Thursday, February 10, 2011

BLACK RIVER - அத்தியாயம் ஒன்று

 நண்பர்களே சினிமாட்டிக்காக ஒரு சிறு திரில்லர் கதை முயற்சி. ஏழு பாகம் கொண்ட கதை. சில நம்ப முடியாத விஷயங்கள் வரலாம். லாஜிக் பார்க்காம படிங்க! நம் வலைப்பூ நண்பர்களின் பெயர்களையே கதாபாத்திரங்களுக்கு வைத்துள்ளேன். படித்து கருத்து கூறுங்கள்! நன்றி!

முன் கதை:

கிபி 1758. இந்தியப் பெருங்கடல்.
அந்த நடுக்கடலில் ஒரு கப்பல் அபாயகரமான சப்தங்களுடன் வீற்றிருந்தது. ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த கப்பலில் மரண ஓலமும் வாள் வீச்சின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. கேங்குலா நாட்டை சேர்ந்த அக்கப்பலை கடல் கொள்ளையர்கள் முற்றுகையிட்டிருந்தனர். கொள்ளையர்களிடையே ஒரு சிறு சலசலப்பு. அவர்கள் தேடிவந்த முக்கியமான பெட்டியை காணவில்லை! ஒரு கொள்ளையன் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு படகை கண்டான்.....

----------------------------

படகு அத்தீவை அடைந்தது. அதிலிருந்து இறங்கிய அவ்வீரனின் நெஞ்சில் கேங்குலா நாட்டு ராஜமுத்திரை இருந்தது. அவன் சிறிது யோசனை செய்தான். பிறகு வேகமாக பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடினான்.
----------------------------
இன்னொரு படகும் அத்தீவை அடைந்தது அதிலிருந்து சில கொள்ளையர்கள் இறங்கினர்.

”அந்த வீரன் இங்கே தானே  வந்தான்?” “ஆம் தலைவா” “தேடுங்கள் அவனை விடாதீர்கள். அவன் கையில் இருக்கும் பெட்டி என்னிடம் வர வேண்டும்!”

கொள்ளையர்கள் அவ்வீரனை தேடி தீவில் ஓடினர்.
----------------------------

தீவின் மற்றொரு பக்கம் கேங்குலா நாட்டை சேர்ந்த வேறு சில வீரர்களும் வந்திறங்கினர்.

”இளவரசர் இங்கேதானே வந்தார்” ”ஆமாம்” “ஜாக்கிரதை கொள்ளையர் கூட்டமும் இங்கு வந்துள்ளது அவர்கள் கையில் இளவரசர் சிக்கும் முன் நாம் அவரை காப்பாற்றியாக வேண்டும்.”

----------------------------

”இளவரசே, தாங்கள் இங்கிருக்கீறீர்களா”

“வீரனே நம் நாட்டின் பொக்கிஷத்தை நம்பிக்கை மிகுந்த நபரிடம் ஒப்படைத்துள்ளேன் . அவ்விடம் பற்றிய குறிப்புகள் என்னிடம் உள்ளன. இதை அரசரிடம் சேர்த்து விடு. நிறங்கள் என்பதை நினைவில் வைக்கச் சொல். என்னைப் பற்றிக் கவலைப்படாதே! செல் சீக்கிரம் செல்”

கொள்ளை கூட்டம் இளவரசை கண்டு ஓடி வந்தது. வீரன் அவனிடமிருந்து ஓடினான். திரும்பி பார்த்தான் அங்கே இளவரசர் அக்கொள்ளையர்களால் வெட்டப்படுவது தெரிந்தது. கண்களில் கண்ணீருடன் அந்த மலைத் தொடரை நோக்கி தன் சகாக்களை நோக்கி அவன் ஓடினான்.

அப்போது ஒரு கொள்ளையன் விட்ட அம்பு அந்த வீரனை துளைத்தது. அவன் கையில் இருந்த அந்த குறிப்புகள் மலையின் மறுபக்கம் விழுந்து இருளில் மறைந்தது.

