்கிறது சார்.
ReplyDeleteபின் தொடரும் ஓட்டமாய்
பயணித்தது கொஞ்சம்
வித்தியாசமாக இருந்தது.
//பன்னிக்குட்டி ராம்சாமி said....//
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி சார்!
ஓட்டில் எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை சார்!
//பாரத்... பாரதி... said...//
ரொம்ப நன்றிங்க!
//Ananthi said...//
மிக்க நன்றிங்க!
//இம்சைஅரசன் பாபு.. said...//
ரொம்ப நன்றிங்க!
//விமலன் said...//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சார்!
முதலில் அவன் கேரக்டர் நல்ல முறையில் காண்பித்து பின் அவனுடைய உண்மையான் கேரக்டரை இறுதியில் காண்பித்துள்ளீர்கள்..
ReplyDeleteகதையை ரிவர்ஸில் இருந்து சொன்னதால் கதையின் தன்மையினை உணர முடிகிறது..
நல்லா இருக்கு கதை? கடைசியில் அவனும் கெட்டவனா?
ReplyDelete//guru said...//
ReplyDeleteமிக்க நன்றிங்க!
//ஆர்.ராமமூர்த்தி said...//
வருகைக்கு நன்றிங்க!