Monday, February 14, 2011

BLACK RIVER - அத்தியாயம் மூன்று

தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!


அத்தியாயம் - 3

ராம் ஒரு உற்சாகத்துடன் ஏஞ்சலினா வீட்டை அடைந்தான். அவள் அவனுக்காகவே புன்னகை ஏந்தி காத்திருந்தாள். ராம் நாம் அங்கே போய்டுவோம் என அவள் மாமா கட்டியிருந்த அந்த தனி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.


அவள் வெகுநேரம் மவுனமாக நடந்தாள். பின் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். கதவு தானா பூட்டிக் கொண்டது. ராம் பயந்தான். ஏஞ்சலினா தன்னிடம் ஒரு சாவி இருப்பதாகவும் அதனால் போகும்போது திறந்து கொள்ளலாம் என சொன்னாள். ராம் சந்தோசம், பயம் இவை கலந்த மனநிலையில் இருந்தான்.

“ராம் ”

”என்ன ஏஞ்சலினா”
“இந்த வீடு எனக்கு சந்தோசம் துக்கம் இரண்டையும் கொடுத்த வீடு!”


“என்ன சொல்ற”

“ஆமாம் ராம் என் சின்ன வயசிலேயே என் அம்மா அப்பா இறந்துட்டாங்க. என் மாமா என் அம்மா கூடப் பிறந்தவர். திருமணமே செஞ்சுக்கலை. என்னை வளர்த்தார்”
“அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டானவர். பிஎஸ்வின்னு சொன்னா எல்லோரும் நடுங்குற அளவுக்கு பயங்கரமான போலீஸா இருந்தவர். அப்புறம் கொஞ்ச நாள்ல அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு சொந்தமா செக்யூரிடி நிறுவனம் தொடங்கினார். எதுக்குன்னு தெரியலை.”

“பெரும்பாலும் எனக்கு எல்லாமே செஞ்சார். ஆனா ரொம்ப கட்டுப்பாடு அதிகம். எல்லாம் என் மேலே இருக்கிற அன்பினால செய்யறார்னு நினைச்சேன் ஆனா அது என் பேர்ல இருக்கிற சொத்துக்காகத்தான்னு பின்னாடி புரிஞ்சது. இன்னும் இரண்டு நாளில் என் பிறந்தநாள் வரப்போகுது. அப்ப எனக்கு 21 வயசு. எனக்கு 21 வயது முடிஞ்சவுடன் என் சொத்தை யாருக்கு வேணா எழுதலாம்கிறது என் அப்பா எழுதி வச்ச உயில் அதை அவரு பேருக்கு மாற்றும் வரைக்கும்தான் நான் நல்லா இருக்க முடியும்....”

சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள் ஏஞ்சலினா.

”ஏஞ்சல், அழாதே நான் இருக்கேன் உனக்கு”
 
“ராம் எனக்கு எப்ப கஷ்டம் வந்தாலும் என் அப்பா அம்மாவோடபொருட்களை வச்சு பார்த்துகிட்டு இருப்பேன். ஒரு நாள் அதை என் மாமா கோபத்தில் இங்கே கொண்டு வந்து போட்டுட்டார். அப்புறம் அவருக்கு தெரியாம ஒரு டூப்ளிகேட் சாவி ரெடி பண்ணிணேன் அப்பப்ப இங்க யாருக்கும் தெரியாம வந்து இருப்பேன்”


“இதான் என் மாமா அவர் நண்பர்களோடு பேசும் அறை.” அதற்கு அருகிலிருந்து ஒரு அறைக்குள் நுழைந்தாள். அதில் குப்பைகள் கொஞ்சம் இருந்தன. அதில் ஒரு ஃபோட்டோவை எடுத்தாள்.