அவனை நோக்கி ஓடி வந்த சகாக்களிடம் “நிறங்கள்” என்ற ஒற்றை வார்த்தையை கூறி விட்டு இறந்து போனான் அவன்.


------------------------------------------------------------------------------------------------------------------


அத்தியாயம் ஒன்று

ராம் அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தன் வேலைகளை செய்து கொண்டே அவளுக்காக காத்திருந்தான். ராம் என்கிற ராம்சாமி சிறு வயதில் இருந்து எந்த இன்பத்தையும் அனுபவிக்காதவன். அவனின் ஒரே சொந்தம் பாட்டி மட்டும்தான். சிறு வயதில் நண்பர்கள் உறவு கூட அவனுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்தியாவில் ஏதோ வாழ்க்கையை செய்து கொண்டு நாளை ஓட்டி கொண்டிருந்த ராமை ஒரு நாள் அவனின் பால்ய கால நண்பன் அருண் பிரசாத் பார்க்க வந்தான். மொரீசியசில் அவன் பெரிய ரிப்போர்ட்டர். அங்கே வேலை இருப்பதாகவும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினான். ஏற்கனவே சில பேரை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளான். ராம் வேலைக்காக அங்கே செல்லவில்லை. புது நபர்கள் அங்கேவாவது அவன் விரும்பிய அன்பு கிடைக்காதா என்றுதான் சென்றான். அவன் எண்ணம் பொய்க்கவில்லை.

இந்த வேலை அவனுக்கு பிடித்து போனதற்கு மேரி மேடமும் ஒரு காரணம். அவர்தான் இந்த கடையின் உரிமையாளர். அதிகமாக கடைக்கு வர மாட்டார்கள். அவருக்கு என்று குடும்பம் எதுவுமில்லை. அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். அவரின் வீட்டில் சில வேலைகள் செய்ய எப்போதாவது ராம் செல்வான். இங்கே ஒரு சில நண்பர்களும் கிடைத்தார்கள். ஆனால் அவன் மனதில் காதல் வந்தபோது எல்லாம் மேலும் இனிமையானது......

ஏஞ்சலினா. பெயரை போலவே அழகானவள். அவளுக்கும் இவனுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை அன்பிற்காக ஏங்குவதுதான். அவள் மாமா பெரிய செக்யூரிடி ஆபிசர். பிஎஸ்வி எனும் தன் பெயரில் நிறுவனம் வைத்துள்ளார். அவளுக்கும் தாய் தந்தை கிடையாது. இந்திய வம்சாவளி சேர்ந்தவள்தான் அவள். அன்பாக ராமிடம் பழகினாள், ராமும்....

ராம் நாளடைவில் ஏஞ்சலினாவை காதலிக்க ஆரம்பித்து விட்டான். அவளும் காதலிப்பது போலத்தான் தெரிகிறது. ஆனால் இதுவரை இருவருக்குமே காதலை சொல்ல தைரியம் வரவில்லை. இதோ அவள் வந்து விட்டாள்.

“ராம் எப்படி இருக்கீங்க?” “நேற்றுதானே பார்த்தோம்!” அவள் சிரித்தாள்.

“ராம் நாளைக்கு மாலை பழைய லைட் ஹவுஸ்க்கு வரீங்களா?” “என்ன விஷயம்”

“ரொம்ப நாளா நான் சொல்வேன்னு நீங்களும் நீங்க சொல்வேன்னு நானும் காத்திருக்கிற ஒரு விஷயத்துக்காக” ”கண்டிப்பா வரேன்”

அவள் ஒரு வெட்கச் சிரிப்புடன் வேகமாக திரும்பிச் சென்றாள். ராம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.

----------------------

பிரசாத் காத்திருந்தான். யாருக்காக என்றே அவனுக்கு தெரியவில்லை. அவன் செய்யும் தொழில் டூரிஸ்ட் கைட். தினமும் யாராவது சுற்றுலா பயணியை பார்ப்பான் இடங்களை சுற்றி காட்டுவான். சிலர் விரும்பினால் அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை கூடவே இருந்து வசதிகளை செய்து கொடுப்பான்.

