Tuesday, February 22, 2011

BLACK RIVER - (7) கடைசி அத்தியாயம்


மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்!
இதுவும் பெரிய அத்தியாயம். இருக்கிறதிலேயே ரொம்ப பெரிசு! தொடர்ந்து படிக்கிறதுக்கு நன்றி! நன்றி! நன்றி!



ஏழாம் - கடைசி அத்தியாயம்

”சார் நான் உங்களுக்கு தகவல் கொடுத்ததும் நீங்க வரப்போறதும் நாகாவுக்கு எப்படியோ தெரிஞ்சிடுச்சு சார்!” என்று மூச்சு வாங்கி கொண்டே பேசினான் சௌந்தர்.

“அது எப்படி தெரிஞ்சிருக்கும் எனக்கு புரியுது” என்றார் பாண்டியன்

“இருந்தாலும் நீங்க யார்கிட்டையும் சொல்லாம யாரையும் கூப்பிடாம போனது தப்புதான் சார்” என்றார் சதீஷ்.
 

அமைதியாக இருந்தார் பாண்டியன்.

“சார் நீங்க நல்லவர் நேர்மையானவர். ஆனா நீங்க நாகாவுடனான மோதலுக்கு பின் ரொம்ப எமோஷனலாயிட்டீங்க. அவங்களை பிடிக்கிறது முக்கியம்தான் ஆனா அதுக்காக உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீங்க!”

”சதீஷ் நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனா ஒரு போலீஸ் ஒரு கிரிமினல் கையால அடிபட்டது எனக்கு அவமானம் அது உங்களுக்கு புரியாது. இவ்வளவு முயற்சித்தும் அவங்க தப்பிச்சிட்டாங்களே”

சௌந்தர் பேசினான். “சார் அவங்க தப்பிச்சிருக்க முடியாது இந்தப் பக்கமா இருக்கிற ஏழுவண்ண மணல்திட்டு பக்கமாதான் போனாங்க அந்த பக்கம் போனா பிடிச்சிடலாம்”

“சே, இதை ஏண்டா இவ்வளவு நேரம் சொல்லாம இருந்தே. சதீஷ் வாங்க போலாம் அவங்களை பிடிக்க”

“சார் எதுக்கு அவசரம் என்னை பார்க்க வேற ஒருத்தன் வரேன்னு சொல்லியிருக்கான்”

“அவன்கிட்ட உங்க போன் நம்பர் இருக்கில்ல அவன் மறுபடியும் போன்பண்ணா அவசர வேலை அப்புறம் பார்க்கிறோம்னு சொல்லிக்கலாம். நீங்க இப்ப கிளம்புங்க. அப்படியே நம்ம ஸ்குவாடுக்கும் தகவல் தாங்க”

இவரை திருத்த முடியாது என மனதில் எண்ணிக்கொண்டே பாண்டியன், சௌந்தருடன் கிளம்பினார் சதீஷ்.

***************************************************************

”ஏண்டா இவ்வளவு லேட்டு எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?”

“சாரிடா ராம் கிளம்புற நேரத்தில எடிட்டர் வந்துட்டார். கமிஷ்னரை பார்த்து விஷயத்தை சொன்னாராம். ஆனா கமிஷ்னர் முதல்ல இதை நம்பலையாம் அப்புறம் எடிட்டர் ஸ்ட்ராங்க சொன்னதை கேட்டு, சில அதிகாரிங்க கூட கலந்து பேசிட்டு இன்னைக்குள்ள முடிவு சொல்றேன்னு சொல்லியிருக்காராம்”

”அப்படியா அருண் நல்லதா போச்சு! ஆனா நான் இப்போ ஒரு போலீஸ்காரர்கிட்ட வேற பேசிட்டேன். போகலன்னா தப்பா போயிடும். என்ன பண்ணுறது?”

“சரிடா அவரையும் பார்த்தா போச்சு! எடிட்டர் கூட பார்த்தா தப்பில்லை ஆனா நல்லவரான்னு தெரிஞ்சு பேச சொன்னார்!”

“அதில்ல அருண், இப்ப எங்க மேடம் மேரி வீட்டுக்கு வேலைக்கு வேற போகணும். போகலைன்னா கடுமையா சத்தம் போடுவாங்க இஷ்டம் இல்லன்னா வேலைக்கு வராதன்னு கண்டபடி பேசுவாங்கடா!”

“ஓ, அப்படியா. ம்! சரி ஒன்னு பண்ணுவோம், நாம இரண்டு பேரும் இப்ப மேரி வீட்டுக்கு போவோம் நானே இந்த மாதிரி ஒரு அவசர விஷயமா வெளியே போகனும்னு சொல்றேன். நான் சொன்னா கேப்பாங்க. வா அவங்களை பார்த்துட்டு அப்புறம் அப்படியே அந்த போலீஸ்காரரை பார்த்து விஷயத்தை சொல்லிடலாம்”

“சரிடா வா போகலாம்”

ராமும், அருண்பிரசாத்தும் மேரி வீட்டுக்கு கிளம்பினார்கள்.


