Thursday, November 18, 2010
என்னோட எதிரி!
அவன் வந்துட்டுகிட்டு இருக்கான்! அவன்தாங்க என்னோட எதிரி! வரட்டும் வரட்டும் என்ன செஞ்சுருவானு பாக்கிறேன்! அவன் எல்லாம் என் முன்னாடி நிக்க முடியுமா! அவன்லாம் எனக்கு ஜுஜுபி மாதிரி!
நீங்களே சொல்லுங்க! நான் என்ன பண்ணேன்! அரசியல்வாதிகிட்ட அமைச்சர் பதவி கொடுத்துட்டு ஒழுங்கா இருன்னா இருப்பாங்களா! நான் மட்டும் ஒழுங்கா இருக்கணும்னா எப்படி? யார்தான் தப்பு செய்யலை! உங்களுக்கு புடிக்கலைன்னா நான் என்ன செய்ய முடியும்? என் சுபாவம் அப்படி! அதை போய் புடிக்கலைன்னா நான் இனிமே மாத்திக்கவா முடியும்.
அந்த மாதிரி இடத்தில நான் இருப்பேன்னு தெரியும்ல, சபலபட்டு வந்து யார் தப்பு! அது இவர் தப்பு! அப்புறம் என்னை புடிக்கலை, என்னால பிரச்சினைனா நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க!
என்னால என் குணத்தை மாத்திக்க முடியாதுங்க! நான் என் இஷ்டம்போலத் தான் நடப்பேன். அதை இவர் பொறுத்தானே ஆகணும் அதை விட்டுட்டு எனக்கு எதிரா சதி செஞ்சா எப்படி?என்னை அழிக்க ஒருத்தனை வரவச்சிருக்காருங்க இவரு! இது நியாயமா சொல்லுங்க!
என்ன அழிக்க ஒரு எதிரியை இவரு கொண்டு வந்துட்டாரு! எனக்கு செம கடுப்பாயிருச்சு! என்னை அழிக்க ஒரு எதிரியா வரட்டும்! அவன் வரட்டும்! என்ன பண்ணுறான் நானும் பாக்கிறேன்!
பக்கத்தில வந்துட்டான் என்னோட எதிரி..... டேய்! எதிரி! வாடா வா! நீயெல்லாம் பெரிய ஆளா? என்னை வேணா நீ சாய்ச்சிடலாம், ஆனா என்னை மாதிரி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? உன்னால எல்லாரையும் சமாளிக்க முடியாது. டேய்! வாடா! நீயா நானா பார்த்திடலாம். நீயெல்லாம் எனக்கு சமமா! சொந்தமா ஒரு பேரை வச்சுக்க கூட துப்பில்ல! உன் பேர்ல பாதி என் பேரை வச்சிருக்க! நீயெல்லாம் என்னை அழிக்க வந்துட்ட! பேரைப் பாரு ஆண்டிவைரஸாம்! கொய்யால வாடா பாத்துறேன்...........
Labels:
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
////ஆண்டிவைரஸாம்////
ReplyDeleteஆண்டிவைரஸா.... அப்போ இது அங்கிள ஒண்ணும் பண்ணாதா?
ஏன் இப்படி?? நல்லா தான் போச்சி... :)))
ReplyDeleteசரி சரி.. நடத்துங்க...
ReplyDeleteஏன்? ஏண்ணே ஆ? எதுக்குண்ணே? ஆ? ஆ?
ReplyDeleteஇது ஒரு பின்நவீனத்துவ கதையா?
ReplyDeleteஇதுல அமைச்சர் எல்லாம் வராரு? ஏன்? நடத்துங்க
ReplyDeleteஅடடா... டிவிஸ்டு இப்படி போகுதா?
ReplyDeleteஹ ......ஹா......போங்க மக்கா ...............சூப்பர் ...............அடுத்தது அங்கிள் வைரஸ் அப்படி போட்டிருக்கலாம்
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...//
ReplyDeleteஎல்லாரையும் இது பாதிக்குமுங்க!
//TERROR-PANDIYAN(VAS) said...//
நன்றி! நன்றி!
//வெறும்பய said...//
நன்றி நண்பா!
//ஜீ... said...//
சும்மாதான்! மிக்க நன்றி!
//நாகராஜசோழன் MA said...//
இது முதல்ல கதையாங்கறதே சந்தேகம்தான்...
//Arun Prasath said...//
அமைச்சரா எங்கேங்க?
//அருண் பிரசாத் said...//
மிக்க மிக்க நன்றிங்க!
//இம்சைஅரசன் பாபு.. said...//
ரொம்ப நன்றிங்க!
ஆண்டி வைரஸா??
ReplyDeleteஅப்ப அங்கிள் வைரஸ், சித்தப்பா வைரஸ், சித்தி வைரஸ்னு எல்லாம் இருக்கா?
ஹா ஹா ஹா.. எதிர்பார்க்கல.. நல்லாயிருந்தது..
ReplyDeleteகாசுக்கார வைரசுனு நெனச்சேன், ஆண்டியா?
ReplyDeleteசுவையான முடிவு
இம்புட்டு பில்ட் அப்பு குடுத்து, கடைசியில ஆண்டி வைரஸ்-னு... முடிச்சிட்டீங்களே...!! :-)))
ReplyDeleteநீங்களும் கிளம்பிட்டீங்களா ..?
ReplyDeleteமொக்கை சங்கத்திற்கு இரகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம் ..
Anti -வைரஸ் லாம் நம்ம மொக்கைக்கு முன்னாடி சப்ப மேட்டர் ..!
போட்டிருக்குற போட்டோல இருக்குறது யாருங்க?
ReplyDelete//இது ஒரு பின்நவீனத்துவ கதையா? //
ReplyDelete//நீங்களும் கிளம்பிட்டீங்களா ..?
ReplyDeleteமொக்கை சங்கத்திற்கு இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம் ..//
எதுவும் நடக்கலாம்...
எஸ்.கே.வும் கடிக்கலாம்.
///பேரைப் பாரு ஆண்டிவைரஸாம்! கொய்யால வாடா பாத்துறேன்...........///
ReplyDeleteஎதிர்ப்பார்க்கவே இல்லை பின்னூட்டத்த படிச்சிட்டு கதைய படிச்சிருக்கலாம் ஹிஹி
a humour post from s serious man
ReplyDeleteஇந்திரா
ReplyDeleteபதிவுலகில் பாபு
அப்பாதுரை
Ananthi
ப.செல்வக்குமார்
பாரத்... பாரதி...
THOPPITHOPPI
சி.பி.செந்தில்குமார் said...
எல்லோருக்கும் மிக்க நன்றி!!
Be serious when you write about anti-virus or else...
ReplyDeletesumma thamashkku yezhudinen
serious ayidathingo ...
அய்யோ அய்யோ
ReplyDelete