அத்தியாயம் ஒன்று
கிபி. 1979. ஆகஸ்ட் 27.
அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான். மனம் ஏனோ அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தது.
அரச குடும்பத்தில்தான் பிறந்தேன் நான். பல போர்களில் பங்கு கொண்டு நாட்டிற்காக போராடி பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன். பல பெருமை பெற்றேன். இதோ இப்போது எனக்கு 79 வயது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன். பேரன் பேத்திகள் என வாழ்க்கையும் விரிவடைந்து மகிழ்ச்சியாக உள்ளது.
வெளியே நான் மகிழ்ச்சியாக இருந்தபோதும் உள்ளுக்குள் இத்தனை காலம் வாழ்ந்ததற்கான திருப்தி இல்லை. ஏன்????
என் எதிரே இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவர்கள் முகத்தோற்றத்திலிருந்து அவர்கள் இந்தியர்கள் என புரிந்துகொண்டேன். இந்தியா! எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று! இந்தியாவுடனான என் நினைவலைகளில் மூழ்கிப் போனேன்.
கிபி. 1947. இந்தியா.
கிளமண்ட் அட்லி என்னை இந்தியாவின் வைஸ்ராயாக நியமித்தார். 1948க்கு முன் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிற்கு நான் குடும்பத்துடன் குடியேறினேன். அந்த நாட்டின் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்து போயிருந்தது. அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக கையாண்ட அஹிம்சா முறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
1947ல் போராட்டங்கள் அதிகமான காரணத்தால் மற்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கலந்து பேசி நான் சுதந்திரம் வழங்க முடிவெடுத்தேன். சில ஆட்சியாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் பிரிக்க வேண்டாம் என்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர் பிரிவினை வேண்டும் என்றார்கள். சில இந்திய தலைவர்களும் ஒப்புக்கொள்ள 1947, ஆகஸ்டு 15 இரவு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அந்த பிரிவினையை என் உள்மனம் தவறென சொன்னபோதும், என் வெளிமனம் சந்தோசப்பட்டது அப்போது. அதற்கு பிறகு இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மற்றும் முதல் கவர்னர் ஜெனரல் என்ற பெருமையோடு வெளிவந்தேன்.
மீண்டும் கிபி. 1979. ஆகஸ்ட் 27.
நினைவலைகளிலிருந்து வெளிவந்தேன். அந்த இந்திய சம்பவங்களுக்கு பின்னும் எத்தனையோ போர்கள், ஆட்சிகள், ஆக்கிரமிப்புகள்…. வாழ்க்கையில் அதனால் எத்தனையோ வெற்றிகளை நானும் என் நாடும் சம்பாதித்திருந்தது. அந்த போர்களினால் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருந்தபோதும் எத்தனையோ பேரின் கண்ணீர் இருந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது. இதனால் எத்தனை ஆபத்துக்களும் வந்து கொண்டுதான் உள்ளது. இதோ இந்த அயர்லாந்து பகுதிக்கு வருவதுக் கூட ஆபத்தான ஒன்றுதான் என எச்சரித்த போதும் மன அமைதிக்காக வருடந்தோறும் இந்தப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
என் எதிரே இருந்த அந்த சிறுவர்கள் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் கொஞ்சம் பெரிதாக இருந்த ஒரு இந்தியச் சிறுவன் அவர்களிடம் எதையோ சொன்னான். அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டார்கள். நான் என் அருகிலிருந்த மொழிபெயர்ப்பாளரிடம் அவன் என்ன சொன்னான் என கேட்டேன். அவர் கூறினார்.
“ஏன் இப்படி சண்டைப் போட்டுக் கொள்கிறீர்கள்? வாழ்க்கையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இரண்டு வழி உள்ளது. சண்டை மற்றும் அமைதி. சண்டையினால் கிடைக்கும் தீர்வு தற்காலிகமானது மேலும் பல இழப்புகளும் துன்பங்களும் ஏற்படும். ஆனால் அமைதியால் கிடைக்கும் தீர்வு நிரந்தரமானது. இழப்புகள் குறைவானது. ஒற்றுமை நம்மிடம் இருக்க வேண்டும். ஒரு விரலின் பலத்தை விட ஐந்து விரல்கள் சேரும்போது அதிக வலிமை கிடைக்கும்!”