“இதான் என் அம்மா அப்பா இது அவங்க என் பிறந்த நாளுக்கு கடைசியா கொடுத்த கிஃப்ட்”
அதை பார்த்து விட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“ஏஞ்சலினா அழாதே இனி உனக்கு நான் இருக்கேன். உன் மாமாகிட்ட இருந்து நான் உன்னை காப்பாத்துறேன்.”
அவளுக்கு ஆறுதல் சொன்னான். அவள் சமாதானமாகினாள். அவள் அவன் கண்ணை பார்த்தாள். அவனும்... ராம் மெதுவாக கையை எடுத்து அவள்கையை பிடித்தான், அவளை நெருங்கி அணைக்க....

க்றீச்ச்ச்ச்.....

வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

-------------------------------------------------------------------------

”நாகா நாம எவ்வளவு கஷடப்பட்டு அந்த இரண்டு போலீஸ்காரங்க கிட்ட இருந்து தப்பி வந்தோம்னு தெரியுமில்ல. யோகேஷ்க்கு வேற அடிபட்டிருச்சு”

“அது சின்ன காயம்தானே சரியாயிடும்.”

“நாகா நீ இன்னும் பிரச்சினையின் வீரியத்தை புரிஞ்சுக்கலையா இல்லை. ஆணவத்தில இருக்கியா!”

“சௌந்தர் என்ன நீ நாகாவை இப்படி பேசறே”

“யோகேஷ் உனக்கு அடிபட்டிருக்கு அப்பவும் புரியலையா பயமா இல்லையா”
யோகேஷ் சிரித்தான் “இதோ பார் சௌந்தர்!  மேட்டர் சீரியஸ்தான். ஆனா அதிலதான் த்ரில்லே இருக்கு! அந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் முகத்தில் பலமா வெட்டுக்காயம் ஏற்படற அளவுக்கு நாகா அடிச்சுருக்க கூடாதுதான். ஆனா செஞ்சுட்டான் அதுக்காக இப்ப அவனுக்கு பயப்பட முடியுமா”


அமைதியாக இருந்த நாகா “என்ன சௌந்தர் சமீப காலமா உன் பேச்சுக்களே சரியில்லையே நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான் இன்னும் 2 மாசத்துக்கு நாம செய்ய வேண்டிய டிரக் டீலீங் நிறைய இருக்கு அதை முடிக்கும் முன்னாடி நீ எங்களை விட்டு போக  முடியாது அப்படி போக நினைச்சே நீ அவ்வளவுதான்!”

சௌந்தர் அமைதியாக இருந்தான்.

”என்ன சௌந்தர் நாகா கேட்கிறான்ல சொல்லு வேலை முடிகிற வரைக்கும் எங்க கூட நாங்க சொல்ற மாதிரி இருப்பியா”

“இருப்பேன்” என்று கடுமையாக கூறிய சௌந்தரின் மனதில் வேறு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

-------------------------------------------------------------------------

அவன் கையில் கத்தி இருந்தது மூர்க்கமாக அதை தன் கைவிரல்களில் இடையே மாற்றி மாற்றி குத்திக் கொண்டிருந்தான்.

“எனக்கு கிடைக்க மாட்டாளா கிடைப்பா எப்படி கிடைக்காமா போய்டுவா”

அவன் வாய் சப்தமில்லாமல் இதை முணுமுணுத்தாலும் அதில் இருந்த கோபம் பயப்பட வைத்தன.

திடீரென செல்ஃபோன் ஒலித்தது.

“ஹலோ ஜெயந்த் எங்கே இருக்க”

அவன் கைகளில் இருந்த கத்தியை கோபமாக காற்றில் வீசிக் கொண்டே “சொல்லுடா பிரபா நான் ஸ்டீவ் பார்க்கில் இருக்கேன். நீ ஏன் இன்னும் வரலை.”

“கொஞ்சம் இங்கே வேலை அதான், சரி அரை மணி நேரத்தில வந்துருவேன் சாயங்கலாம் மாஸ்டர் பிஎஸ்வியை பார்க்க போகனும் ஞாபகம் இருக்கில்ல.”

