பொதுவாக ரஜினியின் பெரும்பாலான படங்களை பிடிக்கும். சிலவற்றை திரும்ப திரும்ப பார்க்கலாம். அப்படிப்பட்ட படங்களில் எனக்கு பிடித்த சில படங்களை சொல்கிறேன். ஏதோ சாதாரண ரசிகனா இது புடிக்கும் அது புடிக்குங்கிற மாதிரி எழுதறேன். இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்ட சவுந்தரை வாழ்த்தி ஆரம்பிக்கிறேன்.
* 1. மூன்று முடிச்சு்: இந்த படத்தில் ரஜினிதான் வில்லன்/ஹீரோ எல்லாமே. கமல் கொஞ்ச சீன்தான் வருவார். குறிப்பா வசந்தகால நதிகளிலே பாட்டில் கடையில் கமல் படகிலிருந்து தவறி விழுந்த பிறகு அவரை காப்பாத்தாமா பாடுவார் பாருங்க அந்த சீன் ரொம்ப பிடிக்கும். 2. அதேபோல் பதினாறு வயதினிலேவில் வரும் பரட்டை கேரக்டரும் ரொம்ப பிடிக்கும். அதில் ஸ்ரீதேவி பற்றி மாப்பிள்ளை வீட்டுகாரங்க கிட்ட வத்தி வைப்பாரு பாருங்க அந்த சீன் பிடிக்கும்.
* ரஜினியின் நடிப்பு நான் பார்த்து ஆச்சரியப்பட்ட படங்கள். இது மாதிரி இப்ப நடிக்கறதில்லையே என்கிற ஏக்கம் இருக்கத்தான் செய்யுது.
1. ஆறிலிருந்து அறுபதுவரை: தம்பிகள் தங்கைக்காக உழைச்சு கடைசில தன்னோட குடும்பத்த காப்பாத்த கஷ்டப்படுவாரு. அவர் மனைவி கடைசியில் இறந்த பிறகு அவரால் பணம் கிடைக்கும். ரொம்ப ரொம்ப செண்டிமெண்டலான படம். சோ இந்த படத்தில் ஃபிரண்டா கடைசி வரை உதவியா வருவார். இந்த படம் பார்த்தா ஒரு சீன்லயாவது நம்ம மனசு நெகிழ்ந்துடும், கண்ணில் தண்ணி வர மாதிரி ஆயிடும்.
2. கை கொடுக்கும் கை: கண்ணு தெரியாத பொண்ணை குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிப்பாரு. வேறொரு கிராமத்துக்கு போனா அங்க வில்லனால பிரச்சினை வரும். இது ரஜினியின் நடிப்பை காண்பிக்கும்.
3. எங்கேயோ கேட்ட குரல்: ஓடிப்போன மனைவியா இருந்தாலும் அவங்க இறந்த பிறகு இறுதிச் சடங்கை எதிர்ப்பை மீறி செய்வார். ரொம்ப நல்ல சீன் அது.
4. முள்ளும் மலரும்: தங்கை- அண்ணன் கதை. இதுவும் ரஜினியின் நடிப்பை சொல்லும் படம்.
5. அன்புள்ள ரஜினிகாந்த்: ஒரு குழந்தைக்காக ஒரு நடிகர் உதவுவது போன்ற கதை, அதற்குள் நிறைய கிளைக்கதை இருக்கும். இதில் பாக்யராஜ்-ரஜினி சீன் ரொம்ப பிடிக்கும்.
6. ஜானி: இந்த படம் நிறைய தடவை பார்த்துட்டேன். எனக்கு அந்த பார்பர் ரஜினி கேரக்டர் ரொம்ப பிடிக்கும்.
7. படிக்காதவன்: இதுதான் நான் அதிகமாக பார்த்த ரஜினி படமா இருக்கும். ரஜினி-சிவாஜி காம்பினேசன் ரொம்ப பிடிக்கும்.
8. அன்னை ஒர் ஆலயம்: யானை குட்டியை கண்டுபுடிச்சு அதோட அம்மா கூட சேர்க்கிற படம். ரஜினி அம்மா செத்த பிறகு வரும் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.