அவன் தன் வேலையை திட்டினான். ஏழையாய் பிறந்த தன்னை திட்டினான்.  ஏழையாய் பிறந்த தன் தந்தையை, இப்போது ஒரே சொந்தாமாக இருக்கும் தாத்தாவை திட்டினான். பிரசாத் சிறு வயதிலிருந்தே வறுமையின் கொடுமையை அனுபவித்துள்ளான். அவனுக்கு நன்றாக பணம் புகழுடன் வாழ ஆசை. இயலாமையால் எதைக் கண்டாலும் கோப்படுவான்.

இதோ இப்போதும் அவனுக்கு எதிரே தூரத்தில் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அவர் எதிர்க்கட்சி தலைவர் போல ஆளுங்கட்சியின் குறைகளை சொல்லிக் கொண்டிருந்தார். நான் யாரை யாரிடம் குறை சொல்வது. அவரின் கைத்தடிகள் ”சாந்தகுமார் வாழ்க” “எஸ்.கே வாழ்க” என கத்தி கொண்டிருந்தனர். தன்னையும் யாராவது “பிரசாத் வாழ்க” என கத்த மாட்டார்களா என நினைத்தான்.

காலையில் கூட பேப்பரில் ஒரு அறிவிப்பு. மூன்று குற்றவாளிகளை பிடித்து தந்தால் பரிசாம். அவர்களை பிடித்து தந்தால் கொஞ்ச நாள் கஷ்டமில்லாமல் இருக்கலாம். அவர்களை நினைவில் வைத்துள்ளான். பேர் நாகா, சௌந்தர், யோகேஷாம். பார்க்கலாம். எங்கேயாவது பார்த்தால் எப்பாடுபட்டாவது பிடித்து விட வேண்டியதுதான்.

பல வித யோசனைகளுடன் இருந்த பிரசாத்தை நோக்கி அந்த சிவப்பு சட்டை அணிந்த நபர் புன்னகையுடன் வந்தார்.

“எக்ஸ்க்யூஸ் மி சார்! எனி கைட்ஸ் ஆர் அவைலபிள் ஹியர்?”   “வெல்கம் சார்! ஐயம் ஆல்சோ எ கைட்!”

“கிரேஷியஸ்! கேன் யூ கைட் மீ டு சீ சம் பிளேசஸ்?” “யெஸ் சார் இட்ஸ் மை ட்யூட்டி!”

“தேங்க்யூ! மை நேம் இஸ் ருமேஷ்”  “ரமேஷ்?”  “நோ ருமேஷ். பட் யூ கேன் கால் மீ ரமேஷ்”

“ஓகே ஐ திங்க் இட்ஸ் எ நேம் இன் இந்தியா” ரமேஷ் புன்னகைத்தார். “ஐ நோ இந்தியன் லாங்குவேஜஸ் ஆல்சோ”

“ஓ! டூ யூ நோ தமிழ்?” “ம் நல்லா தெரியும்”

“ரொம்ப சந்தோசம் சார் முதல்ல எங்கே போகனும்” “ஒரு நல்ல ஹோட்டலுக்கு”
----------------------

இந்தியா.

புரொபசர் மங்குனி யோசனையுடன் உட்கார்ந்திருந்தார். அழைப்பு மணி சத்தம் கேட்டது. கதவை திறந்தார். இருவர் நின்றிருந்தனர்.

“வா பாபு, வா செல்வா உள்ளே வாங்க”

“எப்படி இருக்கீங்க சார்” “நல்லா இருக்கேன்”

அவர்கள் இருவரும் உட்கார்ந்த பின் கேட்டனர்.

“எங்களை எதுக்கு சார் ஒரு மாசம் லீவ் போட்டுட்டு வரச் சொன்னீங்க? ஏதோ வெளிநாட்டு பயணம்னு வேற சொன்னீங்க.”
“நம்ம மூணு பேருக்கும் விசா டிக்கெட்டெல்லாம் ரெடி பண்ணிட்டேன். நாம மூணு பேரும் உடனே மொரிஷியஸ் போறோம்”

“மொரீஷியசா? எதுக்கு?”