“ம் இருக்கு”

”ஏண்டா கோபமா இருக்கே.... அந்த ஏஞ்சலினா விஷயமா”

“ஆமா அவளை கல்யாணம் பண்ணித் தரச்சொன்னா நீ ஒரு அடியாள் அந்த வேலையை மட்டும் பாரு மத்ததுக்கெல்லாம் ஆசைப்படாதேங்கிறான் அந்த பிஎஸ்வி”
“ஜெயந்த் கவலைப்படாதே உனக்கு ஒரு விஷயம் தெரியுமா. ஏஞ்சலினாவோட இந்த பிறந்த நாள்ல சொத்தை தன் பேருக்கு மாத்திட்டு அவளை யாருக்கோ விக்க போறார் அவர்”

“என்னடா சொல்ற”

“ஆமா அதனால நாம ஏஞ்சலினாவை அடையறுது கொஞ்சம் ஈஸிதான் அது மட்டுமில்லாம ஏதோ ஒரு விஷயத்துக்காக 2-3 மாசமா நமக்கு பயிற்சி குடுக்கிறார் அது என்ன விஷயம்னு இன்னிக்கு தெரியும்னு நினைக்கிறேன் இதெல்லாம் வச்சு பிளாக்மெயில் பண்ணி பணம் பறிக்கலாம்னு நினைக்கிறேன் நீ அப்படியே ஏஞ்சலினாவை மிரட்டி வாங்கு!”

“டேய் நீ சொல்றது நல்ல ஐடியாதான். சரி நீ சிக்கிரம் வா”

ஜெயந்த் இப்போ சந்தோசம் மற்றும் குரூரத்துடன் மீண்டும் கைகளிடையே குத்த ஆரம்பித்தான். திடீரென ஒரு விரலின் ஓரத்தில் ரத்தம் வந்தது அவன் கத்தாமல் அமைதியாக குரூரமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வழியே சென்ற ஒருவன் அதை பார்த்து பயத்துடன் அமைதியாக சென்றான்.

-------------------------------------------------------------------------

அதே ஸ்டீவ் பார்க்கின் மற்றொரு பக்கம் மங்குனியும் பாபும் உட்கார்ந்திருந்தார்கள்.

“சார் அடுத்த லைன்  2fluid running in moving flow in this non moving”

“2 படத்தோட எண்ணிக்கையை குறிக்குது அது என்ன ஓடுற இடத்தில் ஓடும் திரவம் ஓடாத இடத்தில் ஓடுது புரியலையே பாபு”

“என்ன திரவம் அது”

“இந்த செல்வா எங்கே கூல்ட்ரிங் வாங்க போனவன் இன்னும் காணோம்”

அப்போது செல்வா திகிலடைந்த முகத்துடன் வந்தான்.

”என்ன செல்வா ஒரு மாதிரியா இருக்கே”

‘வரப்ப ஒருத்தனை பார்த்தேன் கையில வேகமாக கத்தியால குத்திகிட்டு இருந்தான் கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டுது. சத்தமே போடாம அமைதியா மரம் மாதிரி இருக்கான். கண்ணில் குரூரம், அப்பபா! ஏதோ சைக்கோ போல!”

“ரத்தம்... மரம்,,,,,சார் ஐ காட் இட்” பாபு கத்தினான். ”என்ன பாபு”

“ஓடுற இடத்தில் ஓடும் திரவம் ஓடாத இடத்தில் ஓடுது  அது ரத்தம் இங்கே ப்ளீடிங் ட்ரீன்னு ஒரு ரத்தம் ஒழுகும் மரம் இருக்கு”

“என்ன ரத்தம் ஒழுகும் மரம் அதுவா”

“ஆமா சார் அது உண்மையான ரத்தமான்னு தெரியலை ஆனா பல நூற்றாண்டுகளாய் அது இருக்கு! அது ஒரு மரம்தானே சோதனை பண்ணி பார்ப்போம் இருந்தா இருக்கலாமில்லையா!”

மங்குனி ”சரி அப்ப வாங்க உடனே கிளம்பலாம்”

மூவரும் பார்க்கிற்கு வெளியே இருந்த வண்டியில் கிளம்பினார். அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த ரமேஷும் கிளம்பினார்.