9. பொல்லாதவன்: இதுவும் பிடிக்கும் எதுக்குனு தெரியலை. ஆனா நல்லாயிருக்கும். நான் பொல்லாதவன் பாட்டுக்காக கூட இருக்கலாம்
* ரசிக்கிறமாதிரி இன்னும் நிறைய படங்கள் 1. தில்லுமுல்லு- எப்ப பார்த்தாலும் சிரிப்பு வரும். 2. குருசிஷ்யன்- இதுவும் நல்ல நகைச்சுவை படம். 3. தம்பிக்கு எந்த ஊரு - அந்த பாம்பு காமெடி ரொம்ப நல்லாயிருக்கும்.
* படையப்பா, பில்லா, ரங்கா, நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் பாரத் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.
நான் ரஜினிக்கு தீவிர ரசிகன் கிடையாது. ஆனா அவர் படம் பெரும்பாலும் எல்லாமே புடிக்கும். அவர் படங்களில் அவருக்கு இருக்கிற மாதிரியே மற்றவங்களுக்கும் நடிக்க நல்லா சான்ஸ் கொடுத்திருப்பாரு. அது ரொம்ப பிடிச்ச விசயம். அவர் படங்களில் அவருக்கு ஏற்ற பெஸ்ட் காமெடியன் ஜனகராஜ்தான்!
நான் எந்த படத்தையும் விவரிக்கலை. ஒரு சாதாரண ரசிகனா இதெல்லாம் புடிக்கும்னு சொல்லியிருக்கேன். அவ்வளவுதான். எனக்கு இப்ப இருக்கிற ரஜினியை விட செண்டிமெண்ட் நடிப்பால் கவர்ந்த ரஜினிதான் புடிக்கும். என்னைப் பொறுத்தவரை ரஜினி ஒரு சிறந்த Entertainer! அவர் படங்கள் போரடிக்காம போகும். இந்த தொடரை யார் வேணும்னாலும் தொடருங்க!
iam online
ReplyDeleteS K!
ReplyDeleteYour selection OK!
hihi!
This comment has been removed by the author.
ReplyDeleteselection ஓகேவா சந்தோசம்! ரொம்ப சிம்பிளா எழுதியிருக்கேன்! அவ்வளவுதான்!
ReplyDelete//பதினாறு வயதினிலேவில் வரும் பரட்டை கேரக்டரும் ரொம்ப பிடிக்கும்
ReplyDeleteஇது மாதிரி இப்ப நடிக்கறதில்லையே என்கிற ஏக்கம் இருக்கத்தான் செய்யுது.//
mee too!
//என்னைப் பொறுத்தவரை ரஜினி ஒரு சிறந்த Entertainer! அவர் படங்கள் போரடிக்காம போகும்.//
ReplyDeleteஎன் கருத்தும் அதே அதே.....!
நல்ல தொகுப்பு..
ReplyDelete//ஜீ... said...//
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
//Kousalya said...//
ரொம்ப நன்றிங்க!
//வெறும்பய said...//
மிக்க நன்றி நண்பரே!
ரொம்ப சீக்கிரம் போட்டுடீங்க எஸ்கே நன்றி உங்கள் வரிசை நல்லா இருக்கு
ReplyDelete* படையப்பா, பில்லா, ரங்கா, நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் பாரத் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.///
ஆமா எஸ்கே இதை நிறுத்தவே முடியாது....!
present sir..
ReplyDelete:-)
padichchittu appuram pinnoottam poduren
எஸ் .கே நீங்க ரொம்ப பாஸ்ட் நன் இன்னும் எழுதவே இல்லை அதுக்குள்ள எல்லோரும் போடு விடுவார்கள் போல.......
ReplyDeleteரஜினி ரசிகனாகவே எழுதி இருக்கிறீர்கள் அருமை மக்கா
நச்சுனு இருக்கு....
ReplyDeleteதொடர்பதிவு எழுதியதற்கு ந்னறி எஸ் கே
/முள்ளும் மலரும்: தங்கை- அண்ணன் கதை. இதுவும் ரஜினியின் நடிப்பை சொல்லும் படம்.//
ReplyDeleteரஜினி நடிப்பை யாரு சொல்லுவா?
==============
//சௌந்தர் said...//
ReplyDeleteஆமாம் நண்பா! நன்றி!
// Madhavan said...//
சரி! நன்றி!
// இம்சைஅரசன் பாபு.. said...//
ரொம்ப நன்றிங்க!
//அருண் பிரசாத் said...//
மிக்க நன்றிங்க!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//
படத்தில் இருக்கிறவங்க சொல்வாங்க!
பாராட்டுக்கு நன்றி!