***************************************************************

ஜெயந்த் எதிர்பார்த்தது போலில்லை ஜானுடனான சண்டை. அவன் நோக்கம் முடிந்தவரை துப்பாக்கியை உபயோகிக்காமல் ஜானை வீழ்த்துவது. ஆனால் எக்காரணம் கொண்டும் ஜான் இப்போது சாகக் கூடாது. ஆண்டர்சனின் காதலி, பிறகு அந்த எக்ஸ், அப்புறம்தான் ஜான், கடைசியாக ஆண்டர்சன் தற்கொலை செய்து கொண்டது போல இருக்க வேண்டும்.

இதுதான் பிரபாகரிடமும் ஜெயந்திடமும் பிஎஸ்வி சொன்ன திட்டம். ஆனால் ஜான் அவ்வளவு சீக்கிரத்தில் ஓய்ந்து விடவில்லை. அவனின் தேர்ந்த பயிற்சிகள் ஜெயந்தை திணறச் செய்தன. தன் இரண்டு மூன்று மாத பயிற்சியெல்லாம் ஜானிடம் காட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் அங்கே இயங்கிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் ஏஞ்சலினாவை சுற்றியே இருந்தது. குமார் ஒழுங்காக அவளை கடத்தி விடுவானா என எண்ணிக் கொண்டிருந்தான்.


***************************************************************
 
செல்வா அந்த கல்லறையிலிருந்து வெளியே வந்தான் அந்த கல்லறையை மூடி அதன் மேல் பழையபடி பெரிய கல்லை வைத்தான். உள்ளேயிருந்து பிரசாத், ரமேஷ், மாதவன், மங்குனி, பாபு ஆகியோரது குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. வெளியே இருந்து யாராவது கல்லை நகர்த்தினாலொழிய அவர்களால் வெளியே வர முடியாது. அதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.

செல்வா நகைகள் இருந்த சிறிய பெட்டியுடன் அங்கிருந்து நகர்ந்தான். அவன் பின்னாலேயே நாகாவும், யோகேஷும் பின் தொடர்ந்தனர். உள்ளுணர்வு காரணமாக யதேட்சையாக திரும்பிய செல்வா, தன்னை இருவர் பின் தொடர்வதை பார்த்தான்.

அவன் பார்த்து விட்டதை அறிந்த யோகேஷ், “நாகா அவன் பார்த்துட்டான் ஓடிப் போய் பிடி” என வேகமாக துரத்த ஆரம்பித்தார்கள். யார் அவர்கள் எதற்காக தன்னை துரத்துகிறார்கள் என புரியாவிட்டாலும் இருவர் துரத்துவது, மற்றும் தன் கையிலுள்ள நகைப்பெட்டி காரணமாக செல்வா வேகமாக ஓட ஆரம்பித்தான்.

பின் திரும்பி பார்த்த போது அவனை நோக்கி வெறியுடன் நாகாவும் யோகேஷும் ஓடி வருவது தெரிந்தது. எங்கே போவதென தெரியாமல் எதிர்த் திசையில் வேகமாக ஓடினான் செல்வா.

***************************************************************

வீட்டின் பின்பக்கமாக நுழைந்த பிரபாகர் படிக்கட்டுகளில் மெதுவாக ஏறினான். மாடியிலிருந்த அறையில் சாம் ஆண்டர்சனும் அவர் காதலியும் படுக்கையில் ஒன்றாக இருப்பது அவனுக்கு ஜன்னல் வழியாக தெரிந்தது. முதலில் அவர் காதலியை கொல்லனும் அவ்வளவுதானே!. அவளை சுட்டா ஆண்டர்சன் யாருன்னு பார்க்க வெளியே வருவார் அவரை அடிச்சு மயக்கப்படுத்திடலாம். எண்ணிக் கொண்டே ஜன்னல் வழியாக சைலன்சர் துப்பாக்கியால் குறிபார்த்தான் பிரபாகர்.

ஜன்னல் வழியாக ஆண்டர்சன் காதலியின் தலை தெரிந்தது. துல்லியமாக குறிபார்த்து சுட்டான் பிரபாகர். கடைசி சமயத்தில் ஆண்டர்சனை செல்லமாக அடிக்க குனிந்த அவர் காதலி நகர குண்டு அவள் முதுகில் பாய்ந்தது. அவள் அலறிக்கொண்டே சாய்ந்தாள். சாம் ஆண்டர்சன் கத்தினார்.

“மேரி........................”


***************************************************************

ஏஞ்சலினா தன் கையிலிருந்த முகவரியை இன்னொரு முறை பார்த்து கொண்டாள். சே இங்க ராம் தன்னோட ஃபிரண்டு வீடு இருக்குன்னு ஒரு தடவை சொன்னாரில்ல! மேரி மேடம் வீடு கூட பக்கத்திலதான் இருக்குன்னார். ஆனா எதையும் ஒழுங்கா கேட்டு வைச்சுக்கவே இல்ல! சே!

தன்னைதானே திட்டி கொண்டாள். ராம் இந்நேரம் மேரி வீட்டுக்கு போயிருப்பாரா? நம்மை அங்கே பார்த்தா என்ன சொல்வார் என பல எண்ணங்களோடு மேரியின் வீட்டை தேடிக் கொண்டு போனாள் ஏஞ்சலினா.