-------------------------------------------------------------------------

“சதீஷ் அவங்க மட்டும் என் கையில் மாட்டுனாங்க அவ்வளவுதான்!”

“சார் நீங்க ரொம்ப அதிகமா கோவப்படுறீங்க”

”வெட்டு உன் மூஞ்சில விழுந்திருந்தா தெரியும்! மவனே அந்த நாகா என் கையில மாட்டட்டும்!”

“சார் விடுங்க சார் அவங்க மாட்டுறப்ப கோபத்தை காமிக்கலாம்”

“சே நேத்து கூட தப்பிச்சுட்டானே”

“நான் கிளம்பறப்பயே சொன்னேன் போலீஸ் படையோட போகலாம்னு நீங்கதான் தன்மானம் அப்படி இப்படின்னு தனியா போய் கோட்டை விட்டுட்டோம்”

“அவனுங்க நல்லா சண்டை போடுறாங்க ஆனா அடுத்த தடவை அது அவங்களுக்கு கை கொடுக்காது”

”யார்யா அது 3 பேர் அந்த மரத்தை சுற்றி சுற்றி வராங்க”

“இரு போய் பார்த்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு பாண்டியன் சென்றார்.

சதீஷ் அங்கேயே நின்று யோசித்தார்.

பாண்டியன் நல்லவர்தான். நல்ல திறமைசாலிதான். ஆனால் கோபக்காரர். அதுவும் நாகாவுடன் ஏற்பட்ட மோதலில் காயம்பட்டதிலிருந்து அடிபட்ட வேங்கையாய் மூர்கத்துடன் இருக்கிறார். அவரை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும்.

“சார் நீங்களா எப்படி இருக்கீங்க சார்”

குரல் கேட்டு திரும்பினார் சதீஷ். அங்கே பிரசாத் நின்று கொண்டிருந்தான்.

“பிரசாத் நீயா பார்த்து ரொம்பம் நாளாச்சு எப்படி இருக்கே தாத்தா எப்படியிருக்கார்?”

“நல்லாயிருக்கோம் சார் நீங்க எப்படி இருக்கீங்க வேலை எப்படி போகுது?”

“எனக்கென்ன நல்லாயிருக்கேன் மனைவி குழந்தை எதுவுமில்லை வேலைதான் எல்லாமே குற்றவாளிகளை துரத்திகிட்டு இருக்கேன். ஆமா நீ என்ன இங்க”

“அது வந்து ஒரு கஸ்டமர் இந்த போக வழி கேட்டாரு ஃபோன்ல சொன்னேன் சரி அவர் இங்கேதான் வந்திருப்பார் அவரை பார்த்து கொஞ்சம் பணம் வாங்கலாம்னு வந்தேன் அவர் எங்கேன்னு தெரியலை அதான் தேடிட்டு இருக்கேன்”

“சரி சரி, நானும் இன்ஸ்பெக்டர் கூடத்தான் வந்தேன் அவர் இப்ப வந்துருவார்.”

“சரி சார் அப்புறம் பாக்கலாம் நேரம் கிடைக்கிறப்ப வீட்டுக்கு வாங்க”

“இந்தா இந்த பணத்தை வச்சிக்க” “இல்ல சார் நான் சும்மா கிடைக்கிற பணமோ தப்பான வழி பணமோ அதை விரும்பறதில்லை.”
“என்னப்பா நீ என்னை ஒரு தடவை திருடங்க சுத்துபோட்டப்ப காப்பத்தினவன் நீ என் உயிரை காப்பத்தினவன் நீ ஒரு பாசத்தில தந்தேன் வச்சிக்க” என்று அவன் பாக்கெட்டின் பணம் வைத்து விட்டு  ”என்ன உதவி வேணும்னாலும் கேள்” என்று சொல்லி விட்டு சென்றார் சதீஷ்.

பிரசாத்தும் ரமேஷை தேடினான்.

-------------------------------------------------------------------------

“சார் இங்கேயும் ஒரு பெட்டி கிடைச்சிடுச்சு” சந்தோஷத்தில் செல்வா கத்தியபோது...

