Sunday, October 31, 2010

ஆவியுடன் பேசலாம் வாங்க!

ஆவியுடன் பேச வேண்டும் என எனக்கு ரொம்ப நாட்களாக ஆசை. அப்போது எனக்கு 13 வயது இருக்கலாம். ஒரு புத்தகத்தில் ஆவியுடன் பேசும் முறை என சில விசயங்களை போட்டிருந்தார்கள். எனக்கு ஆசை. சரி பலிக்கிறதோ இல்லையோ முயற்சித்து பார்ப்போமே என தீர்மானித்தேன்.

துணைக்கு என் தம்பி மற்றும் அவன் நண்பர்கள் இருவரை அழைத்துக் கொண்டேன். இதில் மணி என்பவன் மிகவும் தைரியசாலி(அப்படித்தான் நினைத்தோம்). எனக்கும் என் தம்பிக்கும் கொஞ்சம் பயம் இருந்தாலும் தயாரானோம்.

Saturday, October 30, 2010

பாகம் 1

முதலிடம் வர நினைத்தேன் முடியவில்லை பள்ளியில்
முதலிடம் பெற நினைத்தேன் முடியவில்லை விளையாட்டில்
எதிர்பாரா தருணத்தில் வந்தேனே நான்!
வடை எனக்கே!

Monday, October 25, 2010

காலப்புதிர்கள் - பாகம் மூன்று (இறுதிப் பாகம்)

யோகேஷ் மற்றும் ஜெயந்த் வாசலில் காத்திருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் டாக்ஸியில் இருந்து இறங்கினார் தேவா.

”சார் வாங்க சார் வாங்க சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்”

”அப்படியில்லை தம்பி நான் சொன்னா செய்வேன்”

”நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் சார்”

“எங்க வீடு பேச்சுலர்ஸ் வீடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”

காலப் புதிர்கள் - பாகம் இரண்டு

RHINO ELECTRONICS.

ரமேஷ் உள்ளே பதுங்கி பதுங்கி நுழைந்தான். கோட் சூட் போட்ட ஒருவர் ஒரு அறையிலிருந்து வெளியேறுவது தெரிந்தது. அவர் சென்றவுடன் வேகமாக உள்ளே நுழைந்தான்.

பாண்டியன் வெளியே சென்றவர் கார் சாவி எடுக்க மறந்தது நினைவிற்கு வந்தது. மீண்டும் தன் அறை நோக்கிச் சென்றார்.

ரமேஷ் ஆள் வரும் சத்தம் கேட்டதும் அருகே இருந்த ஒரு பீரோவின் பின்னால் ஒளிந்தான். உள்ளே ஒருவர் நுழைந்தார். அவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தான். அவர் ஒரு சிறு கதவின் பக்கம் சென்றார் ஆட்கள் யாரும் இல்லை என்ற நினைப்பால் சாதாரணமாக எண்களை தட்டினார், ரமேஷின் கண்கள் அதை மிக கவனமாக பதிவு செய்தது.

காலப் புதிர்கள் - பாகம் ஒன்று

“இந்த பாடலோடு நான் விடைபெறுகிறேன்! அடுத்து வருவது இனிய கீதங்கள். ரசிச்சு ரசிச்சு கேளுங்க டெக்னோ எஃப் எம்” சந்தோசமாக கூறிவிட்டு தன் ஹெட்போனை கழற்றினான் ஆர்ஜே செல்வா.

இப்பவே நைட் மணி 11 ஆச்சா. கிளம்பனும், நிம்மதியா போய் தூங்கணும். என்றபடியே தன் பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் சென்று கொண்டிருந்தான். கும்மிருட்டு. சாலையின் யாருமில்லை தூரத்தில் யாரோ நிற்பதுபோல் தெரிந்தது அருகில் சென்றதும் அவர் லிஃப்ட் கேட்பது தெரிந்தது. நிறுத்தினான் பைக்கை.

உடனே சாலையில் இருந்தவன் திடீரென வேகமா வந்தான் கையில் எப்போது பேனாக்கத்தி முளைத்தது என்றே தெரியவில்லை. “ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு போ சத்தம்போட்டே அவ்வளவுதான்.” செல்வா அமைதியாக அவனை ஏற்றிக் கொண்டு வண்டியில் சென்றான்.

பீட்டரும் ரோஸியும் - சிறுகதை

நாங்கள் மேரியின் வீட்டில் குடியிருந்தோம். எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரிதுதான். ஆனால் எங்களுக்கு சாப்பாட்டு எந்த கஷ்டமும் இருந்ததில்லை. நாங்கள் மேரியின் வீட்டில் மிகவும் சந்தோசமாகத்தான் இருந்தோம், பீட்டர் வரும் வரை.

பீட்டர் வந்த நாள் முதல் எங்களுக்கு அவனை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கும் எங்களை பிடிக்கவில்லை. அவன் மிகவும் முரட்டுத்தனமானவன். அவன் முரட்டுத்தனம் நாளடைவில் எங்களை பயமுறுத்தியது. இப்பொழுதெல்லாம் அவன் வீட்டில் இருக்கும்போது நாங்கள் வெளியே செல்வதில்லை.


எதுவும் நடக்கலாம்!

விரும்பியது கிடைக்காமல் போகலாம், கிடைத்ததும் பறிக்கப்படலாம்.
வாழ்விற்கு முடிவு போல தோன்றலாம், கூடவே ஒரு காற்புள்ளியும் வரலாம்.
காற்புள்ளி கேள்விக்குறியாய் மாறி சில ஆச்சரியங்களை தரலாம்.
வாழ்வை எண்ணி வியந்து கொண்டே வாழ ஆரம்பித்தால் மேலும் அதியசங்கள் காணலாம்!

மொத்தத்தில் வாழ்வில் எதுவும் நடக்கலாம்! காத்திருங்கள் மாற்றம் வரும் வரை நம்பிக்கை இழக்காமல்!