***************************************************************

மேரியின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அருண்பிரசாத்தின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்து பேசினான்.

“சார் சொல்லுங்க சார்” “யாரு, என் பிரண்டா என் கூடத்தான் இருக்கான்” “ஓ அப்படியா சார் ரொம்ப சந்தோசம் சார்” “எப்படியோ நல்லபடியா முடிஞ்சா சரி! ரொம்ப நன்றி சார்” “நான் இப்ப மேரி மேடம் வீட்டு போய்ட்டு அங்க வந்துடுறேன் சார்” போனை வைத்து விட்டு சந்தோசமாக ராமிடம் பேசினான் அருண்.

“டேய் ராம் எங்க எடிட்டர் பேசினார் கமிஷ்னர் நம்ம சொன்னதை நம்பிட்டாராம் உடனே பிரசிடண்டுக்கு தகவல் கொடுத்து அவர் செக்யூரிடியை அதிகப்படுத்த போறாராம். பிஎஸ்வி, எஸ்.கே மேல நடவடிக்கையும் எடுக்கறேன்னு சொல்லியிருக்காராம். எதுக்கும் உன்னையும் ஏஞ்சலினாவையும் பார்க்க வரச் சொன்னார். நீங்க இரண்டு பேரும் நாளைக்கு அவரை போய் பாருங்க”

“ரொம்ப சந்தோசம் எப்படியோ அருண் எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி. அப்போ இப்ப நாம அந்த போலீஸ பார்க்க வேண்டியதில்லைல! அப்ப நான் இப்படியே மேரி மேடம் வீட்டு வேலைக்கு போறேன்.”

“சரிடா. நானும் வரேன் அவங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு!  அப்படியே அந்த போலீஸ் போன் பண்ணா வேற ஏதாவது காரணம் சொல்லிக்கலாம்”

”ரொம்ப நன்றிடா” ”நமக்குள்ள நன்றி எதுக்குடா!” அருணும் ராமும் சந்தோசத்துடன் மேரி வீட்டிற்கு சென்றார்கள்.

***************************************************************

பிஎஸ்வி ஜீப்பிலிருந்து இறங்கினார். மேரி வீட்டின் கதவை தட்டாமலேயே உள்ளே நுழைந்தார். அதேசமயம்....


பிரபாகர் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. ஆண்டர்சன் மேரிக்கு அடிப்பட்டிருப்பதை கண்டு அவளை யார் சுட்டார்கள் என பார்க்க வெளியே வந்தார். ஆனால் பிரபாகரின் தாக்குதலிலிருந்து விலகி தப்பினார். பிரபாகர்-ஆண்டர்சனுக்கு இடையே பெரும்போராட்டம் நடந்ததில் இருவரும் படிக்கட்டில் உருண்டு விழுந்தனர். போராட்டத்தில் பிரபாகருக்கு பலமாக கால்களில் காயம்பட்ட போதும் சாமார்த்தியமாக ஆண்டர்சனை அடித்து மயக்கமாக்கினான். திட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு எழுந்தபோது எதிரே துப்பாக்கியுடன் நின்றார் பிஎஸ்வி.

”பிரபாகர், என்கிட்டேயே நீயும் ஜெயந்தும் டபுள்கேம் ஆடுறீங்களா? நம்ம திட்டத்தின் தொடர்ச்சியா உன்னையும் ஜெயந்தையும் சேர்த்து முடிச்சிட வேண்டியதுதான்.”
 

பிரபாகர் தன் திட்டம் வெளிப்பட்டதையும், தான் மரண விளிம்பின் உச்சியில் இருப்பதையும் உணர்ந்து, எழுந்திருக்கவும் முடியாமல் பயத்தில் உறைந்தான்.

***************************************************************
 
செல்வா தன்னை துரத்திக் கொண்டிருந்த நாகா, யோகேஷிடமிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தான். எங்கே செல்வதென தெரியாமல் ஓடி வந்த அவன் முன் ஒரு ஒற்றை வீடு இருந்தது. அவசரமாக அதன் பின்பக்கம் ஓடினான். அப்போது..........

ஜெயந்த் சண்டையில் சோர்ந்து போயிருந்தான். ஜானிடம் ஆயுதம் எதுவுமில்லாத போதும் அவன் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. தன் துப்பாக்கியை பிரோயோகிக்க முடிவெடுத்து துப்பாக்கியால் ஜானை சுட்டான். ஜான் மயிரிழையில் தப்பிக்க குண்டு செல்வாவை துரத்தி வந்த நாகாவின் மேல் பாய்ந்தது. இவன் யார் குறுக்கே என எண்ணிக்கொண்டே இம்முறை மிகச்சரியாக ஜானை சுட்டான். ஜானில் இடுப்பில்  குண்டு பாய்ந்தது. ஜான் வீழ்ந்தான்.

***************************************************************

வீட்டின் பின்பக்கமாக நுழைந்த செல்வாவை துரத்தி பிடித்தான் யோகேஷ். யோகேஷ் நகைப்பெட்டியை பறிக்க முயன்றான் இருவருக்குள்ளும் சண்டை பலமானபோது...