“புதையல் வேட்டைக்கு!”

(தொடரும்..........................)


PDF VERSION DOWNLOAD                  FLIPPING BOOK VERSION DOWNLOAD

43 comments:

 1. யாருமே இல்லாத கடைல வடை வாங்கிய அருண் வாழ்க

  ReplyDelete
 2. ஹலோ... யாராச்சும் இருக்கீங்களா.....

  ReplyDelete
 3. யாருமே இல்லையின்னா -- வடைய நீ திருடிட்டீங்களா ?

  ReplyDelete
 4. நல்ல முயற்சிதான்.. அசத்துங்க.. நானும் வருவேனா?

  ReplyDelete
 5. //Arun Prasath said...//
  welcome to ethuvum nadakkalam!

  //Madhavan Srinivasagopalan said...//
  படைக்கு பிந்து வடைக்கு முந்து!

  //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //
  You are a Genius!

  //பிரியமுடன் ரமேஷ் said..//
  ரொம்ப நன்றிங்க! ம்.. ரமேஷ்ங்கிற கேரக்டர் வரும். அப்படின்னா நீங்களும் வரலாம்:-)

  ReplyDelete
 6. ஆரம்பமே சூப்பரா இருக்கு எஸ்.கே.....

  ReplyDelete
 7. //வைகை said...//
  ரொம்ப நன்றிங்க!

  முழுசும் படிச்சிட்டு சொல்லுங்க! மொத்தம் ஏழு பாகம் வரும்!

  ReplyDelete
 8. அதிகமா கேப் விடாம போடுங்க......

  ReplyDelete
 9. இல்லை தினம் ஒன்னு போட்ருவேன். எல்லாம் எழுதி வச்சாச்சே!:-)

  ReplyDelete
 10. ரமேசுனாவே பீட்ருதானோ?

  ReplyDelete
 11. ஆரம்பமே அசத்தலா இருக்கு. தொடருங்கள்.

  ReplyDelete
 12. எஸ்.கே said...
  இல்லை தினம் ஒன்னு போட்ருவேன். எல்லாம் எழுதி வச்சாச்சே!:-) ////

  பதிவுக்கு கீழ PDF பண்ற மாதிரி ஏதாவது செய்யலாமே? we can make and save for own

  ReplyDelete
 13. //Lakshmi said...

  ஆரம்பமே அசத்தலா இருக்கு. தொடருங்கள்.//
  ரொம்ப நன்றிங்க!

  ReplyDelete
 14. //பதிவுக்கு கீழ PDF பண்ற மாதிரி ஏதாவது செய்யலாமே? we can make and save for own//

  சரிங்க அது மாதிரி வைச்சிடுறேன்!

  ReplyDelete
 15. எஸ்.கே said...
  //பதிவுக்கு கீழ PDF பண்ற மாதிரி ஏதாவது செய்யலாமே? we can make and save for own//

  சரிங்க அது மாதிரி வைச்சிடுறேன்! ///

  Thanks S.K

  ReplyDelete
 16. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...இதே அசத்தலோடு தொடருங்கள்..

  ReplyDelete
 17. இந்த படம் நல்லா இருக்கே நம்மளுக்கும் நடிக்க சான்சு கெடைக்குமா ?

  அடுத்த ஷூட்டிங் எப்போன்னு சொல்லுங்க நான் வந்து கிளாப் அடிக்கிறேன் ....................

  ReplyDelete
 18. //பாரத்... பாரதி... said...

  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...இதே அசத்தலோடு தொடருங்கள்..//

  ரொம்ப நன்றி! மொத்தம் ஏழு பாகம்தான்!

  ReplyDelete
 19. //Blogger அஞ்சா சிங்கம் said...

  இந்த படம் நல்லா இருக்கே நம்மளுக்கும் நடிக்க சான்சு கெடைக்குமா ?

  அடுத்த ஷூட்டிங் எப்போன்னு சொல்லுங்க நான் வந்து கிளாப் அடிக்கிறேன் ....................//

  மிக்க நன்றி! அடுத்த படத்தில் நீங்கள் வில்லனாக இருங்கள்!:-)

  ReplyDelete
 20. புரொபசர்க்கு ஏன் மங்குனி அப்படினு பேரு வெச்சுருக்கீங்க... கதையை மொரீஷியஸ் பக்கமா நகர்த்துறீங்களே நம்ம அருண் பிரசாத்கிட்ட விசா வாங்குனீங்களா?

  ReplyDelete
 21. நம்மளுக்கும் நடிக்க சான்சு கெடைக்குமா ?

  ReplyDelete
 22. //புரொபசர்க்கு ஏன் மங்குனி அப்படினு பேரு வெச்சுருக்கீங்க... கதையை மொரீஷியஸ் பக்கமா நகர்த்துறீங்களே நம்ம அருண் பிரசாத்கிட்ட விசா வாங்குனீங்களா?//

  அந்த பேர் நல்லா இருந்தது அதான். அருண்பிரசாத்கிட்டலாம் கேட்டுட்டேன். அவரே கதையில் வராரே:-)

  ReplyDelete
 23. //நம்மளுக்கும் நடிக்க சான்சு கெடைக்குமா ?//
  எல்லோருக்கும் உண்டு!:-)

  ReplyDelete
 24. //நாகராஜசோழன் MA said...

  தொடருங்க எஸ்கே.//

  நன்றி நாகா. நீங்க சொன்ன சின்ன சின்ன திருத்தங்கள் செய்துதான் போட்டிருக்கேன்!

  ReplyDelete
 25. நல்லாருக்கு நண்பரே,

  தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் :))

  ReplyDelete
 26. அப்பா ஒருவழியா போட்டுட்டாரு எஸ்கே....

  ReplyDelete
 27. அந்த ராம்சாமி என்ற ராம், நாந்தானே? ஹி....ஹி.....

  ReplyDelete
 28. தொடரட்டும் உங்கள் விறுவிறுப்பான பணி.....

  ReplyDelete
 29. //மாணவன் said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 30. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...//
  நன்றி ராம்.
  நீங்கதானே கதையின் மெயின் ஹீரோ!:-)

  ReplyDelete
 31. ரம்பமே கலக்கல்.... ஆவலோடு காத்திருக்கிறோம் அடுத்த பகுதிக்கு..

  ReplyDelete
 32. நலமா :)
  அட சூப்பர் எனக்கும் ஒரு கேரக்டர் கொடுங்க ;)

  ReplyDelete
 33. ஏஞ்சலினானு ஒரு பதிவரா?

  கதை சுவாரசியமா தொடங்கியிருக்கு.

  ReplyDelete
 34. //Blogger Madhavan Srinivasagopalan said...//
  மிக்க நன்றி மாதவன்!

  ReplyDelete
 35. //Blogger Prasanna said...//
  நலமாக உள்ளேன். நீங்க எப்படி இருக்கீங்க?

  அடுத்த கதையில் கேரக்டர் தந்தா போச்சு!:-)

  ReplyDelete
 36. //Blogger அப்பாதுரை said...//
  ஹி..ஹி.. ஏஞ்சலினானு பதிவர் இல்லீங்க! இரண்டு மூன்று கேரக்டர்க்கு மட்டும் கற்பனை பெயர்கள் மீதி எல்லாம் நம் பதிவர்கள் பெயர்கள்தான்!:-)

  ReplyDelete
 37. good start!! interesting!!

  naanga angelina jolie aa katpanai seithukittom!! ;-)

  ReplyDelete
 38. hahaha...

  sema interesting

  nala humar sense..

  really interesting

  keep on rocking brother.

  sorry tanglish comment.

  ReplyDelete
 39. எனக்கும் ஒரு கேரக்டர் கொடுங்க....
  (nalla puthi saliyana kolanthai charcter ok)

  ReplyDelete