“யார் மேன் நீங்க இங்க என்ன பண்ணுறீங்க” என்று அங்கே வந்தார் பாண்டியன்.

மங்குனி திடுக்கிட்டு பின் சமாளித்தார். “சார் நான் ஒரு புரொபசர் இவங்க என் மாணவர்கள் இந்த ப்ளீடிங் ட்ரீல எப்படி ரத்தம் வருதுன்னு பார்த்துக்கிட்டு இருக்கோம்”
செல்வா பெட்டியை பாண்டியனுக்கு தெரியாமல் மறைத்தான். பாண்டியன் சிறிது நேரம் விசாரித்து விட்டு சந்தேகம் விலகிச் சென்றார்.

“எல்லாத்தையும் எடுத்துகுங்க, வாங்க மிச்சத்தை ரூம்ல போய் பேசிக்கலாம்” என மங்குனி செல்வா, பாபுவுடன் கிளம்பினார்.

அவர்களை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த ரமேஷின் அருகில் வந்து நின்றான் பிரசாத்.

”சார் நீங்க இங்க இருக்கீங்களா”

இவன் எங்கே இங்கே வந்தான் என குழப்பத்துடன் “நீ எப்படி இங்க?”

“ஃபோன் பண்ணி இடம் பற்றி கேட்டீங்க அப்ப இங்கதானே இருப்பீங்க அதான் பார்க்க வந்தேன்”

”அப்படியா சரி போலாம்”

பிரசாத் கேட்டான் “யார் சார் அவங்க”

ரமேஷ் திடுக்கிட்டு “என்ன கேட்கிற”

“அந்த 3 பேர் யாரு நீங்க எதுக்கு அவங்களை ஃபாலோ பண்ணுறீங்க”

“சே நீ என்ன , என்னென்னமோ சொல்ற?”

“சார் நான் பார்த்தேன் நீங்க அவங்களையே கண்காணிச்சுட்டு இருந்தீங்க, அவங்களை லைட் அவுஸ்லையும் நான் பார்த்திருக்கேன். நீங்க ஒரு சாதாரண டூரிஸ்ட் மாதிரி இல்ல. என்னமோ பண்றீங்க. என்கிட்ட சொல்ல விருப்பம்னா சொல்லுங்க”

ரமேஷ் சிறிது யோசித்து விட்டு சொன்னார் “ஆமாம் நான் சாதாரண டூரிஸ்ட் இல்லை. நான் ஒரு டிடெக்டிவ் என்னோட வேலை அந்த 3 பேரை கண்காணிச்சு எங்கே போறங்கன்னு பார்த்து தகவல் சொல்லணும்”

“அவங்க தப்பான வேலை செய்யறாங்களா சார்”

“தெரியலை அதைதான் நான் கண்காணிக்கணும்”

”சரி சார் நானும் இனிமே உங்க கூட இருக்கேன் உதவி பண்றேன்”

ரமேஷ் மீண்டும் யோசித்தான் “சரி ஆனா அவங்களுக்கு நாம கண்காணிக்கறது தெரியக்கூடாது அதேபோல் அவங்க என்ன பண்ணுறாங்கன்னு பார்க்கறத யார்கிட்டயும் சொல்ல கூடாது. ”

“சரி சார்”

-------------------------------------------------------------------------

கார்ச் சத்தம் கேட்டவுடன் திடுக்கிட்டார்கள் ராமும் ஏஞ்சலினாவும் அவர்கள் இருந்த அறையின் ஜன்னலின் சிறு சந்து வழி வெளியே பார்த்தார்கள். காரிலிருந்து பிஎஸ்வி ஒருவருடன் இறங்கி கொண்டிருந்தார். அவரை பார்த்து ஆச்சரியப்பட்டான்.

“ஏஞ்சலினா இது இவரு எதிர்கட்சி தலைவர் எஸ்.கே தானே அவர் எப்படி உங்க மாமா கூட...”