அருகிலிருந்த அறையில் இருந்த பிஎஸ்வி சத்தம் கேட்டு வாசல் பக்கம் வந்தார். அதேசமயம் பிரபாகர் உயிர் பயத்தால் நகர்ந்து கொண்டே அருகிலிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை தாழ் போட்டுக் கொண்டான். பிஎஸ்வி வாசலருகே சண்டைபோட்டு உருண்டு கொண்டிருந்த செல்வாவையும் யோகேஷையும் கவனித்தார். அவர்களை எளிதாக மடக்கினார். அவர்களை வீழ்த்தி போட்டிருந்த சட்டைகளால் கட்டி போட்டு முடித்த சமயத்தில்..........


ஜெயந்த் உள்ளே நுழைந்தான். அவன் துப்பாக்கி முனையில் ஏஞ்சலினாவை நடத்தி வந்தான். அங்கே இருந்த பிஎஸ்வியை கண்டு ஆச்சரியமடைந்தான்.
”பாஸ் நீங்களா..? பிரபாகர் எங்கே? இவ இங்கே மேரியை பாக்க வந்தா போல, நான் கவனிச்சு பிடிச்சிட்டேன். நடுவில் எவனோ ஒருத்தன் குறுக்கில வந்து அவனை வேற சுட வேண்டியதா போச்சு! ஆனா ஜானை விடவில்லை! அவனையும் சுட்டுட்டேன். ஆனா இரண்டு பேரும் இன்னும் சாகலை அதுக்குள்ளே நம்ம திட்டத்திட்ட முடிச்சிடலாம்! ஆமா, நீங்க எங்க இங்க?”

பேசிய ஜெயந்தை பார்த்து புன்னகைத்த பிஎஸ்வி ”கூடுதலா உன்னையும் பிரபாகரையும் முடிக்க வேண்டியது இருக்கே ஜெயந்த்! அதான் நான் வந்தேன்!”

“பாஸ்......”

துப்பாக்கியால் ஜெயந்தை குறிபார்த்துக் கொண்டே, “ப்ளடி ஷிட்! என்னையே பிளாக்மெய்ல் பண்ண நினைக்கிறீங்களா உங்களை விட மாட்டேன்.”

”பாஸ் என்னை மன்னிச்சிருங்க எல்லா திட்டமும் பிரபாகர்தான் பண்ணான். நான் ஏஞ்சலினா மட்டுதான் வேணும்னு நினைச்சேன் சாரி பாஸ் சாரி...”

 ”இதை என்னை நம்ப சொல்றியா? பிரபாகரை  இந்நேரம் முடிச்சிருப்பேன், இந்த மடப்பசங்க வேற வந்துட்டாங்க. யார்டா நீங்க, எதுக்கு இங்க வந்தீங்க”

யோகேஷ் “அது புதையல்.. எங்களுக்கு வேணும்” என உளறினான். செல்வாவும் பயத்துடன் ”அது ஒரு பழங்காலத்து புதையல் அதை எடுத்து வரப்ப இவங்க என்னை துரத்திகிட்டு....”

“புதையலா???” ஆச்சரியத்துடன் நகைப்பெட்டியை திறந்தார் பிஎஸ்வி. உள்ளே பழங்காலத்து நகைகள்! “அட! கொல்ல வந்த இடத்தில புதையலா?”

“பாஸ் என்னை மன்னிச்சிருங்க பிரபாகர்தான் எல்லாத்துக்கும் காரணம். எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு எதுவும் வேண்டாம் இந்த புதையல் எல்லாமே உங்களுக்குதான். நீங்க இந்த கொலைக்காக தரேன்னு சொன்ன பணம் கூட வேண்டாம். ஏஞ்சலினா மட்டும் தாங்க.”
“நாளைக்கு அவகிட்ட சொத்துல கையெழுத்து வாங்கிட்டு அவளை விக்கத்தானே போறீங்க என்கிட்ட கொடுத்திடுங்க. நம்ம ரகசியமும் போகாது ப்ளீஸ்” கெஞ்சினான் ஜெயந்த்.

யோசித்த பிஎஸ்வி “உன்னை நம்பலாமா?”

”நிச்சயமா நம்பலாம் எனக்கு எதுவும் வேண்டாம். ஐ நீட் ஏஞ்சலினா.. ஏஞ்சலினா ஒன்லி!!!”

நடப்பதையெல்லாம் மிகுந்த அதிர்ச்சியுடன் எதுவும் பேசமுடியாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சலினா. ராம் நீ எங்கே? இப்ப இங்க வந்துராதே! உனக்கும் ஆபத்து! என எண்ணிக் கொண்டிந்தாள்.

யோசித்து பிஎஸ்வி “உன் டீலுக்கு ஒத்துக்குறேன் ஜெயந்த்” என்று சொன்ன போது கதவு தட்டப்பட்டது.


***************************************************************

“மேடம்.. மேரி மேடம். நான் ராம் வந்துருக்கேன்! மேடம்... ”

கதவுக்கு வெளியே ராமும் அருண்பிரசாத்தும் நின்றிருந்தனர். கதவை திறந்தார் பிஎஸ்வி. அவரை அங்கே எதிர்பார்க்காத ராம் “சார் நீங்க இங்க எப்படி...”

பதில் சொல்லாது சைகையால் உள்ளே வரச் சொன்ன பிஎஸ்வியின் கண்களில் இருந்த கடுமையை கண்டு, அவரை பின் தொடர்ந்தான் ராம். அங்கே இருவர் கட்டி போடப்பட்டிருக்க, ஒருவன் துப்பாக்கி முனையில் ஏஞ்சலினாவை நிறுத்தியிருந்ததை பார்த்தார்கள் ராமும் அருணும்.

ராமை பார்த்தவுடன் ஏஞ்சலினா, “ராம்” என கூப்பிட்டாள். “உனக்கு இவனை தெரியுமா” என கேட்ட ஜெயந்திடம் “அவன் இவள் காதலன்” என்றார் பிஎஸ்வி.


ராமுக்கு எல்லாமே அதிர்ச்சியாக இருக்க, ஏஞ்சலினாவை நோக்கி “ஏஞ்சலினா” என கத்திக் கொண்டே அவன் நகர்ந்தபோது.......


அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான் அருண்பிரசாத்.............
 

“அடிங்! என்னா காதல் பொங்குதோ! ஓடுறே! உன்னை எதுக்கு கூட்டிட்டு வந்தா? நீ லவ் பண்ணுறியா?”

“அருண் நீயா ஏண்டா... ”

“ஹா... ஹா... ஹா! என்னடா பழகுன நண்பனே இப்ப இப்படி பண்ணுறானேன்னு பாக்குறியா? லூசே! இந்த கொலை திட்டத்தில் நீயும் ஒரு விக்டிம்டா! உனக்கு புரியலைல? சொல்றேன் கேளு”

“நான் ரிப்போர்டர் வேலை கூட இன்னோர் வேலையும் பார்த்துகிட்டு இருந்தேன்! அதான் பெரிய மனிதர்களின் அந்தரங்கங்களை தெரிஞ்சிகிட்டு பிளாக்மெய்ல் செஞ்சு பணம்பறிக்கிறது! அப்படி ஒரு தடவை ஆண்டர்சனை பின் தொடர்ந்தப்ப அவர் கள்ளக்காதல் விஷயம் தெரிஞ்சிச்சு! அவர் பிரசிடண்ட்றதுனால இதை அவர்கிட்ட பிளாக்மெய்ல் பண்ண ஒரு தயக்கம். அதான் எதிர்க்கட்சி தலைவர் எஸ்கேவை சந்திச்சேன். விஷயத்தை சொன்னேன் அவர் பெரிய திட்டம் போட்டார். எனக்கு பணமும் தந்தார். திட்டம் என்னான்னா சாம் ஆண்டர்சன் கள்ளக்காதல் உலகத்துக்கு தெரியிறப்ப அவர் உயிரோட இருக்க கூடாது. ஆனா அது கொலையாவும் இருக்க கூடாது. அதனால மேரிக்கு வேறொருத்தன் கூட பழக்கம் இருக்கிறது  தெரிஞ்சு ஆத்திரத்தில் அவனையும் மேரியையும் கொன்னுட்டு சாம் ஆண்டர்சன் தற்கொலை பண்ணிக்கிட்டார் அப்படின்னு மீடியாவும் அரசாங்கமும் நினைக்கிற மாதிரி இருக்கணும்கிறதுதான் திட்டம். அந்த இன்னொருத்தன், கள்ளக்காதலன் தாண்டா நீ!!!!” சிரித்தான் அருண்பிரசாத்.

“உன்னை இங்க மேரிகிட்ட சேர்த்தது அதுக்காகத்தான். இல்லன்னா உன்னை மாதிரி கேணையனையெல்லாம் இங்க வெளிநாட்டில் வேலைக்கு சேர்த்து விடனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? இன்னைக்கு இங்க வேலை அப்படின்னு வரச் சொன்னது என் ஏற்பாடுதான். இந்த பிஎஸ்வியும் அவர் ஆளுங்களும் மீதி பேரை முடிச்சிருவாங்க. என்ன பிஎஸ்வி நான் சொன்ன மாதிரி இவனை இங்க கூட்டிட்டு வந்துட்டேன் பார்த்தீங்களா நீங்கதான்  சொன்ன வேலை இன்னும் முடிக்கலை!”

ராம் அதிர்ச்சியுடன் பார்ப்பதை கண்ட அருண் பேசுவதை தொடர்ந்தான். “என்ன ராம் அப்படி பாக்குற! எடிட்டர்கிட்ட பேசுனேன்னா, ஹா ஹா அது பொய். நான் யார்கிட்டவும் எதுவும் சொல்லலை!!! இவரும் எஸ்கேவும் பேசுனதை கேட்டுட்டு நீங்க என்கிட்டேயே வந்து சொன்னீங்க நானும் உங்களை போலீஸ்க்கு போக விடாம பார்த்துகிட்டேன், பிஎஸ்விகிட்டயும் சொன்னேன். நடுவில் நீ எவனோ ஒருத்தன் சொன்னான்னு போலீஸ்கிட்ட போக பார்த்தே. உன்னை தடுத்து இங்க கூட்டி வரத்தான் நான் உன் கூடவே வந்தேன்! நான் போன் பேசுனது கூட பிஎஸ்வி கிட்டதான் உன்னை இங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லத்தாண்டா முட்டாள்! அங்க எதுவோ சொதப்ப இவளும் இங்க உன்னை பார்க்க வந்திட்டா போல”

ராம் அதிர்ச்சி கோபத்துடன்  அருண்பிரசாத்தை பார்த்தான்.

“ஹேய், எங்களை மீறி நீ எதுவும் பண்ண முடியாதுடா! என்ன, பிஎஸ்வி நீங்க மேரியை முடிச்சுட்டீங்களா”

“ஷி இஸ் ஆன் த வே டு ஹெவன்... நெக்ஸ்ட் இவன்தான்”

“ஏஞ்சலினா காதலனை என் கையாலையே கொல்றேன்” என சொல்லிகொண்டே துப்பாக்கியை குறிபார்த்தான் ஜெயந்த்.

“டுமீல்! டூமீல்!!!”

ஜெயந்த் கையிலிருந்த துப்பாக்கி எகிறி விழுந்தது. வாசலருகே பாண்டியனும் சதீஷும் நின்றிருந்தனர்.

“எல்லோரும் துப்பாக்கியை கீழே போடுங்க.. இந்த வீட்டை சுத்தி போலீஸ் ஸ்க்வாட் இருக்கு. யாரும் தப்பிக்க முடியாது.

போலீஸ் ஸ்குவாட் வீட்டில் நுழைந்தது. பாண்டியன் சதீஷ்க்கு பின்னால் மாதவன், பிரசாத், ரமேஷ் நின்றிருக்க.. மங்குனியும் பாபுவும் கையில் விலங்குடன் இருந்தனர்.



*********************************** முற்றும் ***********************************

பின் கதை:


அடுத்து வந்த சில நாட்களில் சில செய்திகள் மாற்றி மாற்றி வந்து கொண்டிருந்தன.......
 

“சாம் ஆண்டர்சன் கொலை முயற்சி! அவர் காதலியும் உதவியாளரும் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர்”

“சாம் ஆண்டர்சனை கொலை செய்ய முயன்றதற்காக எதிர்கட்சி தலைவர் எஸ்.கே, செக்யூரிட்டி ஆபிசர் பிஎஸ்வி, அவரின் உதவியாளர்கள் ஜெயந்த், பிரபாகர், ரிப்போர்ட்டர் அருண்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்”


“கள்ளக்காதல் அம்பலமானதால் ஆண்டர்சன் பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்தார். அரசியலுக்கும் முழுக்கு!”


”பழங்கால புதையலை சட்ட விரோதமாக அடைய முயற்சி செய்த புரொபசர் மங்குனி, செல்வா, பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புதையல் நகைகள் அரசு மியூசியத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது”


“நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான நாகா, யோகேஷ்க்கு 5 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்ரூவரான கூட்டாளி சௌந்தர்க்கு குறைந்தபட்ச தண்டனை கிடைத்தது.”


“போதை மருந்து குற்றவாளிகளை பிடித்ததற்காகவும், கொலை முயற்சியை தடுத்ததற்காகவும் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் சதீஷுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைத்தது.”


***************************************************

”பிரசாத் நாம நமக்கு சொந்தமில்லாத பொருள் மேல ஆசைப்பட்டா, என்ன நடக்கும்னு பார்த்தேயில்ல! ஏதோ அன்னைக்கு யாரையோ தேடி வந்த போலீஸ்க்கு நம்ம குரல் கேட்டு காப்பாத்துனாங்க. இல்லன்னா எல்லோரும் என்ன ஆகியிருப்போமோ!”

“புரிஞ்சிச்சு தாத்தா, நம்ம இனத்தின் கொள்கைபடி நானும் நேர்மையானவனா வாழ்வேன். நான் இனிமே அளவுக்கு மீறி ஆசைப்பட மாட்டேன். இனி கிடைக்கிறதை வச்சு சந்தோசமா வாழ்வோம்”


அங்கே வந்தார் ரமேஷ்.
  “பிரசாத்”

“சார் கிளம்பறீங்களா......!”


“ஆமா பிரசாத். எங்க பரம்பரைக்கு ஐஸ்வர்யம் கிடைக்கும்னு நினைச்சு தேடி வந்த புதையலை, வேண்டாம்னு கிளம்பறேன். செல்வம் மேல் அதிக ஆசைப்படுறதினால என்ன நடக்கும்னு எங்க மூதாதையர்கள் வாழ்க்கையிலும் இங்கு நடந்த நிகழ்வுகளிலும் தெரிஞ்சுகிட்டேன். சந்தோசம் பொருள்களால் வரதில்ல, நல்ல மனிதர்களால வருதுன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்.”


“அந்த புதையல் எங்க அரச பரம்பரைக்கு சொந்தம்னு விளக்கமா அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டிருக்கேன். ஒருவேளை அது கிடைச்சாலும் இங்க இருக்கிற ஏழை மக்களுக்கு பயன்படுற மாதிரி அதை பயன்படுத்துவேன். எனக்கு இங்க கிடைச்ச புதையல் உங்களை மாதிரி உறவுகள்தான்!”


நெகிழ்ச்சியுடன் மாதவனும் பிரசாத்தும் ரமேஷை வழியனுப்பினர்.


“இனி வருசாவருசம் இங்க வருவேன் நீதான் பிரசாத் எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டு போகனும் ஒரு டூரிஸ்ட் கைடா இல்ல ஒரு சகோதரனா!”



***************************************************

அதே பழைய லைட் ஹவுஸ்.

”ராம் என்னென்னவோ நடந்துபோச்சு. இப்ப எனக்குன்னு யாருமில்ல........இப்ப எனக்கு எனக்கு இருக்கிற ஒரே உறவு நீங்க மட்டும்தான்...”


“ஏஞ்சலினா அழாதே... இங்கே பார், என்னை பார். எனக்கும் நீதானே இருக்கே. அழாதே.........சரி ரொம்ப நாளா நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற அன்பை  வார்த்தைகளால நானும் சொல்லலை..நீயும் சொல்லவே இல்லை. இப்ப சொல்றியா?”


ஏஞ்சலினா வெட்கத்துடன் அமைதியாக தலைகுனிந்தாள்.


ராம் அவளருகே நெருங்கி அவள் கைகளை பற்றி மெல்ல முத்தமிட்டான். 


“ஏஞ்சல், ஐ லவ் யூ”

“ஐ டூ லவ் யூ ராம்”


--- THE END ---


--------------------------------------------------------------------------------------------------------

இத்துடன் கதை முடிகிறது.... ஆனா இங்கிலீஷ் படம் மாதிரி, படக் கடைசி ட்விஸ்ட் வேணுங்கிறவங்களுக்காக...
 
அந்த மியூசியம் நள்ளிரவில் அமைதியாக நின்று கொண்டிருந்தது. இருட்டில் குதித்தான் அவன். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த மொட்டைத் தலைக்காரன் கன்னத் தழும்பை கீறிக் கொண்டே மியூசத்தினுள் நுழைந்தான்..................................

 


இதையும் கதைன்னு மதிச்சு இத்தனை நாளா பொறுமையா படிச்ச உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன் எஸ்.கே



37 comments:

  1. வணக்கம் நண்பரே :)

    ReplyDelete
  2. இதையும் கதைன்னு மதிச்சு இத்தனை நாளா பொறுமையா படிச்ச உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்!
    அன்புடன் எஸ்.கே
    //

    நீங்க உங்க நன்றிய காசாவோ பணமாவோ கொடுக்கலாம்.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு..
    இன்னும் மூணு நாலு பாகமா பண்ணிட்டு, புஸ்தகமா பப்ளிஷ் பண்ண ட்ரை பண்ணலாமே !!
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இதையும் கதைன்னு மதிச்சு இத்தனை நாளா பொறுமையா படிச்ச உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்!//

    எதுக்கு... ஓசி சோறு சாப்பிட்டு ரொம்ப நாள் aachchaa ?
    அன்புடன் எஸ்.கே
    //

    நீங்க உங்க நன்றிய காசாவோ பணமாவோ கொடுக்கலாம்.

    ReplyDelete
  5. உங்களிடமிருந்து நிறைய இது மாதிரி எதிர் பார்க்கிறோம் எஸ் கே......

    ReplyDelete
  6. சூப்பர் எஸ்.கே....இன்னும் இதுபோல எழுதுங்கள்!

    ReplyDelete
  7. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    இதையும் கதைன்னு மதிச்சு இத்தனை நாளா பொறுமையா படிச்ச உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்!
    அன்புடன் எஸ்.கே
    //

    நீங்க உங்க நன்றிய காசாவோ பணமாவோ கொடுக்கலாம். ///

    இவருக்கு மட்டும் கசையடியா கொடுக்கலாம்!

    ReplyDelete
  8. //மாணவன் said...//
    ரொம்ப நன்றி நண்பரே!


    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
    ரொம்ப நன்றி நண்பரே!

    //நீங்க உங்க நன்றிய காசாவோ பணமாவோ கொடுக்கலாம்.//டிபனா கொடுத்தா வேணாம்னா சொல்ல போறீங்க?:-)))

    ReplyDelete
  9. //Madhavan Srinivasagopalan said...//

    புக்கெல்லாம் எதிர்காலம் முடிவு செய்யனும். இப்போதைக்கு இந்த வரவேற்பே போதும்.

    ReplyDelete
  10. //டெனிம் said...

    உங்களிடமிருந்து நிறைய இது மாதிரி எதிர் பார்க்கிறோம் எஸ் கே......//

    ரொம்ப நன்றி நண்பரே! தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே என்னை உற்சாகப்படுத்துகிறது!

    ReplyDelete
  11. //வைகை said...//
    ரொம்ப ரொம்ப நன்றிங்க!

    //ராஜகோபால் said...//
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. முதல் பார்ட்டுக்கு அப்புறம் இப்போதான் கவனிக்கறேன்.. மத்த பார்ட் எல்லாம் படிச்சுட்டு வந்து கமென்ட் போடறேன்..

    (நியூஸ் லெட்டர் மாதிரி அனுப்பினா கொஞ்சம் வசதியா இருக்கும்.. ஹி ஹி )

    ReplyDelete
  13. டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

    http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html

    ReplyDelete
  14. //அந்த மியூசியம் நள்ளிரவில் அமைதியாக நின்று கொண்டிருந்தது. இருட்டில் குதித்தான் அவன். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த மொட்டைத் தலைக்காரன் கன்னத் தழும்பை கீறிக் கொண்டே மியூசத்தினுள் நுழைந்தான்.......//

    இதுதான் ஹாலிவுட் படம்களா ? ஹி ஹி ஹி

    ReplyDelete
  15. கதையை சீக்கிரமா... ஆனால்,அருமையாக முடித்து விட்டீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கள். இன்னும் எழுதுங்கள்!

    ReplyDelete
  16. /// @ எஸ்.கே said...

    //Blogger பனங்காட்டு நரி said...

    யோவ் ..,இன்னா எழவு சாட் பாக்ஸ் ..,லாக் இன் கேக்குது ..,சரி விடு ..,பன்னி ப்ளாக் ல வந்து புலம்பினியே வந்தா ..சரி விடு ..:)))))))//

    நானும் பண்ணலாம்னு பார்த்தேன் கலர் கலரா நிறைய பேர் என்ன பண்ணுறதுன்னே தெரியலை:-))////////



    வருகைக்கு நன்றி பனங்காட்டு நரி ....
    இருகிரதுலையே ரொம்ப சுலபமான chatbox அது . நிஜமாவே நீங்க chat பண்ணனும்ன்னு நினைச்ச நான் சொல்லுறத பின்பற்றின போதும் . அங்க username ல உங்களுக்கு புடிச்ச பெயரை type செய்துட்டு , அதுக்கு கீழ ---> help · smilies · profile இதுல profile அ கிளிக் பன்னுநிங்கான அதுல உங்க பெயரை பதிவு செய்ய You are currently using the name (your name).
    Password protect it to keep it safe and to enable your Profile!

    Password:
    Confirm:

    அப்படினு வரும் , அதுல நீங்க உங்க புதிய password மற்றும் அதையே conform password குடுத்த வேலை முடிந்தது . அதுக்கு அப்புறம் நீங்க இஷ்ட்டம் போல chat பண்ணலாம் .
    no need to give any mail id to register and all .
    very simple to register .
    1. just give name in user name
    2. click on profile
    3. give password & conform password
    thats all to register .

    இந்த சட்பாக்ஸ் ஒரிஜினல் இணைய தளம் : www.tamilrockzs.com

    thank you

    ReplyDelete
  17. கதை சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  18. படிக்க மறந்து விட்டது - திரும்பி வருகிறேன்.

    ReplyDelete
  19. கொஞ்சம் நீண்டாலும் நன்றாக வந்திருக்கிறது. flipping book நல்ல உத்தி. (எப்படித் திறப்பது என்று தான் தெரியவில்லை. ரார் என்றால் என்ன வகை file?)

    ReplyDelete
  20. அனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
    என்னோட புது வருட பதிவையும் பாருங்க....
    என் உயிரே

    ReplyDelete
  21. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

    ReplyDelete
  22. இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவின் நடை அருமை..பகிர்தலுக்கு நன்றி.

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  23. சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகை தந்து என் மகளை வவாழ்த்தியதற்கு நன்றி

    ReplyDelete
  24. //
    Madhavan Srinivasagopalan said...

    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இதையும் கதைன்னு மதிச்சு இத்தனை நாளா பொறுமையா படிச்ச உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்!//

    எதுக்கு... ஓசி சோறு சாப்பிட்டு ரொம்ப நாள் aachchaa ?
    அன்புடன் எஸ்.கே
    //

    நீங்க உங்க நன்றிய காசாவோ பணமாவோ கொடுக்கலாம்.

    //

    செக் னாகுட ஓகே

    ReplyDelete
  25. கதை அருமையாக இருந்தது.

    ReplyDelete
  26. லேட்டா வந்தேனா , கடைசி ரொமான்ஸை மட்டும் ரசிச்சேன்.
    சீக்கிரமே அடுத்த பதிவை ( தொடர் வேண்டாம் ) ஆரம்பிங்க எஸ்.கே.

    ReplyDelete
  27. ரொம்ப பெருசுங்க...

    Free-ஆ இருக்கும்போது வந்து படிக்கிறேன்..

    ReplyDelete
  28. திரில்லர் நாவல் நல்லா இருக்குங்கோ...

    ReplyDelete
  29. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    More Entertainment

    www.ChiCha.in

    ReplyDelete
  30. கொஞ்ச கொஞ்சம சொன்னிகன படிக்கவும் புரிஞ்சிக்க முடியும் ரொம்ப அதிகம்

    ReplyDelete