Friday, November 26, 2010

பெண் மன வானில்.....


பெண் மனதை வெளிப்படுத்தும் அல்லது பெண் பாடகர்கள் பாடிய பாடல்கள் பற்றிய இத்தொடருக்கு அழைத்த நண்பர் ராஜாவிற்கு நன்றியும் வணக்கங்களும்!

பெண் மனம் ஆழமானது ஒரு வானம்போல பரந்தது அதில் பல்வேறு உணர்வுகள் இருந்தாலும் பல சமயங்களில் அவற்றை ஆண்கள் போல வெளிப்படுத்த முடிவதில்லை. திரைப்படங்களில் பெண்கள் மட்டும் பாடல்கள், பெண் மனதை வெளிப்படுத்தும் பாடல்கள் பல வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலனவை காதல் சார்ந்தவையாக வந்துள்ளன. தாய்ப்பாசம் கூட ஆண் பாடுவது போலதான் பல பாடல்கள் உள்ளன. உண்மையில் மற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் திரைப்படங்கள் அதிகமாக இல்லை என்பதே உண்மை.

Tuesday, November 23, 2010

காதல் என்பது..... பாகம்-2

குமாருக்கு பல விஷயங்கள் புதிராகவே இருந்தன. தியாகுவும் ரூபாவும் அந்த அளவு அன்னியோன்யமாக இருந்ததுபோல் தெரியவில்லை. ஒரு உணர்ச்சிவசப்படலில் காதலுக்காக தற்கொலை முடிவு எடுப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் ஒரு வருடம் எல்லோரிடமும் சகஜமாக பழகிவிட்டு சரியாக அந்த நாளில் இறப்பது......

தியாகுவிற்கு அந்த வயதில் வந்தது காதல் இல்லாமல் வெறும் இனக்கவர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் அவன் அன்பு உண்மையானது என்று புரிகிறது, அதற்காக அவன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்றாலும் கூட....

இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் குமாரின் மனதில் அலைபாய காரணம் என்ன?


காதல் என்பது..... பாகம் 1

காதல் என்றால் என்ன?

காதல் என்பது....
ஒரு இனிமையான அனுபவம்
ஒரு அற்புதமான உணர்வு
அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்
காமம்தான் காதல்
கல்யாணத்து பிறகு வருவதுதான் உண்மையான காதல்

இப்படி ஆளாளுக்கு சொல்லிகிட்டே போகலாம்....
ஆனால்.....


Thursday, November 18, 2010

என்னோட எதிரி!


அவன் வந்துட்டுகிட்டு இருக்கான்! அவன்தாங்க என்னோட எதிரி! வரட்டும் வரட்டும் என்ன செஞ்சுருவானு பாக்கிறேன்! அவன் எல்லாம் என் முன்னாடி நிக்க முடியுமா! அவன்லாம் எனக்கு ஜுஜுபி மாதிரி!

Monday, November 15, 2010

ரஜினி ஒரு சிறந்த Entertainer!


பொதுவாக ரஜினியின் பெரும்பாலான படங்களை பிடிக்கும். சிலவற்றை திரும்ப திரும்ப பார்க்கலாம். அப்படிப்பட்ட படங்களில் எனக்கு பிடித்த சில படங்களை சொல்கிறேன். ஏதோ சாதாரண ரசிகனா இது புடிக்கும் அது புடிக்குங்கிற மாதிரி எழுதறேன். இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்ட சவுந்தரை வாழ்த்தி ஆரம்பிக்கிறேன்.

Thursday, November 11, 2010

கருணை

நேரம் மாலை 4.40  

னிமையான கடற்கரை காற்று வீசியது. அதை அனுபவித்தபடியே நடந்தேன்.

”அய்யா தர்மம் பண்ணுங்கய்யா”

குரல் கேட்டு திரும்பினேன். ஒரு வயதான மூதாட்டி நின்று கொண்டிருந்தாள்.

யோசித்தேன். பிறகு சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு 1 ரூபாய் நாணயத்தை எடுத்து அவளுக்கு போட்டேன்.

”தர்மராசா நீங்க நல்லாயிருக்கணும்”

நான் புன்னகைத்து கொண்டே நடந்தேன்.

நேரம் மாலை 4. 15

Tuesday, November 9, 2010

உலகத்தின் கடைசி நாள்

இந்த பதிவு எழுதவுதற்கு முக்கிய காரணம் நண்பர் டெனிம் மோகன் தான். அவர்கூட பேசுறப்ப உலகம் அழிவது பற்றி சில தகவல்கள் சொன்னார். ஆர்வம் அதிகமாகி அதை இன்னும் விவரமா தெரிஞ்கிட்டு எழுதுகிறேன். அவருக்கு மிக்க நன்றி!

எவ்வளவோ சுருக்கி எழுதினேன். ஆனாலும் ரொம்ப பெரிசா ஆயிடுச்சு. அதனால் பதிவா போடாம பிரசண்டேசனா மாத்திட்டேன். இது பெரிசா இருப்பதா நேரம் கிடைக்கும்போது பொறுமையா படிங்க. ஃபுல்ஸ்க்ரீனில் படித்தால் நன்றாக இருக்கும்.

கருத்துக்களை சொல்லுங்க!


அனைவருக்கும் நன்றி!