“என் மாமாவுக்கு நிறைய பெரிய இடத்து ஆளுங்க பழக்கம்”

“சரி இப்ப எப்படி தப்பிக்கிறது”

“என் மாமா வழக்கமா மத்தியான நேரத்தில வரமாட்டார் இப்ப வந்திருக்கார் அவர் போற வரைக்கும் ஒளிஞ்சிருக்க வேண்டியதுதான்.” என சொல்லிக் கொண்டே தான் இருந்த அறையை உட்பக்கம் மூடினாள்.

பிஎஸ்வியும் எஸ்.கேவும் அவர்கள் ஒளிந்திருந்த அறைக்கு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பேசுவது ராமுக்கும் ஏஞ்சலினாவிற்கும் தெளிவாக கேட்டது.

“உட்கார் எஸ்.கே”

“ம். இங்கே ஃப்ரீயா பேசலாமில்ல”

“தாரளாமா. இங்கே யாரும் வர மாட்டாங்க. அதான் நீ திட்டத்தை சொல்ல போறேன்ன உடனே இங்கே கூட்டிட்டு வந்தேன். ஏதாவது சாப்பிடுறியா”

”வேண்டாம். நாம திட்டத்தை பத்தி பேசலாம். ஆரம்பிக்கவா” “ம் ஆரம்பி!”

பேச ஆரம்பித்தார் எஸ்.கே.

“3 மாசம் முன்னால நான் உன்கிட்ட வந்து ஒரு முக்கியமான திட்டம். அதுக்கு சில ஆட்கள் தேவை 2-3 மாசத்துக்குள்ள ஆட்களை கடுமையா சண்டை, எல்லா பயிற்சிகளையும் கொடுத்து தயாரா வைக்க சொன்னேன் சரியா? ”

“செக்யூரிடி கம்பெனிங்கிங்கிற பேர்ல அடியாள் வேலை பாக்கிற நீ இதையும் ஒரு அடிதடி வேலைன்னு நினைச்சிருக்கலாம். ஆனா இது அப்படியில்லை. இந்த திட்டதிற்காக நீ 2 பேருக்கு நல்லா டிரைனிங் கொடுத்து தயார் பண்ணியிருக்கிறதாவும் சொன்ன.”

“இந்த 2-3 மாச காலம் உனக்கு குடுத்த வேலைக்கு தயாராக தேவையா இருந்தது அதே போல் எனக்கும் நம்ம திட்டத்தோட முதல் பகுதியை செயல்படுத்த தேவையா இருந்தது. இப்ப நம்ம திட்டம் செயல்பட வேண்டிய காலம் வந்திருச்சு”

அதுவரை பொறுமையாக இருந்த பிஎஸ்வி “சரி நம்ம திட்டம்தான் என்ன??”

“சொல்றேன் அதுக்கு முன்னாடி நீ நம்ம பிரசிடெண்ட் சாம் ஆண்டர்சனை பற்றி தெரிஞ்சுக்கனும்.”

“அழகான மனைவி, 2 வளர்ந்த பிள்ளைகள்னு இருக்கிற, நல்ல அரசியல்வாதின்னு பேரெடுத்த நம்ம பிரசிடெண்ட் சாம் ஆண்டர்சனுக்கு இன்னொரு மறுபக்கம் உண்டு. அவர் அடிக்கடி தன் அலுவலகத்தில் முக்கிய முடிவெடுக்க சில அமைச்சர்களோட சந்திப்பு நடத்துவார். மீடியா எல்லாம் அவர் என்ன சொல்வார்னு அவர் அலுவகத்துக்கு முன்னால காத்திருப்பாங்க. அவரோ சாயங்காலம்தான் முடிவை சொல்வார்”

“இதான் எல்லோருக்கும் தெரியுமே  எஸ். கே”

புன்னகைத்த எஸ்கே தொடர்ந்தார். ”ஆனா அந்த நம்பிக்கையான அமைச்சர்களை கைக்குள்ள போட்டுகிட்டு அவர் ஒரு தப்பு பண்ணுறார். அந்த மீட்டிங் நடக்குதுன்னு ஒரு மாயை ஏற்படுத்திட்டு ரகசியமா தன் செகரட்டரி ஜான் கூட மட்டும் மாறுவேஷத்தில கிளம்பி தன் காதலி வீட்டுக்கு போய்ட்டு வரார்”

“என்ன???”

“ஆமா யாருக்கும் சந்தேகமே வராது இப்படித்தான் எப்பவும் நடக்குது ”

”அடக்கடவுளே! சரி இதில் நம் திட்டம் என்ன?”

“திட்டம் இரண்டு பகுதியை கொண்டது முதல் பகுதியை நாம இப்ப பாக்க போற இடத்தில் சொல்றேன். இரண்டாவது பகுதி இதுதான். நல்ல அரசியல்வாதின்னு பேரெடுத்த சாம் ஆண்டர்சன் இப்படி கள்ளகாதல் தொடர்பில் இருக்கார்னு அவர் குடும்பம் மீடியாவுக்கு தெரிஞ்சா, வரப் போற தேர்தல்ல அவர் கட்சி தோற்கும் என் கட்சி ஜெயிச்சு நான் பிரசிடெண்ட் ஆயிடுவேன். ஆனா இந்த விஷயம் வெளியே போனா சாம் எப்படியும் அதை மூடி மறைப்பார். சதி, போலி சாட்சி அது இதுன்னு பேசுவார். நான் ஜெயிக்க முடியாது,”

“அதனால அவர் மோசமானவர்னு மக்களுக்கு தெரியணும், அதே சமயம்.......”

“அதே சமயம்......?”

“அவரை கொலை பண்ணனும்!”

(தொடரும்....)

28 comments:

 1. காலை வணக்கம்.. படிச்சுட்டு வரேன்.. :))

  ReplyDelete
 2. ரொம்ப சுவாரசியமாகவும் யதார்த்தமாகவும் இருக்கு கதை சூப்பர்.... அடுத்தடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்...

  ReplyDelete
 3. //மாணவன் said...//

  ரொம்ப நன்றி நண்பரே! உங்களைப் போன்றவரின் ஊக்கமே தொடர்ந்து எழுத வைக்கின்றது! நன்றி!

  ReplyDelete
 4. விருவிருப்பா போகுது.. நல்லா இருக்கு..

  ReplyDelete
 5. அருமையா இருக்கு நண்பா.. காத்திருக்கிறோம் அடுத்த பாகத்திற்கு..

  ReplyDelete
 6. மிக அருமை எஸ் கே தொடர்ந்து உங்களிடம் எதிர்பார்க்கேறோம்...............

  ReplyDelete
 7. இது நீங்கள் சென்ற பதிவில் சொன்னது

  //டெனிம் said...//
  வாங்க டெனிம்! ரொம்ப நன்றி!:-)

  இந்த கதையில் உங்களுக்கு பெர்மாஃபன்ஸ் இல்லை. ஆனால் அடுத்த கதையில் உங்களை ஹீரோவா போடலாமான்னு பார்க்கறேன்:-) கொழந்த ஏற்கனவே தலை மறைவில் இருக்கிறார் கதையிலுமா:-)


  என்ன அது காமெடி ஸ்டோரி தானே

  ReplyDelete
 8. தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!//

  நான் தொடர்ந்து படிக்கலை. அப்பப்போ நேரம் இருக்கும்போதுதான் படிக்கிறேன். எனக்கு நன்றி கிடையாதா?

  ReplyDelete
 9. //Madhavan Srinivasagopalan said...//
  மிக்க நன்றி மாதவன்!

  //வெறும்பய said...//
  ரொம்ப நன்றி நண்பா!

  ReplyDelete
 10. மாணவன் said...

  ரொம்ப சுவாரசியமாகவும் யதார்த்தமாகவும் இருக்கு கதை சூப்பர்.... அடுத்தடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்...

  வெறும்பய said...

  அருமையா இருக்கு நண்பா.. காத்திருக்கிறோம் அடுத்த பாகத்திற்கு..
  //

  ரெண்டு பயலுகளும் படிச்ச மாதிரி என்னாமா பீல் கொடுக்குராணுக. ராஸ்கல்ஸ். போய் படிச்சுட்டு வாங்கடா..

