Tuesday, February 22, 2011

BLACK RIVER - (7) கடைசி அத்தியாயம்


மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்!
இதுவும் பெரிய அத்தியாயம். இருக்கிறதிலேயே ரொம்ப பெரிசு! தொடர்ந்து படிக்கிறதுக்கு நன்றி! நன்றி! நன்றி!



ஏழாம் - கடைசி அத்தியாயம்

”சார் நான் உங்களுக்கு தகவல் கொடுத்ததும் நீங்க வரப்போறதும் நாகாவுக்கு எப்படியோ தெரிஞ்சிடுச்சு சார்!” என்று மூச்சு வாங்கி கொண்டே பேசினான் சௌந்தர்.

“அது எப்படி தெரிஞ்சிருக்கும் எனக்கு புரியுது” என்றார் பாண்டியன்

“இருந்தாலும் நீங்க யார்கிட்டையும் சொல்லாம யாரையும் கூப்பிடாம போனது தப்புதான் சார்” என்றார் சதீஷ்.
 

அமைதியாக இருந்தார் பாண்டியன்.

“சார் நீங்க நல்லவர் நேர்மையானவர். ஆனா நீங்க நாகாவுடனான மோதலுக்கு பின் ரொம்ப எமோஷனலாயிட்டீங்க. அவங்களை பிடிக்கிறது முக்கியம்தான் ஆனா அதுக்காக உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீங்க!”

”சதீஷ் நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனா ஒரு போலீஸ் ஒரு கிரிமினல் கையால அடிபட்டது எனக்கு அவமானம் அது உங்களுக்கு புரியாது. இவ்வளவு முயற்சித்தும் அவங்க தப்பிச்சிட்டாங்களே”

சௌந்தர் பேசினான். “சார் அவங்க தப்பிச்சிருக்க முடியாது இந்தப் பக்கமா இருக்கிற ஏழுவண்ண மணல்திட்டு பக்கமாதான் போனாங்க அந்த பக்கம் போனா பிடிச்சிடலாம்”

“சே, இதை ஏண்டா இவ்வளவு நேரம் சொல்லாம இருந்தே. சதீஷ் வாங்க போலாம் அவங்களை பிடிக்க”

“சார் எதுக்கு அவசரம் என்னை பார்க்க வேற ஒருத்தன் வரேன்னு சொல்லியிருக்கான்”

“அவன்கிட்ட உங்க போன் நம்பர் இருக்கில்ல அவன் மறுபடியும் போன்பண்ணா அவசர வேலை அப்புறம் பார்க்கிறோம்னு சொல்லிக்கலாம். நீங்க இப்ப கிளம்புங்க. அப்படியே நம்ம ஸ்குவாடுக்கும் தகவல் தாங்க”

இவரை திருத்த முடியாது என மனதில் எண்ணிக்கொண்டே பாண்டியன், சௌந்தருடன் கிளம்பினார் சதீஷ்.

***************************************************************

”ஏண்டா இவ்வளவு லேட்டு எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?”

“சாரிடா ராம் கிளம்புற நேரத்தில எடிட்டர் வந்துட்டார். கமிஷ்னரை பார்த்து விஷயத்தை சொன்னாராம். ஆனா கமிஷ்னர் முதல்ல இதை நம்பலையாம் அப்புறம் எடிட்டர் ஸ்ட்ராங்க சொன்னதை கேட்டு, சில அதிகாரிங்க கூட கலந்து பேசிட்டு இன்னைக்குள்ள முடிவு சொல்றேன்னு சொல்லியிருக்காராம்”

”அப்படியா அருண் நல்லதா போச்சு! ஆனா நான் இப்போ ஒரு போலீஸ்காரர்கிட்ட வேற பேசிட்டேன். போகலன்னா தப்பா போயிடும். என்ன பண்ணுறது?”

“சரிடா அவரையும் பார்த்தா போச்சு! எடிட்டர் கூட பார்த்தா தப்பில்லை ஆனா நல்லவரான்னு தெரிஞ்சு பேச சொன்னார்!”

“அதில்ல அருண், இப்ப எங்க மேடம் மேரி வீட்டுக்கு வேலைக்கு வேற போகணும். போகலைன்னா கடுமையா சத்தம் போடுவாங்க இஷ்டம் இல்லன்னா வேலைக்கு வராதன்னு கண்டபடி பேசுவாங்கடா!”

“ஓ, அப்படியா. ம்! சரி ஒன்னு பண்ணுவோம், நாம இரண்டு பேரும் இப்ப மேரி வீட்டுக்கு போவோம் நானே இந்த மாதிரி ஒரு அவசர விஷயமா வெளியே போகனும்னு சொல்றேன். நான் சொன்னா கேப்பாங்க. வா அவங்களை பார்த்துட்டு அப்புறம் அப்படியே அந்த போலீஸ்காரரை பார்த்து விஷயத்தை சொல்லிடலாம்”

“சரிடா வா போகலாம்”

ராமும், அருண்பிரசாத்தும் மேரி வீட்டுக்கு கிளம்பினார்கள்.


***************************************************************

ஜெயந்த் எதிர்பார்த்தது போலில்லை ஜானுடனான சண்டை. அவன் நோக்கம் முடிந்தவரை துப்பாக்கியை உபயோகிக்காமல் ஜானை வீழ்த்துவது. ஆனால் எக்காரணம் கொண்டும் ஜான் இப்போது சாகக் கூடாது. ஆண்டர்சனின் காதலி, பிறகு அந்த எக்ஸ், அப்புறம்தான் ஜான், கடைசியாக ஆண்டர்சன் தற்கொலை செய்து கொண்டது போல இருக்க வேண்டும்.

இதுதான் பிரபாகரிடமும் ஜெயந்திடமும் பிஎஸ்வி சொன்ன திட்டம். ஆனால் ஜான் அவ்வளவு சீக்கிரத்தில் ஓய்ந்து விடவில்லை. அவனின் தேர்ந்த பயிற்சிகள் ஜெயந்தை திணறச் செய்தன. தன் இரண்டு மூன்று மாத பயிற்சியெல்லாம் ஜானிடம் காட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் அங்கே இயங்கிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் ஏஞ்சலினாவை சுற்றியே இருந்தது. குமார் ஒழுங்காக அவளை கடத்தி விடுவானா என எண்ணிக் கொண்டிருந்தான்.


***************************************************************
 
செல்வா அந்த கல்லறையிலிருந்து வெளியே வந்தான் அந்த கல்லறையை மூடி அதன் மேல் பழையபடி பெரிய கல்லை வைத்தான். உள்ளேயிருந்து பிரசாத், ரமேஷ், மாதவன், மங்குனி, பாபு ஆகியோரது குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. வெளியே இருந்து யாராவது கல்லை நகர்த்தினாலொழிய அவர்களால் வெளியே வர முடியாது. அதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.

செல்வா நகைகள் இருந்த சிறிய பெட்டியுடன் அங்கிருந்து நகர்ந்தான். அவன் பின்னாலேயே நாகாவும், யோகேஷும் பின் தொடர்ந்தனர். உள்ளுணர்வு காரணமாக யதேட்சையாக திரும்பிய செல்வா, தன்னை இருவர் பின் தொடர்வதை பார்த்தான்.

அவன் பார்த்து விட்டதை அறிந்த யோகேஷ், “நாகா அவன் பார்த்துட்டான் ஓடிப் போய் பிடி” என வேகமாக துரத்த ஆரம்பித்தார்கள். யார் அவர்கள் எதற்காக தன்னை துரத்துகிறார்கள் என புரியாவிட்டாலும் இருவர் துரத்துவது, மற்றும் தன் கையிலுள்ள நகைப்பெட்டி காரணமாக செல்வா வேகமாக ஓட ஆரம்பித்தான்.

பின் திரும்பி பார்த்த போது அவனை நோக்கி வெறியுடன் நாகாவும் யோகேஷும் ஓடி வருவது தெரிந்தது. எங்கே போவதென தெரியாமல் எதிர்த் திசையில் வேகமாக ஓடினான் செல்வா.

***************************************************************

வீட்டின் பின்பக்கமாக நுழைந்த பிரபாகர் படிக்கட்டுகளில் மெதுவாக ஏறினான். மாடியிலிருந்த அறையில் சாம் ஆண்டர்சனும் அவர் காதலியும் படுக்கையில் ஒன்றாக இருப்பது அவனுக்கு ஜன்னல் வழியாக தெரிந்தது. முதலில் அவர் காதலியை கொல்லனும் அவ்வளவுதானே!. அவளை சுட்டா ஆண்டர்சன் யாருன்னு பார்க்க வெளியே வருவார் அவரை அடிச்சு மயக்கப்படுத்திடலாம். எண்ணிக் கொண்டே ஜன்னல் வழியாக சைலன்சர் துப்பாக்கியால் குறிபார்த்தான் பிரபாகர்.

ஜன்னல் வழியாக ஆண்டர்சன் காதலியின் தலை தெரிந்தது. துல்லியமாக குறிபார்த்து சுட்டான் பிரபாகர். கடைசி சமயத்தில் ஆண்டர்சனை செல்லமாக அடிக்க குனிந்த அவர் காதலி நகர குண்டு அவள் முதுகில் பாய்ந்தது. அவள் அலறிக்கொண்டே சாய்ந்தாள். சாம் ஆண்டர்சன் கத்தினார்.

“மேரி........................”


***************************************************************

ஏஞ்சலினா தன் கையிலிருந்த முகவரியை இன்னொரு முறை பார்த்து கொண்டாள். சே இங்க ராம் தன்னோட ஃபிரண்டு வீடு இருக்குன்னு ஒரு தடவை சொன்னாரில்ல! மேரி மேடம் வீடு கூட பக்கத்திலதான் இருக்குன்னார். ஆனா எதையும் ஒழுங்கா கேட்டு வைச்சுக்கவே இல்ல! சே!

தன்னைதானே திட்டி கொண்டாள். ராம் இந்நேரம் மேரி வீட்டுக்கு போயிருப்பாரா? நம்மை அங்கே பார்த்தா என்ன சொல்வார் என பல எண்ணங்களோடு மேரியின் வீட்டை தேடிக் கொண்டு போனாள் ஏஞ்சலினா.

***************************************************************

மேரியின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அருண்பிரசாத்தின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்து பேசினான்.

“சார் சொல்லுங்க சார்” “யாரு, என் பிரண்டா என் கூடத்தான் இருக்கான்” “ஓ அப்படியா சார் ரொம்ப சந்தோசம் சார்” “எப்படியோ நல்லபடியா முடிஞ்சா சரி! ரொம்ப நன்றி சார்” “நான் இப்ப மேரி மேடம் வீட்டு போய்ட்டு அங்க வந்துடுறேன் சார்” போனை வைத்து விட்டு சந்தோசமாக ராமிடம் பேசினான் அருண்.

“டேய் ராம் எங்க எடிட்டர் பேசினார் கமிஷ்னர் நம்ம சொன்னதை நம்பிட்டாராம் உடனே பிரசிடண்டுக்கு தகவல் கொடுத்து அவர் செக்யூரிடியை அதிகப்படுத்த போறாராம். பிஎஸ்வி, எஸ்.கே மேல நடவடிக்கையும் எடுக்கறேன்னு சொல்லியிருக்காராம். எதுக்கும் உன்னையும் ஏஞ்சலினாவையும் பார்க்க வரச் சொன்னார். நீங்க இரண்டு பேரும் நாளைக்கு அவரை போய் பாருங்க”

“ரொம்ப சந்தோசம் எப்படியோ அருண் எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி. அப்போ இப்ப நாம அந்த போலீஸ பார்க்க வேண்டியதில்லைல! அப்ப நான் இப்படியே மேரி மேடம் வீட்டு வேலைக்கு போறேன்.”

“சரிடா. நானும் வரேன் அவங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு!  அப்படியே அந்த போலீஸ் போன் பண்ணா வேற ஏதாவது காரணம் சொல்லிக்கலாம்”

”ரொம்ப நன்றிடா” ”நமக்குள்ள நன்றி எதுக்குடா!” அருணும் ராமும் சந்தோசத்துடன் மேரி வீட்டிற்கு சென்றார்கள்.

***************************************************************

பிஎஸ்வி ஜீப்பிலிருந்து இறங்கினார். மேரி வீட்டின் கதவை தட்டாமலேயே உள்ளே நுழைந்தார். அதேசமயம்....


பிரபாகர் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. ஆண்டர்சன் மேரிக்கு அடிப்பட்டிருப்பதை கண்டு அவளை யார் சுட்டார்கள் என பார்க்க வெளியே வந்தார். ஆனால் பிரபாகரின் தாக்குதலிலிருந்து விலகி தப்பினார். பிரபாகர்-ஆண்டர்சனுக்கு இடையே பெரும்போராட்டம் நடந்ததில் இருவரும் படிக்கட்டில் உருண்டு விழுந்தனர். போராட்டத்தில் பிரபாகருக்கு பலமாக கால்களில் காயம்பட்ட போதும் சாமார்த்தியமாக ஆண்டர்சனை அடித்து மயக்கமாக்கினான். திட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு எழுந்தபோது எதிரே துப்பாக்கியுடன் நின்றார் பிஎஸ்வி.

”பிரபாகர், என்கிட்டேயே நீயும் ஜெயந்தும் டபுள்கேம் ஆடுறீங்களா? நம்ம திட்டத்தின் தொடர்ச்சியா உன்னையும் ஜெயந்தையும் சேர்த்து முடிச்சிட வேண்டியதுதான்.”
 

பிரபாகர் தன் திட்டம் வெளிப்பட்டதையும், தான் மரண விளிம்பின் உச்சியில் இருப்பதையும் உணர்ந்து, எழுந்திருக்கவும் முடியாமல் பயத்தில் உறைந்தான்.

***************************************************************
 
செல்வா தன்னை துரத்திக் கொண்டிருந்த நாகா, யோகேஷிடமிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தான். எங்கே செல்வதென தெரியாமல் ஓடி வந்த அவன் முன் ஒரு ஒற்றை வீடு இருந்தது. அவசரமாக அதன் பின்பக்கம் ஓடினான். அப்போது..........

ஜெயந்த் சண்டையில் சோர்ந்து போயிருந்தான். ஜானிடம் ஆயுதம் எதுவுமில்லாத போதும் அவன் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. தன் துப்பாக்கியை பிரோயோகிக்க முடிவெடுத்து துப்பாக்கியால் ஜானை சுட்டான். ஜான் மயிரிழையில் தப்பிக்க குண்டு செல்வாவை துரத்தி வந்த நாகாவின் மேல் பாய்ந்தது. இவன் யார் குறுக்கே என எண்ணிக்கொண்டே இம்முறை மிகச்சரியாக ஜானை சுட்டான். ஜானில் இடுப்பில்  குண்டு பாய்ந்தது. ஜான் வீழ்ந்தான்.

***************************************************************

வீட்டின் பின்பக்கமாக நுழைந்த செல்வாவை துரத்தி பிடித்தான் யோகேஷ். யோகேஷ் நகைப்பெட்டியை பறிக்க முயன்றான் இருவருக்குள்ளும் சண்டை பலமானபோது...

அருகிலிருந்த அறையில் இருந்த பிஎஸ்வி சத்தம் கேட்டு வாசல் பக்கம் வந்தார். அதேசமயம் பிரபாகர் உயிர் பயத்தால் நகர்ந்து கொண்டே அருகிலிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை தாழ் போட்டுக் கொண்டான். பிஎஸ்வி வாசலருகே சண்டைபோட்டு உருண்டு கொண்டிருந்த செல்வாவையும் யோகேஷையும் கவனித்தார். அவர்களை எளிதாக மடக்கினார். அவர்களை வீழ்த்தி போட்டிருந்த சட்டைகளால் கட்டி போட்டு முடித்த சமயத்தில்..........


ஜெயந்த் உள்ளே நுழைந்தான். அவன் துப்பாக்கி முனையில் ஏஞ்சலினாவை நடத்தி வந்தான். அங்கே இருந்த பிஎஸ்வியை கண்டு ஆச்சரியமடைந்தான்.
”பாஸ் நீங்களா..? பிரபாகர் எங்கே? இவ இங்கே மேரியை பாக்க வந்தா போல, நான் கவனிச்சு பிடிச்சிட்டேன். நடுவில் எவனோ ஒருத்தன் குறுக்கில வந்து அவனை வேற சுட வேண்டியதா போச்சு! ஆனா ஜானை விடவில்லை! அவனையும் சுட்டுட்டேன். ஆனா இரண்டு பேரும் இன்னும் சாகலை அதுக்குள்ளே நம்ம திட்டத்திட்ட முடிச்சிடலாம்! ஆமா, நீங்க எங்க இங்க?”

பேசிய ஜெயந்தை பார்த்து புன்னகைத்த பிஎஸ்வி ”கூடுதலா உன்னையும் பிரபாகரையும் முடிக்க வேண்டியது இருக்கே ஜெயந்த்! அதான் நான் வந்தேன்!”

“பாஸ்......”

துப்பாக்கியால் ஜெயந்தை குறிபார்த்துக் கொண்டே, “ப்ளடி ஷிட்! என்னையே பிளாக்மெய்ல் பண்ண நினைக்கிறீங்களா உங்களை விட மாட்டேன்.”

”பாஸ் என்னை மன்னிச்சிருங்க எல்லா திட்டமும் பிரபாகர்தான் பண்ணான். நான் ஏஞ்சலினா மட்டுதான் வேணும்னு நினைச்சேன் சாரி பாஸ் சாரி...”

 ”இதை என்னை நம்ப சொல்றியா? பிரபாகரை  இந்நேரம் முடிச்சிருப்பேன், இந்த மடப்பசங்க வேற வந்துட்டாங்க. யார்டா நீங்க, எதுக்கு இங்க வந்தீங்க”

யோகேஷ் “அது புதையல்.. எங்களுக்கு வேணும்” என உளறினான். செல்வாவும் பயத்துடன் ”அது ஒரு பழங்காலத்து புதையல் அதை எடுத்து வரப்ப இவங்க என்னை துரத்திகிட்டு....”

“புதையலா???” ஆச்சரியத்துடன் நகைப்பெட்டியை திறந்தார் பிஎஸ்வி. உள்ளே பழங்காலத்து நகைகள்! “அட! கொல்ல வந்த இடத்தில புதையலா?”

“பாஸ் என்னை மன்னிச்சிருங்க பிரபாகர்தான் எல்லாத்துக்கும் காரணம். எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு எதுவும் வேண்டாம் இந்த புதையல் எல்லாமே உங்களுக்குதான். நீங்க இந்த கொலைக்காக தரேன்னு சொன்ன பணம் கூட வேண்டாம். ஏஞ்சலினா மட்டும் தாங்க.”
“நாளைக்கு அவகிட்ட சொத்துல கையெழுத்து வாங்கிட்டு அவளை விக்கத்தானே போறீங்க என்கிட்ட கொடுத்திடுங்க. நம்ம ரகசியமும் போகாது ப்ளீஸ்” கெஞ்சினான் ஜெயந்த்.

யோசித்த பிஎஸ்வி “உன்னை நம்பலாமா?”

”நிச்சயமா நம்பலாம் எனக்கு எதுவும் வேண்டாம். ஐ நீட் ஏஞ்சலினா.. ஏஞ்சலினா ஒன்லி!!!”

நடப்பதையெல்லாம் மிகுந்த அதிர்ச்சியுடன் எதுவும் பேசமுடியாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சலினா. ராம் நீ எங்கே? இப்ப இங்க வந்துராதே! உனக்கும் ஆபத்து! என எண்ணிக் கொண்டிந்தாள்.

யோசித்து பிஎஸ்வி “உன் டீலுக்கு ஒத்துக்குறேன் ஜெயந்த்” என்று சொன்ன போது கதவு தட்டப்பட்டது.


***************************************************************

“மேடம்.. மேரி மேடம். நான் ராம் வந்துருக்கேன்! மேடம்... ”

கதவுக்கு வெளியே ராமும் அருண்பிரசாத்தும் நின்றிருந்தனர். கதவை திறந்தார் பிஎஸ்வி. அவரை அங்கே எதிர்பார்க்காத ராம் “சார் நீங்க இங்க எப்படி...”

பதில் சொல்லாது சைகையால் உள்ளே வரச் சொன்ன பிஎஸ்வியின் கண்களில் இருந்த கடுமையை கண்டு, அவரை பின் தொடர்ந்தான் ராம். அங்கே இருவர் கட்டி போடப்பட்டிருக்க, ஒருவன் துப்பாக்கி முனையில் ஏஞ்சலினாவை நிறுத்தியிருந்ததை பார்த்தார்கள் ராமும் அருணும்.

ராமை பார்த்தவுடன் ஏஞ்சலினா, “ராம்” என கூப்பிட்டாள். “உனக்கு இவனை தெரியுமா” என கேட்ட ஜெயந்திடம் “அவன் இவள் காதலன்” என்றார் பிஎஸ்வி.


ராமுக்கு எல்லாமே அதிர்ச்சியாக இருக்க, ஏஞ்சலினாவை நோக்கி “ஏஞ்சலினா” என கத்திக் கொண்டே அவன் நகர்ந்தபோது.......


அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான் அருண்பிரசாத்.............
 

“அடிங்! என்னா காதல் பொங்குதோ! ஓடுறே! உன்னை எதுக்கு கூட்டிட்டு வந்தா? நீ லவ் பண்ணுறியா?”

“அருண் நீயா ஏண்டா... ”

“ஹா... ஹா... ஹா! என்னடா பழகுன நண்பனே இப்ப இப்படி பண்ணுறானேன்னு பாக்குறியா? லூசே! இந்த கொலை திட்டத்தில் நீயும் ஒரு விக்டிம்டா! உனக்கு புரியலைல? சொல்றேன் கேளு”

“நான் ரிப்போர்டர் வேலை கூட இன்னோர் வேலையும் பார்த்துகிட்டு இருந்தேன்! அதான் பெரிய மனிதர்களின் அந்தரங்கங்களை தெரிஞ்சிகிட்டு பிளாக்மெய்ல் செஞ்சு பணம்பறிக்கிறது! அப்படி ஒரு தடவை ஆண்டர்சனை பின் தொடர்ந்தப்ப அவர் கள்ளக்காதல் விஷயம் தெரிஞ்சிச்சு! அவர் பிரசிடண்ட்றதுனால இதை அவர்கிட்ட பிளாக்மெய்ல் பண்ண ஒரு தயக்கம். அதான் எதிர்க்கட்சி தலைவர் எஸ்கேவை சந்திச்சேன். விஷயத்தை சொன்னேன் அவர் பெரிய திட்டம் போட்டார். எனக்கு பணமும் தந்தார். திட்டம் என்னான்னா சாம் ஆண்டர்சன் கள்ளக்காதல் உலகத்துக்கு தெரியிறப்ப அவர் உயிரோட இருக்க கூடாது. ஆனா அது கொலையாவும் இருக்க கூடாது. அதனால மேரிக்கு வேறொருத்தன் கூட பழக்கம் இருக்கிறது  தெரிஞ்சு ஆத்திரத்தில் அவனையும் மேரியையும் கொன்னுட்டு சாம் ஆண்டர்சன் தற்கொலை பண்ணிக்கிட்டார் அப்படின்னு மீடியாவும் அரசாங்கமும் நினைக்கிற மாதிரி இருக்கணும்கிறதுதான் திட்டம். அந்த இன்னொருத்தன், கள்ளக்காதலன் தாண்டா நீ!!!!” சிரித்தான் அருண்பிரசாத்.

“உன்னை இங்க மேரிகிட்ட சேர்த்தது அதுக்காகத்தான். இல்லன்னா உன்னை மாதிரி கேணையனையெல்லாம் இங்க வெளிநாட்டில் வேலைக்கு சேர்த்து விடனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? இன்னைக்கு இங்க வேலை அப்படின்னு வரச் சொன்னது என் ஏற்பாடுதான். இந்த பிஎஸ்வியும் அவர் ஆளுங்களும் மீதி பேரை முடிச்சிருவாங்க. என்ன பிஎஸ்வி நான் சொன்ன மாதிரி இவனை இங்க கூட்டிட்டு வந்துட்டேன் பார்த்தீங்களா நீங்கதான்  சொன்ன வேலை இன்னும் முடிக்கலை!”

ராம் அதிர்ச்சியுடன் பார்ப்பதை கண்ட அருண் பேசுவதை தொடர்ந்தான். “என்ன ராம் அப்படி பாக்குற! எடிட்டர்கிட்ட பேசுனேன்னா, ஹா ஹா அது பொய். நான் யார்கிட்டவும் எதுவும் சொல்லலை!!! இவரும் எஸ்கேவும் பேசுனதை கேட்டுட்டு நீங்க என்கிட்டேயே வந்து சொன்னீங்க நானும் உங்களை போலீஸ்க்கு போக விடாம பார்த்துகிட்டேன், பிஎஸ்விகிட்டயும் சொன்னேன். நடுவில் நீ எவனோ ஒருத்தன் சொன்னான்னு போலீஸ்கிட்ட போக பார்த்தே. உன்னை தடுத்து இங்க கூட்டி வரத்தான் நான் உன் கூடவே வந்தேன்! நான் போன் பேசுனது கூட பிஎஸ்வி கிட்டதான் உன்னை இங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லத்தாண்டா முட்டாள்! அங்க எதுவோ சொதப்ப இவளும் இங்க உன்னை பார்க்க வந்திட்டா போல”

ராம் அதிர்ச்சி கோபத்துடன்  அருண்பிரசாத்தை பார்த்தான்.

“ஹேய், எங்களை மீறி நீ எதுவும் பண்ண முடியாதுடா! என்ன, பிஎஸ்வி நீங்க மேரியை முடிச்சுட்டீங்களா”

“ஷி இஸ் ஆன் த வே டு ஹெவன்... நெக்ஸ்ட் இவன்தான்”

“ஏஞ்சலினா காதலனை என் கையாலையே கொல்றேன்” என சொல்லிகொண்டே துப்பாக்கியை குறிபார்த்தான் ஜெயந்த்.

“டுமீல்! டூமீல்!!!”

ஜெயந்த் கையிலிருந்த துப்பாக்கி எகிறி விழுந்தது. வாசலருகே பாண்டியனும் சதீஷும் நின்றிருந்தனர்.

“எல்லோரும் துப்பாக்கியை கீழே போடுங்க.. இந்த வீட்டை சுத்தி போலீஸ் ஸ்க்வாட் இருக்கு. யாரும் தப்பிக்க முடியாது.

போலீஸ் ஸ்குவாட் வீட்டில் நுழைந்தது. பாண்டியன் சதீஷ்க்கு பின்னால் மாதவன், பிரசாத், ரமேஷ் நின்றிருக்க.. மங்குனியும் பாபுவும் கையில் விலங்குடன் இருந்தனர்.



*********************************** முற்றும் ***********************************

பின் கதை:


அடுத்து வந்த சில நாட்களில் சில செய்திகள் மாற்றி மாற்றி வந்து கொண்டிருந்தன.......
 

“சாம் ஆண்டர்சன் கொலை முயற்சி! அவர் காதலியும் உதவியாளரும் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர்”

“சாம் ஆண்டர்சனை கொலை செய்ய முயன்றதற்காக எதிர்கட்சி தலைவர் எஸ்.கே, செக்யூரிட்டி ஆபிசர் பிஎஸ்வி, அவரின் உதவியாளர்கள் ஜெயந்த், பிரபாகர், ரிப்போர்ட்டர் அருண்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்”


“கள்ளக்காதல் அம்பலமானதால் ஆண்டர்சன் பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்தார். அரசியலுக்கும் முழுக்கு!”


”பழங்கால புதையலை சட்ட விரோதமாக அடைய முயற்சி செய்த புரொபசர் மங்குனி, செல்வா, பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புதையல் நகைகள் அரசு மியூசியத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது”


“நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான நாகா, யோகேஷ்க்கு 5 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்ரூவரான கூட்டாளி சௌந்தர்க்கு குறைந்தபட்ச தண்டனை கிடைத்தது.”


“போதை மருந்து குற்றவாளிகளை பிடித்ததற்காகவும், கொலை முயற்சியை தடுத்ததற்காகவும் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் சதீஷுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைத்தது.”


***************************************************

”பிரசாத் நாம நமக்கு சொந்தமில்லாத பொருள் மேல ஆசைப்பட்டா, என்ன நடக்கும்னு பார்த்தேயில்ல! ஏதோ அன்னைக்கு யாரையோ தேடி வந்த போலீஸ்க்கு நம்ம குரல் கேட்டு காப்பாத்துனாங்க. இல்லன்னா எல்லோரும் என்ன ஆகியிருப்போமோ!”

“புரிஞ்சிச்சு தாத்தா, நம்ம இனத்தின் கொள்கைபடி நானும் நேர்மையானவனா வாழ்வேன். நான் இனிமே அளவுக்கு மீறி ஆசைப்பட மாட்டேன். இனி கிடைக்கிறதை வச்சு சந்தோசமா வாழ்வோம்”


அங்கே வந்தார் ரமேஷ்.
  “பிரசாத்”

“சார் கிளம்பறீங்களா......!”


“ஆமா பிரசாத். எங்க பரம்பரைக்கு ஐஸ்வர்யம் கிடைக்கும்னு நினைச்சு தேடி வந்த புதையலை, வேண்டாம்னு கிளம்பறேன். செல்வம் மேல் அதிக ஆசைப்படுறதினால என்ன நடக்கும்னு எங்க மூதாதையர்கள் வாழ்க்கையிலும் இங்கு நடந்த நிகழ்வுகளிலும் தெரிஞ்சுகிட்டேன். சந்தோசம் பொருள்களால் வரதில்ல, நல்ல மனிதர்களால வருதுன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்.”


“அந்த புதையல் எங்க அரச பரம்பரைக்கு சொந்தம்னு விளக்கமா அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டிருக்கேன். ஒருவேளை அது கிடைச்சாலும் இங்க இருக்கிற ஏழை மக்களுக்கு பயன்படுற மாதிரி அதை பயன்படுத்துவேன். எனக்கு இங்க கிடைச்ச புதையல் உங்களை மாதிரி உறவுகள்தான்!”


நெகிழ்ச்சியுடன் மாதவனும் பிரசாத்தும் ரமேஷை வழியனுப்பினர்.


“இனி வருசாவருசம் இங்க வருவேன் நீதான் பிரசாத் எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டு போகனும் ஒரு டூரிஸ்ட் கைடா இல்ல ஒரு சகோதரனா!”



***************************************************

அதே பழைய லைட் ஹவுஸ்.

”ராம் என்னென்னவோ நடந்துபோச்சு. இப்ப எனக்குன்னு யாருமில்ல........இப்ப எனக்கு எனக்கு இருக்கிற ஒரே உறவு நீங்க மட்டும்தான்...”


“ஏஞ்சலினா அழாதே... இங்கே பார், என்னை பார். எனக்கும் நீதானே இருக்கே. அழாதே.........சரி ரொம்ப நாளா நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற அன்பை  வார்த்தைகளால நானும் சொல்லலை..நீயும் சொல்லவே இல்லை. இப்ப சொல்றியா?”


ஏஞ்சலினா வெட்கத்துடன் அமைதியாக தலைகுனிந்தாள்.


ராம் அவளருகே நெருங்கி அவள் கைகளை பற்றி மெல்ல முத்தமிட்டான். 


“ஏஞ்சல், ஐ லவ் யூ”

“ஐ டூ லவ் யூ ராம்”


--- THE END ---


--------------------------------------------------------------------------------------------------------

இத்துடன் கதை முடிகிறது.... ஆனா இங்கிலீஷ் படம் மாதிரி, படக் கடைசி ட்விஸ்ட் வேணுங்கிறவங்களுக்காக...
 
அந்த மியூசியம் நள்ளிரவில் அமைதியாக நின்று கொண்டிருந்தது. இருட்டில் குதித்தான் அவன். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த மொட்டைத் தலைக்காரன் கன்னத் தழும்பை கீறிக் கொண்டே மியூசத்தினுள் நுழைந்தான்..................................

 


இதையும் கதைன்னு மதிச்சு இத்தனை நாளா பொறுமையா படிச்ச உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன் எஸ்.கே



Monday, February 21, 2011

BLACK RIVER - அத்தியாயம் ஆறு

நண்பர்களே தொடர்ந்து பொறுமையாக படித்து வருவதற்கு மிக்க நன்றி!



அத்தியாயம் ஆறு


ராம் சதீஷை பார்க்க ரெஸ்டாரண்டை நோக்கி நடந்தான். திடீரென அவனுக்கு ஒரு எண்ணம் வந்தது. அருணிடம் இதை சொன்னால் என்ன? அவனுக்கும் அவன் எடிட்டருக்கும் பாவம் தொல்லை தந்து விட்டேன்! அருண்பிரசாத்துக்கு ராம் ஃபோன் செய்தான்.

“அருண் நான் ராம் பேசறண்டா”

“சொல்லுடா! எடிட்டர் இப்பத்தான் பேசுனார், கமிஷ்னர்  கிட்ட பேசப் போயிருக்கார். அவர் மதியம் என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு சொல்றாராம். நீ மதியம் மேல வந்துடு!”

”இல்லடா இங்க என் ஃபிரண்டு ஒருத்தர் மூலமா ஒரு போலீஸை பார்க்க போறேன், அவர்கிட்ட சொல்லலாம்னு”

”என்னடா சொல்றே? இப்ப எதுக்கு திடீர்னு,  சரி அவர் நல்லவரா?”

“இல்லடா அவர் நல்லவர்தானாம் சரி நீயும் கூட வந்தா நல்லாதான் இருக்கும்”

“அப்படியா சரி நீ எங்க இருக்க” “ஓ அந்த ரெஸ்டாரண்ட் பக்கமாவா சரி நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க வந்துடுறேன் நாம இரண்டு பேரும் சேர்ந்து போய் அவரை பார்ப்போம் நான் என் எடிட்டர் சொன்னதையும் சொன்னா நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும்”

ராம் ஃபோனை வைத்து விட்டு அருணுக்காக காத்திருக்க தொடங்கினான்.

Friday, February 18, 2011

BLACK RIVER - அத்தியாயம் ஐந்து


அத்தியாயம் ஐந்து

அன்று நிகழப்போகும் நிகழ்வுகளைப் பற்றி அறியாமல் அமைதியாக விடிந்தது அந்த நாள்.......

ரமேஷ் நேற்று நடந்த சம்பவங்களை எண்ணினார். என்ன நடந்தபோதும் தான் எண்ணி வந்த வேலையை செய்யாமல் போகக் கூடாது என்ற மன உறுதி அவரிடத்தில் இருந்தது!

ரமேஷ் கேங்குலா நாட்டின் கடைசி வாரிசு. கிட்டதட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன் கேங்குலா நாட்டு மன்னரின் தாய் வீடான பிளாக் ரிவர் நாடு அளித்த பரிசுகள் கப்பலில் வந்து கொண்டிருந்த போது கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. அவர்கள் தாய்வீட்டின் பரிசு கொள்ளயடிக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு ஆபத்து என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால் பரிசை எப்பாடு பட்டும் காப்பாற்ற முடியவில்லை. இளவரசர் இறந்தார். அது மட்டுமில்லாமல் நாளடைவில் கேங்குலா நாட்டு சாம்ராஜ்யமும் வீழ்ந்தது. அவர்களின் ராஜ குடும்பம் காணாமல் போனது. மீதம் இருந்த சில வாரிசுகளும் சாதாரண மக்களாய் வாழ ஆரம்பித்தனர். காலங்கள் மாறினாலும் அவர்கள் மனதில் அந்த நம்பிக்கை இன்னும் மாறாமல் இருந்தது.

Wednesday, February 16, 2011

BLACK RIVER - அத்தியாயம் நான்கு


அத்தியாயம் நான்கு

”சார் இரண்டாவதா எடுத்த பெட்டியில் இருந்த இரண்டு படங்களில், ஒன்னு ஒரு சந்தோஷமான குழந்தை படம், இன்னொன்னு ஒரு கோழி தன்னோட குஞ்சை பாதுகாப்பா அணைச்சுக்குற மாதிரியான படம்!”

“அது மட்டுமில்லாம அதுகளுக்கு பின்னாடி A, A அப்படிங்கிற எழுத்துக்கள்தான் இருந்தது.”

“சார் அது என்ன வார்த்தையா இருக்கும்?”

“சார் அந்த படங்கள் எதை சொல்லுது?”

பாபுவும் செல்வாவும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் மங்குனி ஏதோ யோசனையிலிருந்தார்.

“சார் நாங்க கேட்டுகிட்டே இருக்கோம் நீங்க அமைதியா இருக்கீங்க?”

“இதோ பாருங்க, எல்லா பெட்டிகளும் கிடைக்கிற வரைக்கும் நம்மால எதையும் கண்டு பிடிக்க முடியாது. அதனால மீதி இருக்கிற 2 பெட்டிகளை முதல்ல எடுப்போம் அப்புறம் இதையெல்லாம் யோசிப்போம். இப்போ நாம அடுத்த பெட்டி இருக்கிற இடத்துக்கு போவோம்.”

“சார் அடுத்த பெட்டி எங்கே இருக்கும்னு கண்டு பிடிச்சுட்டீங்களா?”

“ஆமா 2who have male and female living here - இது சிவனை குறிக்கிறது நாமை இங்கே இருக்கிற அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு போகணும்”

Monday, February 14, 2011

BLACK RIVER - அத்தியாயம் மூன்று

தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!


அத்தியாயம் - 3

ராம் ஒரு உற்சாகத்துடன் ஏஞ்சலினா வீட்டை அடைந்தான். அவள் அவனுக்காகவே புன்னகை ஏந்தி காத்திருந்தாள். ராம் நாம் அங்கே போய்டுவோம் என அவள் மாமா கட்டியிருந்த அந்த தனி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.


அவள் வெகுநேரம் மவுனமாக நடந்தாள். பின் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். கதவு தானா பூட்டிக் கொண்டது. ராம் பயந்தான். ஏஞ்சலினா தன்னிடம் ஒரு சாவி இருப்பதாகவும் அதனால் போகும்போது திறந்து கொள்ளலாம் என சொன்னாள். ராம் சந்தோசம், பயம் இவை கலந்த மனநிலையில் இருந்தான்.

“ராம் ”

”என்ன ஏஞ்சலினா”
“இந்த வீடு எனக்கு சந்தோசம் துக்கம் இரண்டையும் கொடுத்த வீடு!”


“என்ன சொல்ற”

“ஆமாம் ராம் என் சின்ன வயசிலேயே என் அம்மா அப்பா இறந்துட்டாங்க. என் மாமா என் அம்மா கூடப் பிறந்தவர். திருமணமே செஞ்சுக்கலை. என்னை வளர்த்தார்”
“அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டானவர். பிஎஸ்வின்னு சொன்னா எல்லோரும் நடுங்குற அளவுக்கு பயங்கரமான போலீஸா இருந்தவர். அப்புறம் கொஞ்ச நாள்ல அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு சொந்தமா செக்யூரிடி நிறுவனம் தொடங்கினார். எதுக்குன்னு தெரியலை.”

“பெரும்பாலும் எனக்கு எல்லாமே செஞ்சார். ஆனா ரொம்ப கட்டுப்பாடு அதிகம். எல்லாம் என் மேலே இருக்கிற அன்பினால செய்யறார்னு நினைச்சேன் ஆனா அது என் பேர்ல இருக்கிற சொத்துக்காகத்தான்னு பின்னாடி புரிஞ்சது. இன்னும் இரண்டு நாளில் என் பிறந்தநாள் வரப்போகுது. அப்ப எனக்கு 21 வயசு. எனக்கு 21 வயது முடிஞ்சவுடன் என் சொத்தை யாருக்கு வேணா எழுதலாம்கிறது என் அப்பா எழுதி வச்ச உயில் அதை அவரு பேருக்கு மாற்றும் வரைக்கும்தான் நான் நல்லா இருக்க முடியும்....”

சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள் ஏஞ்சலினா.

Saturday, February 12, 2011

BLACK RIVER - அத்தியாயம் இரண்டு

பாகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருக்குன்னு நினைக்காதீங்க சின்னதா போட்டா சுவாரசியமா இருக்காது. மேலும் கதையும் நகராது. அதான். மன்னித்துக் கொள்ளுங்கள்!


அத்தியாயம் இரண்டு


மொரிஷியஸ்.

மங்குனி, செல்வா, பாபு மூவரும் உட்கார்ந்திருந்தனர்.

”எப்படி சார் இங்கே புதையல் இருக்குன்னு கன்ஃபார்மா சொல்றீங்க?”

”சொல்றேன் அதுக்கு முன்னால் நாம மூணு பேரும் 2 வருஷத்துக்கு முன்னால் இந்த மொரிஷியசில் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம் நினைவிருக்கா?”

“ஆமாம் சார் பழங்கால கடற்கொள்ளையர்களின் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி அது.”

“அதில் ஒரு முக்கியமான ஆனால் நீங்கள் நம்பாத விஷயம் ஞாபகம் இருக்கா?”

“ம்... இருக்கு சார்! கடற்கொள்ளையர்கள் பற்றி ஆராய்ச்சியின் போது கிடைத்த சில குறிப்புகளின்படி சுமார் கிபி 1750ஆம் வாக்கில் கேங்குலா நாட்டை சேர்ந்த ஒரு கப்பலை கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்கள். அக்கப்பலில் கேங்குலா நாடு மிகவும் போற்றும், மதிப்பு மிக்க சில பொருட்கள் இருந்துள்ளன. அதை காப்பாற்ற அந்த நாட்டு வீரர்கள் போராடினர் அந்த மதிப்பு மிக்க பொருட்கள் அதாவது புதையலை எங்கேயோ பதுக்கி விட்டு அதன் குறிப்பை கொண்டு செல்ல முயற்சித்து அவர்கள் தோற்றுவிட்டார்கள். ”

“ஆமாம் சரிதான் ஆனால் அந்த புதையல் இன்னும் இங்கேதான் உள்ளது என நான் சொன்னதை நீங்க இரண்டு பேரும் நம்பலை.”

“ஆமாம் சார் ஒண்ணு அந்த குறிப்பு கொள்ளையர்கள் கிட்ட கிடைச்சிருக்கணும், இல்லை கேங்குலா நாட்டை சேர்ந்தவங்க கிட்டேயே கிடைச்சிருக்கணும். எப்படியிருந்தாலும் புதையல் இங்க இருக்காது சார்!”

மங்குனி புன்னகைத்தார். “அப்படி கிடைச்சிருந்த அந்த குறிப்புகள் எனக்கு எப்படி கிடைக்கும்?”

Thursday, February 10, 2011

BLACK RIVER - அத்தியாயம் ஒன்று

 நண்பர்களே சினிமாட்டிக்காக ஒரு சிறு திரில்லர் கதை முயற்சி. ஏழு பாகம் கொண்ட கதை. சில நம்ப முடியாத விஷயங்கள் வரலாம். லாஜிக் பார்க்காம படிங்க! நம் வலைப்பூ நண்பர்களின் பெயர்களையே கதாபாத்திரங்களுக்கு வைத்துள்ளேன். படித்து கருத்து கூறுங்கள்! நன்றி!