இந்த சிறிய வயதில் அவனின் முதிர்ச்சியை கண்டு வியந்தேன். என் மனம் அமைதியில்லாமல் இருப்பதற்கு காரணம் நான் செய்த சண்டைகள். அதன் நினைவுகள் என்னை அலைகழித்துக் கொண்டே இருக்கின்றது. வாழ்வில் மீண்டும் பிறந்தால் நான் ஆட்சி செய்த ஆக்கிரமித்த நாடுகளுக்குள் ஒன்றி பிறந்து அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட வேண்டும். என் மனதில் உறுதியாக எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்த அந்த நேரத்தில்……
”டமால்!”
கிபி. 1979. ஆகஸ்ட் 28.
முக்கியச் செய்தி: ”மௌண்ட் பேட்டன் பிரபு அயர்லாந்து நாட்டின் முல்லாஹ்மோர் பகுதியில் படகில் சென்று கொண்டிருந்த போது அயர்லாந்து ராணுவப்படை வைத்த வெடிகுண்டு வெடித்து காலமானார் அவருடன் படகில் சென்ற அரச குடும்பத்தினர் உட்பட………”
அத்தியாயம் இரண்டு
கிபி. 2011. ஜனவரி 7.
மாலை நேரம். அந்த அறைக்குள் நுழைந்தேன். அந்த அறையின் அமானுஷ்யம் என்னை பயமுறுத்தியது. மனதிற்குள் கலக்கம் வந்தபோது வேலை நிறைவேண்டியிருந்ததால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு சென்றேன். எதிரே அவர் அமர்ந்திருந்தார்.
“வணக்கம் சார்”
அவர் அமைதியாக புன்னகைத்தார். உட்காரச் சொன்னார்.
“உங்களுக்குத்தான் உங்க பூர்வ ஜென்மத்தை பற்றி தெரிஞ்சிக்கனுமா?”
“ஆமா சார். எப்படி சார் அதை பண்ணுவீங்க? எதாவது ஆவியை கூப்பிடுவீங்களா?”
அவர் மீண்டும் புன்னகைத்தார்.
“இல்லை. உங்கள் வெளிமனதை நன்றாக உறங்க செய்து ஆழ்மனதை தட்டி எழுப்புவோம். ஆழ்மனதில் படிந்துள்ள பூர்வஜென்ம ஞாபகங்கள், மறக்காத நினைவுகள் உங்களுக்கு நினைவிற்கு வரும்.”
அவர் பதில் சொல்லிவிட்டு ஒரு படுக்கை போன்ற அமைப்பில் என்னை படுக்கச் சொன்னார். பின்னர் ஏதோ பயிற்கள் செய்தார். எனக்கு கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. சிறிது நேரம் எங்கோ இருப்பது போன்ற உணர்வு. பிறகு திடீரென பல நினைவுகள் தோன்றின….
“அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான்…………”
*************************
கண் விழித்தேன். வேறொரு உலகத்திலிருந்து வந்த உணர்வு எனக்கு ஏற்பட்டிருந்தது. போன ஜென்மத்தில் நான் மவுண்ட்பேட்டன் பிரபுவா?? என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு தெளிவிற்கு வந்தேன். போன ஜென்மத்தின் இறுதியில் எடுத்த முடிவின்படி அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் போராட வேண்டுமென்று.
அங்கிருந்து கிளம்பும்போது அந்த பயிற்சியாளர் கேட்டார்.
“எதற்காக நீங்கள் பூர்வஜென்மத்தை தெரிந்து விரும்பினீர்கள் என நான் தெரிந்துகொள்ளலாமா?”
“அது ஒன்றுமில்லை சார். என் வலையுலக நண்பர் அருண்பிரசாத் என்பவர் கடந்தகால நினைவுகளை பற்றி ஒரு தொடர்பதிவு எழுதச் சொன்னார் அதற்காகத்தான்”
- முற்றும் -
---------------------
பின்குறிப்பு 1:
சென்ற 2010 ஆரம்ப மாதங்கள் என் வேலைகள் சுறுசுறுப்பான காலகட்டம் அது. இருந்தபோதும் என் மனம் அமைதியின்றிதான் இருந்தது. மனதில் விரக்தியும் கவலைகளும் குடிகொண்டிருந்தன. மனதிற்கு மாற்றம் தேவைப்பட்டது. அப்போதுதான் வலைப்பூக்களில் மனதை திருப்பினேன். சிறிது நாட்களிலேயே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்க ஆசை வந்தது. இப்படி வலையுலகம் மூலம் நான் பெற்ற நண்பர்கள் பலர்.
ஹாலிவுட் பாலா, கீதப்பிரியன், ஜோதிஜி, கருந்தேள், நாஞ்சில் பிரதாப், கொழந்த, சு.மோகன், டெனிம், RNS, Phantom mohan, காகி, கனவுகளின் காதலன், இலுமினாட்டி, இராமசாமி கண்ணன், மரா என ஆரம்பகாலத்தில் வலைப்பூக்களில் கிடைத்த நண்பர்கள் இவர்கள்.
பின்னர் ஒரு கும்பலாக கும்மியடித்துக் கொண்டிருந்த இவர்களுடன் சேர எனக்கு மிகவும் ஆசையாகவும் தயக்கமாகவும் இருந்தது. எப்படியோ சேர்ந்து இன்று இவர்களுடன் நித்தம் பொழுது சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள்: அருண், தேவா, பாபு, டெரர், ரமேஷ், ராம்சாமி, வெங்கட், மங்குனி, பட்டாபட்டி, சௌந்தர், செல்வா, ஜெயந்த், பிரசாத், மாதவன், பிஎஸ்வி, தில்லுமுல்லு, நாகராஜசோழன், சமீர், வினோ
என பெரிய பட்டாளமே உள்ளது. இன்னும் பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, ஆர்கேசதிஷ், சிபி, ஜில்தண்ணி, குத்தாலத்தான் என நிறைய பேர். சுபத்ரா, கௌசல்யா போன்ற சகோதரிகளையும் இந்த வலைப்பூ உலகத்தில் பெற்றுள்ளேன்.
இது தவிர இன்னும் ஏராளமான பேர் என் நண்பர்கள் என சொல்ல முடியும். பலரின் பேரை சொல்லாமல் இருந்திருக்கலாம். அதற்கு காரணம் அவர்கள் என்னை நண்பர்களாக நினைக்கிறார்களா என்ற தயக்கமே. ஒருவேளை நீங்கள் என்னை நண்பனாக நினைத்தால் உங்கள் பெயர் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.
நான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________
எல்லோருடனும் நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. அது என் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என விரும்புகின்றேன்.
பின்குறிப்பு 2:
இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்...................................
உங்க black river கதை மாதிரி இருக்குன்னு நினைச்சு படித்தேன்.. இப்படி ஒரு நெகிழ்வு... நன்றி எஸ் கே... நண்பர்களாக என்றும் இருப்போம்.
ReplyDeleteநான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________///
ReplyDelete___________________________ இப்படி ஒரு பேரா? ரொம்ப அழகா இருக்கு. ஹிஹி
உங்க black river கதை மாதிரி இருக்குன்னு நினைச்சு படித்தேன்.. இப்படி ஒரு நெகிழ்வு... நன்றி எஸ் கே... நண்பர்களாக என்றும் இருப்போம்.
ReplyDeleteயோவ் மூணு மணிக்கா பதிவு போடுவீங்க..
ReplyDeleteஇது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்................................... //
ReplyDeleteஅவங்களுக்கு தமிழ் தெரியுமா?#டவுட்டு..
நான் கூட சீரியஸான மேட்டரோன்னு நெனச்சு வந்தேன்...
ReplyDeleteபுதுவிதமா சொல்லியிருக்கீங்க ;)
மிக நல்ல பதிவு SK, என்றும் நண்பர்களாக இருப்போம்
ReplyDeleteகலக்கிடீங்க பாஸ்!
ReplyDeleteசபாஷ் எஸ் .கே ......நம் நண்பர்கள் வட்டம் இன்னும் இந்த வருடம் கூடனும்ன்னு எனக்கு ஆசை மக்கா
ReplyDeleteARUMAI SK SIR... :)
ReplyDeleteஐ அப்போ பூர்வ ஜென்ம மவுண்ட் பேட்டன் என் நண்பரா.......... அப்போ நான் யாரு....காந்தியா, நேருவா?
ReplyDeleteரொம்பவே வித்தியாசமா யோசிச்சு சொல்லிட்டீங்கபோல ?
ReplyDeleteசெம !
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete"இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது ....,ஸ்டாலின், ..... ராஜராஜ சோழன், பாரதியார், .... இளங்கோவடிகள்....... //
அவங்களுக்கு தமிழ் தெரியுமா?#டவுட்டு..
//
எஸ்க்யூஸ் மி.. உங்க டவுட் இன்னமும் இருக்குதா ?
இடுகை சிறப்பு !
ReplyDelete//ஒருவேளை நீங்கள் என்னை நண்பனாக நினைத்தால் உங்கள் பெயர் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteநான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________//
மார்க்கர் வெச்சி மானிட்டர் மேலையா எழுத முடியும்? இப்புடி பண்ணிட்டிங்களே?
வித்தியாசமான தொடர்பதிவா இருக்கே... நல்லாருக்குங்க...
ReplyDelete//வினோ said...
ReplyDeleteஉங்க black river கதை மாதிரி இருக்குன்னு நினைச்சு படித்தேன்.. இப்படி ஒரு நெகிழ்வு... நன்றி எஸ் கே... நண்பர்களாக என்றும் இருப்போம்.//
மிக்க நன்றி வினோ!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________///
___________________________ இப்படி ஒரு பேரா? ரொம்ப அழகா இருக்கு. ஹிஹி//
தேங்க்யூ. அதில் உங்க பேரும் இருக்கே!
//யோவ் மூணு மணிக்கா பதிவு போடுவீங்க..//
வேற டைம் கிடைக்கலை!
//அவங்களுக்கு தமிழ் தெரியுமா?#டவுட்டு..//
அவங்க இந்த ஜென்மத்தில் எப்படி இருப்பாங்களோ? ஆமா நீங்கதானே அவ்வையார்?
படிச்சுட்டு நாளைக்கு வர்ரேன்............ இல்ல இல்ல அடுத்த மாசம் வர்ரேன்....!
ReplyDeleteவரலாற்று படைப்புக்கு வாழ்த்துக்கள் ....
ReplyDeleteஉங்கள் பதிவு வரலாறு படைக்கவும் வாழ்த்துக்கள்
//ஆமினா said...
ReplyDeleteநான் கூட சீரியஸான மேட்டரோன்னு நெனச்சு வந்தேன்...
புதுவிதமா சொல்லியிருக்கீங்க ;)//
ரொம்ப நன்றிங்க!
//denim said...
ReplyDeleteமிக நல்ல பதிவு SK, என்றும் நண்பர்களாக இருப்போம்//
ரொம்ப நன்றி டெனிம். இந்த பிளாக் ஆரம்பிக்கும் என்னமே நீங்கள் தந்த 2012 யோசனைதான். எப்போது எல்லோருடைய நட்பும் வேண்டுகிறேன். தொடரட்டும்!
//ஜீ... said...
ReplyDeleteகலக்கிடீங்க பாஸ்!//
மிக்க நன்றிங்க!
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteசபாஷ் எஸ் .கே ......நம் நண்பர்கள் வட்டம் இன்னும் இந்த வருடம் கூடனும்ன்னு எனக்கு ஆசை மக்கா//
ஆமாம் மேலும் மேலும் நண்பர்கள் அதிகமாகட்டும். எல்லாம் இனிதே தொடரட்டும்!
//karthikkumar said...
ARUMAI SK SIR... :)//
மிக்க நன்றி நண்பரே!
//அருண் பிரசாத் said...
ஐ அப்போ பூர்வ ஜென்ம மவுண்ட் பேட்டன் என் நண்பரா.......... அப்போ நான் யாரு....காந்தியா, நேருவா?//
தெரியலையே! உங்க சாந்த குணத்துக்கு நீங்க ஹிட்லரா இருந்திருக்கலாம்!:-)
//Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteரொம்பவே வித்தியாசமா யோசிச்சு சொல்லிட்டீங்கபோல ?
செம !//
ரொம்ப நன்றிங்க டெனிம்!
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteஇடுகை சிறப்பு !//
ரொம்ப நன்றி சார்!
//THOPPITHOPPI said...
ReplyDelete//ஒருவேளை நீங்கள் என்னை நண்பனாக நினைத்தால் உங்கள் பெயர் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.
நான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________//
மார்க்கர் வெச்சி மானிட்டர் மேலையா எழுத முடியும்? இப்புடி பண்ணிட்டிங்களே?////
மானிட்டர் எதுக்கு? மனசில் எழுதினா போதும்!
//பிரியமுடன் ரமேஷ் said...
ReplyDeleteவித்தியாசமான தொடர்பதிவா இருக்கே... நல்லாருக்குங்க...//
ரொம்ப நன்றி நண்பரே!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteபடிச்சுட்டு நாளைக்கு வர்ரேன்............ இல்ல இல்ல அடுத்த மாசம் வர்ரேன்....!//
மிக்க நன்றி நீங்க எப்போ வந்தாலும் உங்க மனசில் கொஞ்சம் இடம் தந்தா போதும்!
/அரசன் said...
ReplyDeleteவரலாற்று படைப்புக்கு வாழ்த்துக்கள் ....
உங்கள் பதிவு வரலாறு படைக்கவும் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க!
ஹா ஹா ஹா... எஸ் கே சார் கலக்கிடேள் போங்கோ...
ReplyDelete//Arun Prasath said...
ReplyDeleteஹா ஹா ஹா... எஸ் கே சார் கலக்கிடேள் போங்கோ...//
மிக்க நன்றி நண்பா!
//இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்...................................//
ReplyDeleteஹா ஹா ஹா..
அருமை நண்பா!அருமை
உன் நட்பு வட்டத்துக்குள் என்னையும்
இணைத்து கொள்!!!!!!!!!!!!
// இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர
ReplyDeleteநான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின்,
லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி,
சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார்,
விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள்,
முசோலினி, ஹிட்லர்... //
நம்ம வேளை நம்ம பேரு இந்த
லிஸ்ட்ல இல்ல.. நாம தான் போன
ஜென்மத்துல பெரிய விஞ்ஞானி ஆச்சே..
( தாமஸ் ஆல்வா எடிசன்.. )
//வெங்கட் said...
ReplyDelete// இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர
நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின்,
லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி,
சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார்,
விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள்,
முசோலினி, ஹிட்லர்... //
நம்ம வேளை நம்ம பேரு இந்த
லிஸ்ட்ல இல்ல.. நாம தான் போன
ஜென்மத்துல பெரிய விஞ்ஞானி ஆச்சே..
( தாமஸ் ஆல்வா எடிசன்.. )//
பல்பு கண்டுபுடிச்சது நீங்கதானே?
@எஸ்.கே
ReplyDelete//இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்.................................//
அந்த வீனா போனவன் கூட சேரத சொன்னா கேக்கனும். இப்போ பாரு நக்கல் ஓவரா போய்டுத்து.. ஒரு காலத்துல சாட்ல பேசவே தயங்கின எஸ்.கேவா இது... :))
ஓட்டு பட்டை எங்க? அதை வைக்க சொல்லி எவ்வளவு நாளாச்சி? நான் ஆபிஸ்ல ஆணி புடுங்கரதா இல்லை உங்க ப்ளாக் எல்லாம் ஆடிட் பண்றதா? இரவு எட்டு மணிக்கு வருவேன். இங்க ஓட்டு பட்டை இருக்கனும். நான் ஓட்டு போடனும். இல்லை....
ReplyDelete//TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@எஸ்.கே
//இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்.................................//
அந்த வீனா போனவன் கூட சேரத சொன்னா கேக்கனும். இப்போ பாரு நக்கல் ஓவரா போய்டுத்து.. ஒரு காலத்துல சாட்ல பேசவே தயங்கின எஸ்.கேவா இது... :))//
காலம் என்ற தச்சன் என்னை செதுக்கி விட்டார்!
//TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteஓட்டு பட்டை எங்க? அதை வைக்க சொல்லி எவ்வளவு நாளாச்சி? நான் ஆபிஸ்ல ஆணி புடுங்கரதா இல்லை உங்க ப்ளாக் எல்லாம் ஆடிட் பண்றதா? இரவு எட்டு மணிக்கு வருவேன். இங்க ஓட்டு பட்டை இருக்கனும். நான் ஓட்டு போடனும். இல்லை....//
இந்த பிளாக்ல என்ன இருக்கு?? ஓட்டுப்பட்டை வச்சாலும் அப்புறம் போஸ்ட்டை இணைக்க மாட்டேன் ஓகேவா?
எஸ்கே கலக்கிட்டீங்க!!
ReplyDelete//நாகராஜசோழன் MA said...
ReplyDeleteஎஸ்கே கலக்கிட்டீங்க!!//
ரொம்ப நன்றி நண்பரே!
தொடர் பதிவையும் வித்யாசமா எழுதி இருக்கீங்க சூப்பர் எஸ்.கே நான் உங்க நண்பன் சொல்லிக்க பெருமை படுகிறேன்
ReplyDeleteஎஸ்கே என்னோட போன ஜென்மத்து பேரை இந்த லிஸ்ட்ல விட்டுட்டீங்க?? (போன ஜென்மத்துல நான் ஐன்ஸ்டீனா இருந்தேன்.)
ReplyDelete//சௌந்தர் said...
ReplyDeleteதொடர் பதிவையும் வித்யாசமா எழுதி இருக்கீங்க சூப்பர் எஸ்.கே நான் உங்க நண்பன் சொல்லிக்க பெருமை படுகிறேன்//
ரொம்ப நன்றி நண்பா! எனக்கும் பெருமைதான் உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைத்ததற்கு!
//நாகராஜசோழன் MA said...
ReplyDeleteஎஸ்கே என்னோட போன ஜென்மத்து பேரை இந்த லிஸ்ட்ல விட்டுட்டீங்க?? (போன ஜென்மத்துல நான் ஐன்ஸ்டீனா இருந்தேன்.)//
நமக்கு நிறைய விஞ்ஞான நண்பர்கள் இருக்காங்கப்பா! ஆமா E=mc2 என்றால் என்ன?
@எஸ்.கே
ReplyDelete//இந்த பிளாக்ல என்ன இருக்கு?? ஓட்டுப்பட்டை வச்சாலும் அப்புறம் போஸ்ட்டை இணைக்க மாட்டேன் ஓகேவா? //
முடியுமா? முடியாதா? இப்போ அதான் பேச்சி... :)
/TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@எஸ்.கே
//இந்த பிளாக்ல என்ன இருக்கு?? ஓட்டுப்பட்டை வச்சாலும் அப்புறம் போஸ்ட்டை இணைக்க மாட்டேன் ஓகேவா? //
முடியுமா? முடியாதா? இப்போ அதான் பேச்சி... :)//
அன்புக்கு நான் அடிமை!
(மிரட்டி மிரட்டியே காரியத்தை சாதிக்கிறாங்கப்பா!:-))
இங்க இதை தொடர நீங்க அலைப்பதுல என் பேர காணோம் ,
ReplyDeleteஅப்படின்னா நான் பெரிய ஆளு கிடையாதா ?
//கோமாளி செல்வா said...
ReplyDeleteஇங்க இதை தொடர நீங்க அலைப்பதுல என் பேர காணோம் ,
அப்படின்னா நான் பெரிய ஆளு கிடையாதா ?//
நீங்கதானே சாக்ரடீஸ்?
எஸ்.கே அண்ணன் ப்ளாக்இல் ஒரு வடை கிடைத்தது மிக்க மகிழ்ச்சி !
ReplyDelete50
ReplyDelete//
ReplyDeleteநீங்கதானே சாக்ரடீஸ்?///
நான் சக்கரடீசா ?
( நான் நம்பர் ஒன் டுபாகூரா அப்படின்னு ஒரு படத்துல வடிவேலு கேப்பார்ல , அந்த மாடுலேசன்ல படிங்க )
சாக்ரடீசாக தத்துவங்களை பொழிந்துவிட்டு இந்த ஜென்மத்தில் மொக்கைகளை வழங்க வந்த செல்வா வாழ்க!
ReplyDelete//எஸ்.கே said...
ReplyDeleteசாக்ரடீசாக தத்துவங்களை பொழிந்துவிட்டு இந்த ஜென்மத்தில் மொக்கைகளை வழங்க வந்த செல்வா வாழ்க!//
இது மாதிரி எல்லாம் கேக்க வேண்டாம்னு தான் சாக்ரடீஸ் செத்துப் போய்ட்டார் !!
ஸ்.கே said...
ReplyDelete//வெங்கட் said...
// இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர
நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின்,
லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி,
சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார்,
விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள்,
முசோலினி, ஹிட்லர்... //
நம்ம வேளை நம்ம பேரு இந்த
லிஸ்ட்ல இல்ல.. நாம தான் போன
ஜென்மத்துல பெரிய விஞ்ஞானி ஆச்சே..
( தாமஸ் ஆல்வா எடிசன்.. )//
பல்பு கண்டுபுடிச்சது நீங்கதானே?//
இல்லை எஸ்.கே பல்பு வாங்குவதுதான் அவர்
கலக்கலா இருக்கு உண்மையான திரும்பி பார்க்கிறேன் இதுதான்
ReplyDelete//இல்லை எஸ்.கே பல்பு வாங்குவதுதான் அவர்//
ReplyDeleteஅது அருணும் பாபுவும்தானே?
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteகலக்கலா இருக்கு உண்மையான திரும்பி பார்க்கிறேன் இதுதான்//
நன்றி நண்பரே!
புதுமையான முயற்சி அண்ணா....! ரசித்தேன். 2011-ம் ஆண்டில் நீங்கள் இன்னும் சிறக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDelete//சுபத்ரா said...
ReplyDeleteபுதுமையான முயற்சி அண்ணா....! ரசித்தேன். 2011-ம் ஆண்டில் நீங்கள் இன்னும் சிறக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
//
மிக்க நன்றி சகோதரி!
// நான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ______கக்கு-மாணிக்கம் _____///
ReplyDeleteஎன்னை ஏன் மறந்தீர்கள்?
நாம் தான் நல்ல அறிமுக மானவர்கள் ஆயிற்றே.அந்தக்கூட்டத்தில் நானும் இருக்கேன்.
மனதை நெகிழ செய்யும் பதிவுகள் உங்களது.
// ஐ அப்போ பூர்வ ஜென்ம மவுண்ட் பேட்டன் என் நண்பரா.......... அப்போ நான் யாரு....காந்தியா, நேருவா?//
ReplyDelete---------அருண் பிரசாத் said...
இல்ல! ..???????????, .........லேடி மவுண்ட் பேட்டன் pretty boy !!
நல்லவேளை.. நேரு போய் சேர்ந்துட்டார்..
ReplyDeleteஹி..ஹி ( அண்ணே.. சுக்கு அண்ணே.. நான் சரியா பேசறேனா?..)
..
பதிவு நல்ல நடையுடன் எழுதப்பட்டுள்ளது ..
வாழ்த்துக்கள்..
பட்டா என் பேர துப்பு தப்பாதான் எழுதுறீங்க. அது சு இல்ல. க. --- கக்கு மாணிக்கம். .
ReplyDeleteபன்னிகுட்டி பக்கம் போங்க . அங்க நல்ல கோத்து வுட்டு வந்திருக்கேன்.
நல்லவேளை.. நேரு போய் சேர்ந்துட்டார்..
ஹி..ஹி ( அண்ணே.. சுக்கு அண்ணே.. நான் சரியா பேசறேனா?..)
ஹிஹிஹி .......அதன் தெரியுதே நேத்திலேயிருந்து மப்புதான்னு.
பாவம் அந்த புள்ள அருண் பிரசாத்.போயும் போயும் நம்மகிட்டா அது மாட்டும்?!
..
//கக்கு - மாணிக்கம் said... //
ReplyDeleteமன்னிக்கனும் உங்க பேர் நினைவில்தான் உள்ளது. ஒர் தயக்கம். அவ்வளவுதான். ஆனால் தாங்க்ளே என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி!
/பட்டாபட்டி.... said... //
ReplyDeleteஅந்த நேருவே நீங்கதானுங்களே?
எவ்லோ பெரிய பதிவு ................ இவ்ளோ நேரம் திரும்பிப் பார்த்தான் கழுத்து வலிக்காது ?????
ReplyDeleteநல்ல பதிவு ...................
பிரமாதம். கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
ReplyDelete//மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஎவ்லோ பெரிய பதிவு ................ இவ்ளோ நேரம் திரும்பிப் பார்த்தான் கழுத்து வலிக்காது ?????
நல்ல பதிவு ...................//
கஷ்டம்தான்! நல்ல டாகுடரா பார்க்க வேண்டியதுதான்!
//அப்பாதுரை said...
ReplyDeleteபிரமாதம். கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.//
ரொம்ப நன்றிங்க!
பொங்கலோ...பொங்கல்!
ReplyDeleteபொங்கலோ...பொங்கல்!!
உங்கள் வாழ்வில்
இன்பத்தின் தங்கல்...
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநண்பேன்டா.........
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள் S.K
பொங்கல் நல்வாழ்த்துகள்,எஸ்.கே!!
ReplyDeleteநீங்க தொடர்பதிவுக்கு அழைத்தவர்கள் எல்லாம் பதிவு எழுதிட்டாங்கன்னா நமக்கும் சொல்லுங்க பாஸு.. அந்த நட்பு பற்றிய கவிதையும் புகைப்படமும் அழகு
ReplyDeleteவெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
"குறட்டை " புலி , தஞ்சை.வாசன் , பலே பிரபு , சிவகுமார்
ReplyDeleteநண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
வருகைக்கு மிக்க நன்றி கவிதை காதலன் அவர்களே!
ReplyDeleteஅவங்கெல்லாம் எழுதினாங்களான்னு இன்னும் தெரியலை! ஆமா நீங்கதானே ஷேக்ஸ்பியர்? நீங்களும் எழுதுங்களேன்!:-)
Nice post SK.Many r frnds.Add me too in ur list .
ReplyDeleteவணக்கம் மவுண்ட்பேட்டன் அவர்களே!
ReplyDeleteரொம்ப அழகா எழுதியிருக்கீங்க... சீரியஸா ஆரம்பிச்சு.... ஹ ஹஹா.. அருமை...
இன்றைக்குத்தான் உங்களுடைய இந்த வலைப்பதிவைக் கவனிச்சேன்... தொடர்ந்து வரேன் எழுதுங்க... :)
என் வலைப்பூவுக்கு வந்து கருத்துரையிட்டதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
ReplyDeleteசந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com
நான் மவுன்ட் பேட்டனைப் பற்றிய கதை என்றே படித்துக் கொண்டிருந்தேன். நல்ல ட்விஸ்ட்..
ReplyDeleteஇன்னைக்குத்தான் முழுசா படிச்சு முடிச்சேன் எஸ்கே சாரி.. ஃபார் லேட்.......... நல்ல திங்கிங்...அண்ட் கிரியேட்டிவிட்டி........!
ReplyDelete// Muniappan Pakkangal said...//
ReplyDeleteமிக்க நன்றி! என்னை தங்களின் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டதற்கும் மிக்க நன்றி!
// பிரபு எம் said...//
ரொம்ப நன்றிங்க!ரொம்ப நன்றி!
//சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said...//
மிக்க நன்றிங்க!
//கோவை ஆவி said...//
ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...//
எதுக்குங்க சாரியெல்லாம்? எப்ப படிச்சா என்ன? நீங்க படிச்சதே எனக்கு மகிழ்ச்சி! ரொம்ப நன்றி!
என்ன மறந்துட்டீங்களே நண்பா ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாளாமே .. வேறொரு வலைபூவின் மூலம் தெரிந்தது. வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDelete@ ராஜா
ReplyDeleteஇல்லை நண்பரே என் அன்பிற்கினிய நண்பர்களின் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால் தாங்களும் என்னை ஏற்றுக் கொண்டீர்களா என்ற தயக்கத்தாலேயே பெயரை போடவில்லை.
என்னை தங்கள் நண்பனாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!
பிறந்தநாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!
முதல் அத்தியாயம் அப்படியே ஒரு சரித்தர பதிவு படித்த உணர்வை தந்தது... இரண்டாவது அமானுஷ்ய உணர்வால் ஜில்லிட்டது கைகள்... கடைசி வரி..."ஆஹா...இதானா" என சிரிக்க வைத்தது... ஆனாலும் என்ன ஒரு கற்பனை? ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க எஸ்.கே
ReplyDeleteLord Mountpattern-க்கு ஒரு சல்யூட். ( உங்களுக்கு லாடு லபக் தாஸ் ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை )
ReplyDeleteஉங்க நண்பர்கள் லிஸ்டில என்னையும் சேத்துக்குவீங்களா ( ஒப்புக்கு சப்பாணியா )
//அப்பாவி தங்கமணி said...//
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றிங்க!
//Blogger சிவகுமாரன் said...//
ரொம்ப நன்றிங்க!
என்னையும் தங்கள் நண்பராக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!
முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
ReplyDeleteஎதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.
மிக நல்ல பதிவு ... அருமை!!!
ReplyDelete