முள்ளும் மலரும்,ஆறிலிருந்து அறுபதுவரை இந்த மாதிரி படங்களில் ரஜினி தொடர்ந்து நடித்திருந்தால் வேறு வகையான பரிமாணங்களைத் தொட்டிருப்பார். இடையில் பாதை மாறிவிட்டார் ..
ReplyDeleteஅருமையா சொல்லி இருக்கீங்க சார்
ReplyDeleteஎனக்கு கமலை விட ரஜினி தான் ரொம்ப பிடிக்கும்.... நல்ல பதிவு எப்படி ரெண்டு ப்ளாக் கையும் maintain பண்ணுரிங்க
ReplyDeleteஅருமையா சொல்லி இருக்கீங்க
ReplyDeleteநல்லா எழுதி இருக்கிங்க எஸ்.கே... :)
ReplyDeleteஅனைத்தும் அருமையான படங்கள்..
ReplyDeleteரஜினியை ஹீரோவாக சொல்லாமல் Entertainer ஆக சொல்லியதற்கு ஒரு சலாம்.
ReplyDeleteநல்ல தொகுப்பு.. அனைத்தும் நல்ல படங்கள்...
ReplyDeleteதலைப்பு அருமைங்க!
ReplyDeleteஅருமையாக தொகுத்து பதிவு செய்துள்ளீர்கள்
ReplyDeleteசூப்பர் சார்,
நீங்கள் தொகுத்த படங்கள் எல்லாமே சூப்பர் ஸ்டாரின் எவர்கிரீன் கலெக்ஷன்ஸ் அற்புதம்....
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
ஐயோ , இங்க இருக்குற படங்கள்ல பெரும்பாண்மையா நான் பார்த்ததில்லையே ..?
ReplyDelete100% to 100%
ReplyDeleteanaiththume nalla padangal
ReplyDelete//பாரத்... பாரதி... said...//
ReplyDeleteஉண்மைதான்! வருகைக்கு நன்றி!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...//
ரொம்ப நன்றி சார்!
//denim said...//
ரொம்ப நன்றி! இரண்டு பிளாக் கஷ்டம்தான்! ஆனா பிரச்சினை இல்லை!
//S Maharajan said...//
ரொம்ப நன்றி சார்!
//TERROR-PANDIYAN(VAS) said...//
ரொம்ப நன்றிங்க!
//டம்பி மேவீ said...//
மிக்க நன்றி!
//பதிவுலகில் பாபு said...//
மிக்க நன்றிங்க!
//நாகராஜசோழன் MA said...//
ரொம்ப நன்றிங்க!
//பிரஷா said...//
மிக்க நன்றிங்க!
//விந்தைமனிதன் said...//
ரொம்ப நன்றிங்க!
//மாணவன் said...//
மிக்க நன்றி!
//ப.செல்வக்குமார் said...//
டிவிலதான் அடிக்கடி இதையெல்லாம் போடுறாங்களே!
//மகாதேவன்-V.K said...//
மிக்க நன்றி!
//அலைகள் பாலா said...//
மிக்க நன்றிங்க!
பில்லா போல ரஜினிகாந்த் electrifyingஆ இன்னொரு படம் பண்ணலைனு தோணுது. அமிதாபை விட அற்புதமாக இருந்தது.
ReplyDeleteமூன்று முகம் எனக்குப் பிடிக்கும். தப்புத் தாளங்கள் படம் ரஜினி இருப்பதால் மட்டுமே பார்க்க முடிந்தது. ஒரு சிவாஜி படத்தில் கைகளை பைனாகுலர் போல் பிடித்து ஸ்டைல் பண்ணுவார் - அதற்காகப் பார்த்தேன். நெற்றிக் கண் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்று.
அருமை நண்பரே ..
ReplyDelete//அப்பாதுரை said...//
ReplyDeleteஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான்! மிக்க நன்றி!
//தீயஷக்தி... said...//
மிக்க நன்றிங்க!
ரஜினி ஒரு சிறந்த Entertainer மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த நடிகர்; உழைப்பாளியும்கூட.
ReplyDeleteதாய் மீது சத்தியம் - ஒரு கௌபாய் ஸ்டைல் படம்.
ReplyDeleteஅப்புறம் முரட்டுக்காளை - அந்த சீவிடுவேன் சீவி.
சின்ன வயசுல என்னை சுண்டி இழுத்த படங்கள்.
நல்ல தொகுப்பு சார்