முன் கதை:

கிபி 1758. இந்தியப் பெருங்கடல்.
அந்த நடுக்கடலில் ஒரு கப்பல் அபாயகரமான சப்தங்களுடன் வீற்றிருந்தது. ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த கப்பலில் மரண ஓலமும் வாள் வீச்சின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. கேங்குலா நாட்டை சேர்ந்த அக்கப்பலை கடல் கொள்ளையர்கள் முற்றுகையிட்டிருந்தனர். கொள்ளையர்களிடையே ஒரு சிறு சலசலப்பு. அவர்கள் தேடிவந்த முக்கியமான பெட்டியை காணவில்லை! ஒரு கொள்ளையன் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு படகை கண்டான்.....

----------------------------

படகு அத்தீவை அடைந்தது. அதிலிருந்து இறங்கிய அவ்வீரனின் நெஞ்சில் கேங்குலா நாட்டு ராஜமுத்திரை இருந்தது. அவன் சிறிது யோசனை செய்தான். பிறகு வேகமாக பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடினான்.
----------------------------
இன்னொரு படகும் அத்தீவை அடைந்தது அதிலிருந்து சில கொள்ளையர்கள் இறங்கினர்.

”அந்த வீரன் இங்கே தானே  வந்தான்?” “ஆம் தலைவா” “தேடுங்கள் அவனை விடாதீர்கள். அவன் கையில் இருக்கும் பெட்டி என்னிடம் வர வேண்டும்!”

கொள்ளையர்கள் அவ்வீரனை தேடி தீவில் ஓடினர்.
----------------------------

தீவின் மற்றொரு பக்கம் கேங்குலா நாட்டை சேர்ந்த வேறு சில வீரர்களும் வந்திறங்கினர்.

”இளவரசர் இங்கேதானே வந்தார்” ”ஆமாம்” “ஜாக்கிரதை கொள்ளையர் கூட்டமும் இங்கு வந்துள்ளது அவர்கள் கையில் இளவரசர் சிக்கும் முன் நாம் அவரை காப்பாற்றியாக வேண்டும்.”

----------------------------

”இளவரசே, தாங்கள் இங்கிருக்கீறீர்களா”

“வீரனே நம் நாட்டின் பொக்கிஷத்தை நம்பிக்கை மிகுந்த நபரிடம் ஒப்படைத்துள்ளேன் . அவ்விடம் பற்றிய குறிப்புகள் என்னிடம் உள்ளன. இதை அரசரிடம் சேர்த்து விடு. நிறங்கள் என்பதை நினைவில் வைக்கச் சொல். என்னைப் பற்றிக் கவலைப்படாதே! செல் சீக்கிரம் செல்”

கொள்ளை கூட்டம் இளவரசை கண்டு ஓடி வந்தது. வீரன் அவனிடமிருந்து ஓடினான். திரும்பி பார்த்தான் அங்கே இளவரசர் அக்கொள்ளையர்களால் வெட்டப்படுவது தெரிந்தது. கண்களில் கண்ணீருடன் அந்த மலைத் தொடரை நோக்கி தன் சகாக்களை நோக்கி அவன் ஓடினான்.

அப்போது ஒரு கொள்ளையன் விட்ட அம்பு அந்த வீரனை துளைத்தது. அவன் கையில் இருந்த அந்த குறிப்புகள் மலையின் மறுபக்கம் விழுந்து இருளில் மறைந்தது.

அவனை நோக்கி ஓடி வந்த சகாக்களிடம் “நிறங்கள்” என்ற ஒற்றை வார்த்தையை கூறி விட்டு இறந்து போனான் அவன்.


------------------------------------------------------------------------------------------------------------------


அத்தியாயம் ஒன்று

Monday, January 10, 2011

திரும்பி பார்க்கிறேன்............!

அத்தியாயம்  ஒன்று


கிபி. 1979. ஆகஸ்ட் 27.


அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான். மனம் ஏனோ அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தது.


அரச குடும்பத்தில்தான் பிறந்தேன் நான். பல போர்களில் பங்கு கொண்டு நாட்டிற்காக போராடி பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன். பல பெருமை பெற்றேன். இதோ இப்போது எனக்கு 79 வயது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன். பேரன் பேத்திகள் என வாழ்க்கையும் விரிவடைந்து மகிழ்ச்சியாக உள்ளது.


வெளியே நான் மகிழ்ச்சியாக இருந்தபோதும் உள்ளுக்குள் இத்தனை காலம் வாழ்ந்ததற்கான திருப்தி இல்லை. ஏன்????


என் எதிரே இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவர்கள் முகத்தோற்றத்திலிருந்து அவர்கள் இந்தியர்கள் என புரிந்துகொண்டேன். இந்தியா! எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று! இந்தியாவுடனான என் நினைவலைகளில் மூழ்கிப் போனேன்.


கிபி. 1947. இந்தியா.


கிளமண்ட் அட்லி என்னை இந்தியாவின் வைஸ்ராயாக நியமித்தார். 1948க்கு முன் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிற்கு நான் குடும்பத்துடன் குடியேறினேன். அந்த நாட்டின் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்து போயிருந்தது. அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக கையாண்ட அஹிம்சா முறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.


1947ல் போராட்டங்கள் அதிகமான காரணத்தால் மற்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கலந்து பேசி நான் சுதந்திரம் வழங்க முடிவெடுத்தேன். சில ஆட்சியாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் பிரிக்க வேண்டாம் என்றார்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியாளர் பிரிவினை வேண்டும் என்றார்கள். சில இந்திய தலைவர்களும் ஒப்புக்கொள்ள 1947, ஆகஸ்டு 15 இரவு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அந்த பிரிவினையை என் உள்மனம் தவறென சொன்னபோதும், என் வெளிமனம் சந்தோசப்பட்டது அப்போது. அதற்கு பிறகு இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மற்றும் முதல் கவர்னர் ஜெனரல் என்ற பெருமையோடு வெளிவந்தேன்.

மீண்டும் கிபி. 1979. ஆகஸ்ட் 27.

நினைவலைகளிலிருந்து வெளிவந்தேன். அந்த இந்திய சம்பவங்களுக்கு பின்னும் எத்தனையோ போர்கள், ஆட்சிகள், ஆக்கிரமிப்புகள்…. வாழ்க்கையில் அதனால் எத்தனையோ வெற்றிகளை நானும் என் நாடும் சம்பாதித்திருந்தது. அந்த போர்களினால் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருந்தபோதும் எத்தனையோ பேரின் கண்ணீர் இருந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது. இதனால் எத்தனை ஆபத்துக்களும் வந்து கொண்டுதான் உள்ளது. இதோ இந்த அயர்லாந்து பகுதிக்கு வருவதுக் கூட ஆபத்தான ஒன்றுதான் என எச்சரித்த போதும் மன அமைதிக்காக வருடந்தோறும் இந்தப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

என் எதிரே இருந்த அந்த சிறுவர்கள் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் கொஞ்சம் பெரிதாக இருந்த ஒரு இந்தியச் சிறுவன் அவர்களிடம் எதையோ சொன்னான். அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டார்கள். நான் என் அருகிலிருந்த மொழிபெயர்ப்பாளரிடம் அவன் என்ன சொன்னான் என கேட்டேன். அவர் கூறினார்.

“ஏன் இப்படி சண்டைப் போட்டுக் கொள்கிறீர்கள்? வாழ்க்கையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இரண்டு வழி உள்ளது. சண்டை மற்றும் அமைதி. சண்டையினால் கிடைக்கும் தீர்வு தற்காலிகமானது மேலும் பல இழப்புகளும் துன்பங்களும் ஏற்படும். ஆனால் அமைதியால் கிடைக்கும் தீர்வு நிரந்தரமானது. இழப்புகள் குறைவானது. ஒற்றுமை நம்மிடம் இருக்க வேண்டும். ஒரு விரலின் பலத்தை விட ஐந்து விரல்கள் சேரும்போது அதிக வலிமை கிடைக்கும்!”

இந்த சிறிய வயதில் அவனின் முதிர்ச்சியை கண்டு வியந்தேன். என் மனம் அமைதியில்லாமல் இருப்பதற்கு காரணம் நான் செய்த சண்டைகள். அதன் நினைவுகள் என்னை அலைகழித்துக் கொண்டே இருக்கின்றது. வாழ்வில் மீண்டும் பிறந்தால் நான் ஆட்சி செய்த ஆக்கிரமித்த நாடுகளுக்குள் ஒன்றி பிறந்து அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட வேண்டும். என் மனதில் உறுதியாக எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்த அந்த நேரத்தில்……

”டமால்!”

கிபி. 1979. ஆகஸ்ட் 28.

முக்கியச் செய்தி: ”மௌண்ட் பேட்டன் பிரபு அயர்லாந்து நாட்டின் முல்லாஹ்மோர் பகுதியில் படகில் சென்று கொண்டிருந்த போது அயர்லாந்து ராணுவப்படை வைத்த வெடிகுண்டு வெடித்து காலமானார் அவருடன் படகில் சென்ற அரச குடும்பத்தினர் உட்பட………”


அத்தியாயம் இரண்டு


கிபி. 2011. ஜனவரி 7.

மாலை நேரம். அந்த அறைக்குள் நுழைந்தேன். அந்த அறையின் அமானுஷ்யம் என்னை பயமுறுத்தியது. மனதிற்குள் கலக்கம் வந்தபோது வேலை நிறைவேண்டியிருந்ததால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு சென்றேன். எதிரே அவர் அமர்ந்திருந்தார்.

“வணக்கம் சார்”

அவர் அமைதியாக புன்னகைத்தார். உட்காரச் சொன்னார்.

“உங்களுக்குத்தான் உங்க பூர்வ ஜென்மத்தை பற்றி தெரிஞ்சிக்கனுமா?”

“ஆமா சார். எப்படி சார் அதை பண்ணுவீங்க? எதாவது ஆவியை கூப்பிடுவீங்களா?”

அவர் மீண்டும் புன்னகைத்தார்.

“இல்லை. உங்கள் வெளிமனதை நன்றாக உறங்க செய்து ஆழ்மனதை தட்டி எழுப்புவோம். ஆழ்மனதில் படிந்துள்ள பூர்வஜென்ம ஞாபகங்கள், மறக்காத நினைவுகள் உங்களுக்கு நினைவிற்கு வரும்.”

அவர் பதில் சொல்லிவிட்டு ஒரு படுக்கை போன்ற அமைப்பில் என்னை படுக்கச் சொன்னார். பின்னர் ஏதோ பயிற்கள் செய்தார். எனக்கு கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. சிறிது நேரம் எங்கோ இருப்பது போன்ற உணர்வு. பிறகு திடீரென பல நினைவுகள் தோன்றின….

“அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான்…………”

*************************


கண் விழித்தேன். வேறொரு உலகத்திலிருந்து வந்த உணர்வு எனக்கு ஏற்பட்டிருந்தது. போன ஜென்மத்தில் நான் மவுண்ட்பேட்டன் பிரபுவா?? என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு தெளிவிற்கு வந்தேன். போன ஜென்மத்தின் இறுதியில் எடுத்த முடிவின்படி அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் போராட வேண்டுமென்று.

அங்கிருந்து கிளம்பும்போது அந்த பயிற்சியாளர் கேட்டார்.

“எதற்காக நீங்கள் பூர்வஜென்மத்தை தெரிந்து விரும்பினீர்கள் என நான் தெரிந்துகொள்ளலாமா?”

“அது ஒன்றுமில்லை சார். என் வலையுலக நண்பர் அருண்பிரசாத் என்பவர் கடந்தகால நினைவுகளை பற்றி ஒரு தொடர்பதிவு எழுதச் சொன்னார் அதற்காகத்தான்”

- முற்றும் -

---------------------

பின்குறிப்பு 1:


சென்ற 2010 ஆரம்ப மாதங்கள் என் வேலைகள் சுறுசுறுப்பான காலகட்டம் அது. இருந்தபோதும் என் மனம் அமைதியின்றிதான் இருந்தது. மனதில் விரக்தியும் கவலைகளும் குடிகொண்டிருந்தன. மனதிற்கு மாற்றம் தேவைப்பட்டது. அப்போதுதான் வலைப்பூக்களில் மனதை திருப்பினேன். சிறிது நாட்களிலேயே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்க ஆசை வந்தது. இப்படி வலையுலகம் மூலம் நான் பெற்ற நண்பர்கள் பலர்.

ஹாலிவுட் பாலா, கீதப்பிரியன், ஜோதிஜி, கருந்தேள், நாஞ்சில் பிரதாப், கொழந்த, சு.மோகன், டெனிம், RNS, Phantom mohan, காகி, கனவுகளின் காதலன், இலுமினாட்டி, இராமசாமி கண்ணன், மரா என ஆரம்பகாலத்தில் வலைப்பூக்களில் கிடைத்த நண்பர்கள் இவர்கள்.

பின்னர் ஒரு கும்பலாக கும்மியடித்துக் கொண்டிருந்த இவர்களுடன் சேர எனக்கு மிகவும் ஆசையாகவும் தயக்கமாகவும் இருந்தது. எப்படியோ சேர்ந்து இன்று இவர்களுடன் நித்தம் பொழுது சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள்: அருண், தேவா, பாபு, டெரர், ரமேஷ், ராம்சாமி, வெங்கட், மங்குனி, பட்டாபட்டி, சௌந்தர், செல்வா, ஜெயந்த், பிரசாத், மாதவன், பிஎஸ்வி, தில்லுமுல்லு, நாகராஜசோழன், சமீர், வினோ

என பெரிய பட்டாளமே உள்ளது. இன்னும் பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, ஆர்கேசதிஷ், சிபி, ஜில்தண்ணி, குத்தாலத்தான் என நிறைய பேர். சுபத்ரா, கௌசல்யா போன்ற சகோதரிகளையும் இந்த வலைப்பூ உலகத்தில் பெற்றுள்ளேன்.


இது தவிர இன்னும் ஏராளமான பேர் என் நண்பர்கள் என சொல்ல முடியும். பலரின் பேரை சொல்லாமல் இருந்திருக்கலாம். அதற்கு காரணம் அவர்கள் என்னை நண்பர்களாக நினைக்கிறார்களா என்ற தயக்கமே. ஒருவேளை நீங்கள் என்னை நண்பனாக நினைத்தால் உங்கள் பெயர் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.

நான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________


எல்லோருடனும் நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. அது என் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என விரும்புகின்றேன்.



பின்குறிப்பு 2:



இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்...................................