  ReplyDelete
 11. //டெனிம் said...//
  நன்றி டெனிம்!

  உங்களுக்கு காமெடியா! டெனிம்னாலே ஹாரர்தானே! ஒரு சைக்கோ கில்லர் கேரக்டரா உங்களை போடலாமா!:-))

  ReplyDelete
 12. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//

  நீங்க ஒரு எழுத்தை படிச்சாலும்/பார்த்தாலும் நன்றி உரித்தாகுக!

  ReplyDelete
 13. //ரெண்டு பயலுகளும் படிச்ச மாதிரி என்னாமா பீல் கொடுக்குராணுக. ராஸ்கல்ஸ். போய் படிச்சுட்டு வாங்கடா..//

  You are a very good secret police Ramesh!

  ReplyDelete
 14. அருமையா போகுது எஸ்.கே......இந்திரா சௌந்தரராஜன் கதை படிப்பது போல் இருக்கு.....

  ReplyDelete
 15. PDF வெர்சனுக்கு நன்றி....

  ReplyDelete
 16. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!//

  நான் தொடர்ந்து படிக்கலை. அப்பப்போ நேரம் இருக்கும்போதுதான் படிக்கிறேன். எனக்கு நன்றி கிடையாதா? //

  தம்பி டீ இன்னும் வரல....

  ReplyDelete
 17. //உங்களுக்கு காமெடியா! டெனிம்னாலே ஹாரர்தானே! ஒரு சைக்கோ கில்லர் கேரக்டரா உங்களை போடலாமா!:-))//

  முடிவே பண்ணிட்டீங்களா

  ReplyDelete
 18. தொடர் விருவிருப்பாக உள்ளது.. தொடருங்கள்..

  ReplyDelete
 19. ////வைகை said...

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!//

  நான் தொடர்ந்து படிக்கலை. அப்பப்போ நேரம் இருக்கும்போதுதான் படிக்கிறேன். எனக்கு நன்றி கிடையாதா? //

  தம்பி டீ இன்னும் வரல.... /////

  மச்சி ஒரு quarter சொல்லேன் ......

  ReplyDelete
 20. எஸ் . கே உங்கள பார்த்த பொறாமையா இருக்கு எப்படி இவ்வளவு எழுதுறிங்க? . உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்குது ? .. நானெல்லாம் ஒரு போஸ்ட் எழுத ஆரம்பிச்ச குறஞ்சது 2 வாரமாவது ஆகும் முடிக்க ,
  சும்மா பின்னுறிங்க போங்க .
  வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 21. யதார்த்தமாகவும் அருமையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 22. //கோமாளி செல்வா said...

  SAME TO YOU//

  என்னது சேம் டூ யூவா? எதுக்கு உங்களை யாராவது லூசுன்னு சொன்னாங்களா? என்னையும் கோத்து விடுறீங்களோ?

  ReplyDelete
 23. //Blogger வைகை said...//
  ரொம்ப நன்றிங்க. மிக்க மகிழ்ச்சி!

  //Blogger டெனிம் said...//
  :-) அப்ப ரொமாண்டிக் லவர் ஓகேவா?

  //Blogger sakthistudycentre-கருன் said...//
  மிக்க நன்றி!

  //Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...//
  என்னோட வேலை அனுபவம் காரணமா இப்படி பெரிசா டைப் பண்ணுறது கஷ்டமா தெரியலை. ஆனா எனக்கும் நேரம்தான் ஆகுது. பயிற்சி ஆயிடுச்சினா நீங்களும் இப்படி பெரிசா எழுதுவது எளிதுதான்!

  //Blogger அன்புடன் மலிக்கா said...//
  ரொம்ப நன்றிங்க!

  ReplyDelete
 24. கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கிறது.,
  நல்ல முயற்சி இன்னும் சுவாரசியங்களை எதிர் பார்கிரேன்

  ReplyDelete
 25. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete