Wednesday, February 16, 2011

BLACK RIVER - அத்தியாயம் நான்கு


அத்தியாயம் நான்கு

”சார் இரண்டாவதா எடுத்த பெட்டியில் இருந்த இரண்டு படங்களில், ஒன்னு ஒரு சந்தோஷமான குழந்தை படம், இன்னொன்னு ஒரு கோழி தன்னோட குஞ்சை பாதுகாப்பா அணைச்சுக்குற மாதிரியான படம்!”

“அது மட்டுமில்லாம அதுகளுக்கு பின்னாடி A, A அப்படிங்கிற எழுத்துக்கள்தான் இருந்தது.”

“சார் அது என்ன வார்த்தையா இருக்கும்?”

“சார் அந்த படங்கள் எதை சொல்லுது?”

பாபுவும் செல்வாவும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் மங்குனி ஏதோ யோசனையிலிருந்தார்.

“சார் நாங்க கேட்டுகிட்டே இருக்கோம் நீங்க அமைதியா இருக்கீங்க?”

“இதோ பாருங்க, எல்லா பெட்டிகளும் கிடைக்கிற வரைக்கும் நம்மால எதையும் கண்டு பிடிக்க முடியாது. அதனால மீதி இருக்கிற 2 பெட்டிகளை முதல்ல எடுப்போம் அப்புறம் இதையெல்லாம் யோசிப்போம். இப்போ நாம அடுத்த பெட்டி இருக்கிற இடத்துக்கு போவோம்.”

“சார் அடுத்த பெட்டி எங்கே இருக்கும்னு கண்டு பிடிச்சுட்டீங்களா?”

“ஆமா 2who have male and female living here - இது சிவனை குறிக்கிறது நாமை இங்கே இருக்கிற அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு போகணும்”


-------------------------------------------------------------------------------------

சிவன் கோவில்.

சௌந்தர் முடிந்தவரை அடையாளங்கள் மாற்றி ஒரு சுற்றுலா பயணி போல அடையாளமிட்டு காத்திருந்தான். அவன் முடிவெடுத்து விட்டான், தன்னால் இனியும் ஓட முடியாது. அதனால் போலீஸில் அப்ரூவராக போகிறான். ஆனால் இப்போது அவன் மட்டும் சரணடைவதில் அவனுக்கு விருப்பமில்லை. அதனால் அவனுக்கு பின்னால் நாகா மற்றும் யோகேஷால் ஆபத்து வரலாம். அதனால் அவர்களையும் போலீஸில் மாட்டி விட முடிவெடுத்து விட்டான்.

இங்கே அவன் காத்திருப்பது பாண்டியனுக்காக. பாண்டியன் வாராவாரம் இந்த கோவிலுக்கு வருவார். அவரை நேரடியாக சந்திக்காமல் ஒரு கடிதம் மூலம் தாங்கள் நாளை செய்யப்போகும் ஒரு வேலையை பற்றியும் அவர்கள் இருக்குமிடத்தை பற்றியும் தான் அப்ரூரவாக விரும்புவதையும் சொல்லிவிட திட்டமிட்டு காத்திருக்கிறான். ஒரு ஃபோன் மூலம் கூட இதை சொல்லாம் ஆனால் நாகாவிற்கு போலீஸிலும் ஆட்கள் உண்டு இது அவனுக்கு தெரிந்தால் சௌந்தர் அவ்வளவுதான்!

இருந்தாலும் அவனுக்குள் ஒரு சிறிய குற்ற உணர்ச்சி. இத்தனை நாள் கூட ஒன்றாக இருந்தவர்களை காட்டி கொடுப்பதா.... ஆனால் ஓடி ஓடி ஒளிவதிலும் விருப்பமில்லை... இப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது...........

-------------------------------------------------------------------------------------

“சரி சார் நீங்க கண்காணியுங்க நான்  கோயிலுக்கு வெளியே இருக்கேன்.” சொல்லிவிட்டு சென்றான் பிரசாத்.

ரமேஷ் வழக்கம்போல் அவர்களை கண்காணித்தார். ஆனால் இம்முறை அவரை பாபு கவனித்தை கவனிக்க தவறினார்.

“சார் நம்மை யாரோ வாட்ச் பண்ணுறாங்க”

“என்ன பாபு சொல்றே”

“ஆமாம் சார் நீங்க சடார்னு திரும்பாம சாதாரணமா உங்க வலது பக்கமா பாருங்க அந்த தூணுக்கு பின்னால் ஒருத்தன் நின்னுகிட்டு நம்மளையே பாக்குறது தெரியும்.”

மங்குனியும் கவனித்தார்.

”சரி நாம இன்னும் தேட வேண்டிய இடம் எது?”

”அந்த சிறிய கோயில்தான் சார்.”

”சரி. அது ஆள் நடமாட்டமில்லாமதான் இருக்கு! நீயும் செல்வாவும் அந்த கோயிலுக்கு பின்புறமா போய் தேடுங்க. நான் வெளியே போய்ட்டு வர மாதிரி லேட்டா வரேன் அவன் உங்களை ஃபாலோ பண்ணா நான் பின்னால வந்து பிடிச்சிடுறேன்.”

“அவன் யார்னே தெரியலை சார் ஆனா அவனை இதுக்கு முன்னாடி அந்த லைட் ஹவுஸ்ல பார்த்த ஞாபகம்.”

“யாரா வேணா இருக்கட்டும் என்னோட சைலன்சர் பொருத்தின துப்பாக்கி முன்னாடி அவன் என்ன பண்ணுறான் பாக்கிறேன்”

-------------------------------------------------------------------------------------

ராமும் ஏஞ்சலினாவும் அருண்பிரசாத் முன் உட்கார்ந்திருந்தனர்.

“ராம் நீ சொல்றது உண்மையா?” என்றான் அருண்பிரசாத்.

“ஆமா அருண் இவங்க மாமாவும் அந்த எஸ்கேவும் பேசுனத கேட்டோம். அவங்க போனப்புறம் நாங்க வெளியே வந்தும் அந்த அதிர்ச்சி எங்களை விட்டு போகலை. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை! நீ ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டர் உன்கிட்ட சொன்ன யோசனை சொல்வேன்னுதான்  வந்தேன்.”

“நல்லவேளை! நீ என்கிட்ட வந்த போலீஸ்கிட்ட போகலை. போயிருந்தா அவ்வளவுதான்! அந்த எஸ்கேவுக்கு ஆள்பலமும் செல்வாக்கும் அதிகம். போலீஸ்லயும் ஆள் இருக்கு. விஷயம் தெரிஞ்சா நமக்கும் ரிஸ்க்கு. உஷாராகவும் ஆயிடுவாங்க!”

“என் மாமாவும் சம்பந்தபட்டிருக்கார்னு நினைக்கிறப்பதான் வேதனையா இருக்கு!” என்றாள் ஏஞ்சலினா.

“பிஎஸ்வி பெரிய ஆள்தான், ஆனா அவர் இப்படிபட்டவர்னு தெரியலை. சரி யார் எப்படிபட்டவங்கன்னு யார்க்கு தெரியும்!”

“சரி அருண் இப்ப என்ன பண்ணுறது?”

“இப்போதைக்கு நீங்க இந்த விஷயம் வெளியே தெரியாம பார்த்துகுங்க. நான் என் எடிட்டர்கிட்ட பேசுறேன். அவர்க்கு நிறைய நல்ல போலீஸ் ஆட்களை தெரியும்; அது மட்டுமில்லாம நமக்கு பிரச்சினையில்லாம இந்த விஷயத்தை முடிக்க யோசனை பண்ணுவார். நீங்க இரண்டு பேரும் இப்ப வீட்டுக்கு போங்க. நானே நாளை போன் பண்ணுறேன். அப்ப நீங்க வாங்க! கவனமா இருங்க!”

-------------------------------------------------------------------------------------

பிரசாத் கோயிலை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தவன் திடீரென நின்றான்.

அது அவன்தானே.. அந்த மூன்றுபேரில் ஒருவன். இவன் பேரு சௌந்தர்னு நினைக்கிறேன். இவன் இங்க எங்கே? இவனை பிடிச்சா பரிசுல்ல! அந்த நினைப்பு வந்த உடனே சௌந்தரை நோக்கி ஓடினான் பிரசாத்.

சிந்தனையில் இருந்த சௌந்தர் உள்ளுணர்வு காரணமாக தன்னை நோக்கி ஒருவன்  ஓடி வருவதை உணர்ந்தான். அவனை பார்த்தான் உடனே வேகமாக ஓட்டம் பிடித்தான். அவன் எதற்காக ஓடி வருகிறான் என புரியவில்லை. ஆனாலும் அவன் மனதில் இப்போது தீர்மானமாக அப்ரூவராவது என்ற எண்ணம் உண்டானது.
வேகமாக கோயில்களின் பிரகாரங்கள் இடையே ஓடி பிரசாத்தை திசை திருப்பினான். ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து தப்பித்து ஓரிடத்தில் ஒளிந்தபோது எதிரே பாண்டியன் பிராசதக் கூடையுடன் நின்று கொண்டிருப்பதை கவனித்தான்.

அவர் கவனிக்காதபோது அருகில் சென்று அந்த பிரசாதக் கூடையில்  தன் கையில் இருந்த கடித்ததை அதில் போட்டுவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றான்.

-------------------------------------------------------------------------------------

”ஜெயந்த் நீ வெளியே நிக்கிற செகரெட்டரி ஜானை தீர்க்கணும். அவன் மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிஞ்சவன். பிரபாகர் நீ வீட்டுகுள்ளே போய் ஆண்டர்சனையும் அவர் காதலியையும் தீர்த்துகட்டணும்”
 
பிஎஸ்வியின் வார்த்தைகளை பிரபாகர் யோசித்துக் கொண்டிருந்தான். ஜெயந்த் வேறு திட்டத்துடன் இருந்தான்.

“பிரபா குமாரை வரச்சொல்லு.”

“அவன் எதுக்கு”

“இதப்பார் நாளை மறுநாள் ஏஞ்சலினா பிறந்தநாள் அன்னைக்கே சொத்த மாத்திடுவார் அது மட்டுமில்லாம அவளை விக்கிறதுக்கு ஆளை வரச்சொல்லிட்டார் அன்னைக்கே அதுக்கு முன்னாடி அவளை நான் அடையணும்.” என்றான் ஜெயந்த்.

“அது மட்டுமில்ல பிரபா, நீ பிஎஸ்வி சொன்னதையெல்லாம் ரெகார்ட் பண்ணிட்டே அதைவைச்சு பிளாக்மெய்ல் பண்ணி பணம் வாங்கிப்பே ஆனா எனக்கு? எனக்கு பணம் வேண்டாம் ஏஞ்சலினாதான் வேண்டும் நாம பிஎஸ்வி சொன்ன வேலையை செய்யற அதே டைம் பிஎஸ்வியும் பிஸியா இருப்பார். அதான் சரியான சமயம் குமாரை வச்சு அவளை நம்ம இடத்துக்கு கடத்திட வேண்டியதுதான்! இத்தனை நாளா அவன் எங்கே போய்ட போறான்னு பார்த்தேன் ஆனா நீ போட்டு காமிச்ச டேப்பை கேட்டதுக்கு அப்புறம்தான் இந்த முடிவு எடுத்தேன்”

“சரி குமாரை வரச்சொல்றேன் நாம ஆண்டர்சனை கொல்ற அன்னைக்கு ஏஞ்சலினாவ துக்கணும்! அதாவது....”

“நாளைக்கு”

-------------------------------------------------------------------------------------

சௌந்தரை தவற விட்ட கோபத்தில் வெறுப்புடன் வந்து கொண்டிருந்த பிரசாத் முன் கையில் குண்டிபட்டு ரத்தத்துடன் ரமேஷ் வந்தார்.

”சார் என்னாச்சு”

“இங்க ஒண்ணும் பேச வேணாம் நாம வந்த வண்டியை எடுத்துட்டு வா”

ஓட்டலை வந்தடைந்தனர் இருவரும்.

“சார் எப்படி குண்டடிபட்டுச்சு”

“அந்த கண்ணாடி போட்ட ஆள் கையில் துப்பாக்கி இருந்தது அவன் வெளியே போனான்,. நான் மத்த 2 பேரையும் கண்காணிச்சேன். ஆனா இவன் என் பின்பக்கமா வந்து என்னை மடக்கிட்டான் அவனை அடிச்சுட்டு தப்பிக்கிறப்ப அவன் சுட்டுட்டான். நல்ல வேளை குண்டு உரசிகிட்டு போயிடுச்சு. லேசான காயம்தான்”

“சார் அவங்க மோசமானவங்கதான் சார். இனிமே உஷாரா இருக்கணும். வேணும்னா போலீஸ்ல சொல்லிடலாமா?”

“இல்லை வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். இது ரகசியமா இருக்கணும்.”

”சரி சார். சட்டையெல்லாம் ரத்தமா இருக்கு, கழட்டிடங்க நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?”

“இல்ல வேண்டாம்! நீ போய்ட்டு நாளைக்கு வா.”

“சரி சார் வரேன் உடம்ப பார்த்துகுங்க ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிகிங்க!”
பிரசாத் போனபின் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்த ரமேஷ் ரத்தம் படிந்த சட்டையை கழற்றிவிட்டு தன் மார்பினை தொட்டுப் பார்த்தார். அதில் கேங்குலா நாட்டின் ராஜ முத்திரை பச்சை குத்தப்பட்டிருந்தது.

(தொடரும்)


19 comments:

 1. சுடச்சுட பின்னூட்டம்...

  ReplyDelete
 2. //Philosophy Prabhakaran said...//
  வாங்க பிரபாகர்!

  (உங்க பேர்ல ஒரு கேரக்டர் இருக்கும். கோவிச்சுக்காதீங்க:-)))

  ReplyDelete
 3. வணக்கம் நண்பரே :)

  ReplyDelete
 4. ஜெயந்துக்கு இங்கயும் அந்தமாதிரி கேரக்டர்தானா? நல்லாருக்கு :))

  ReplyDelete
 5. //மாணவன் said...//

  வணக்கம் மாணவரே!

  ஜெயந்துக்கு கதையில்தான் கேரக்டர் அப்படி! நிஜத்தில் மிகவும் அப்பாவியானவர், நல்லவர்.

  ReplyDelete
 6. விறுவிறுப்பா போகுது எஸ்.கே.......

  ReplyDelete
 7. எஸ்.கே said...
  //மாணவன் said...//

  வணக்கம் மாணவரே!

  ஜெயந்துக்கு கதையில்தான் கேரக்டர் அப்படி! நிஜத்தில் மிகவும் அப்பாவியானவர்,//

  இதில் தெரியும் நீதி - நீங்கள் அவரை பார்த்ததில்லை!

  ReplyDelete
 8. ஆஹா.. கதை சூப்பரா போகுதே..
  வாழ்த்துக்கள்..
  இன்ட்லியில் இணைக்கவில்லையா ?

  ReplyDelete
 9. சரிங்க நீங்கள் கதை சொல்ற விதம் நல்லா இருக்கு. ஏழாவது பக்கத்துல நாலாவது வரி தான் சரி இல்லை..

  ReplyDelete
 10. கதை சூப்பரா போகுது.
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. ராம்ஸ் ஹீரா சரி எப்ப ஹீரோவோட என்ட்ரி இருக்கும் இப்ப வரைக்கும் ரொமான்ஸ் தான போய்கிட்டு இருக்கு

  ReplyDelete
 12. ஹி ஹி .. காதல் கதைதான் ரொம்ப நல்லா இருக்கு .. ராமோட காதல் கதை .. ஹி ஹி

  ReplyDelete
 13. /////கோமாளி செல்வா said...
  ஹி ஹி .. காதல் கதைதான் ரொம்ப நல்லா இருக்கு .. ராமோட காதல் கதை .. ஹி ஹி
  February 16, 2011 10:53 PM///////

  என்ன இளிப்பு வேண்டி இருக்கு? பிச்சிபுடுவேன் பிச்சி...!

  ReplyDelete
 14. ம்ம்ம்... ஒட்டுமொத்த பதிவுலக கேரக்டர்களும் இருக்குது போல...

  ReplyDelete
 15. //வைகை said... //
  மிக்க நன்றிங்க!

  //
  இதில் தெரியும் நீதி - நீங்கள் அவரை பார்த்ததில்லை! //
  அப்ப அப்படி இல்லையா அவர்?:-)

  ReplyDelete
 16. //Madhavan Srinivasagopalan said...//
  நன்றிங்க மாதவன்!

  //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
  சுட்டிக்காட்டுதலுக்கு மிக்க நன்றி! அடுத்த தடவை அந்த லைனே இல்லாத மாதிரி பண்ணிடுறேன்!

  //sakthistudycentre-கருன் said...//
  ரொம்ப நன்றிங்க!

  ReplyDelete
 17. //ராஜகோபால் said...
  ராம்ஸ் ஹீரா சரி எப்ப ஹீரோவோட என்ட்ரி இருக்கும் இப்ப வரைக்கும் ரொமான்ஸ் தான போய்கிட்டு இருக்கு//

  வருவார் ஆனா...வரமாட்டார்!

  //கோமாளி செல்வா said...

  ஹி ஹி .. காதல் கதைதான் ரொம்ப நல்லா இருக்கு .. ராமோட காதல் கதை .. ஹி ஹி//
  ரொம்ப நன்றி! அவங்க காதலுக்கு உங்க உதவி ரொம்ப அவசியம் தேவை!

  //பன்னிக்குட்டி ராம்சாமி said...//

  /////கோமாளி செல்வா said...
  ஹி ஹி .. காதல் கதைதான் ரொம்ப நல்லா இருக்கு .. ராமோட காதல் கதை .. ஹி ஹி
  February 16, 2011 10:53 PM///////

  என்ன இளிப்பு வேண்டி இருக்கு? பிச்சிபுடுவேன் பிச்சி...!//

  விடுங்க விடுங்க! அவர் நிச்சயம் ஹெல்ப் பண்ணுவார்!

  ReplyDelete
 18. //Philosophy Prabhakaran said...

  ம்ம்ம்... ஒட்டுமொத்த பதிவுலக கேரக்டர்களும் இருக்குது போல...
  //

  :-)) 10-12 கேரக்டர்தான் வரும்!

  ReplyDelete
 19. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete