Friday, February 18, 2011

BLACK RIVER - அத்தியாயம் ஐந்து


அத்தியாயம் ஐந்து

அன்று நிகழப்போகும் நிகழ்வுகளைப் பற்றி அறியாமல் அமைதியாக விடிந்தது அந்த நாள்.......

ரமேஷ் நேற்று நடந்த சம்பவங்களை எண்ணினார். என்ன நடந்தபோதும் தான் எண்ணி வந்த வேலையை செய்யாமல் போகக் கூடாது என்ற மன உறுதி அவரிடத்தில் இருந்தது!

ரமேஷ் கேங்குலா நாட்டின் கடைசி வாரிசு. கிட்டதட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன் கேங்குலா நாட்டு மன்னரின் தாய் வீடான பிளாக் ரிவர் நாடு அளித்த பரிசுகள் கப்பலில் வந்து கொண்டிருந்த போது கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. அவர்கள் தாய்வீட்டின் பரிசு கொள்ளயடிக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு ஆபத்து என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால் பரிசை எப்பாடு பட்டும் காப்பாற்ற முடியவில்லை. இளவரசர் இறந்தார். அது மட்டுமில்லாமல் நாளடைவில் கேங்குலா நாட்டு சாம்ராஜ்யமும் வீழ்ந்தது. அவர்களின் ராஜ குடும்பம் காணாமல் போனது. மீதம் இருந்த சில வாரிசுகளும் சாதாரண மக்களாய் வாழ ஆரம்பித்தனர். காலங்கள் மாறினாலும் அவர்கள் மனதில் அந்த நம்பிக்கை இன்னும் மாறாமல் இருந்தது.

ரமேஷ் சிறு வயதிலிருந்து சாதாரணமாகவே வளர்ந்தார். பல்வேறு நாடுகளுக்கு சென்று ஒரு தேர்ந்த வியாபாரியாக இருந்தபோதும் அவருக்குள் அவரின் பரம்பரை பற்றி செய்திகள் மனதில் வேராய் ஊன்றியிருந்தன. அப்போதுதான் புதையல் பற்றிய குறிப்புகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்திருப்பதாய் ஆராய்ச்சி குழுவில் இருந்த அவரின் ராஜவிசுவாசி ஒருவர் மூலம் தெரிய வந்தது. மேலும் குறிப்புகளின் நகலும் கிடைத்தது. தன் தாய் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து அப்புதையலை  தேட கிளம்பினார். அவருக்கு அப்புதையல் கிடைத்தால் பரம்பரையின் ஐஸ்வர்யம் திரும்பிவிடும் என நம்பினார். ஆனால் இங்கு வந்த போதுதான் வேறு சிலரும் அதை தேடுவதை புரிந்து கொண்டார்.

இப்போது அவர்களை தேட விட்டு எல்லா குறிப்புகளும் கிடைத்த பின் அதை பறிப்பது அவர் திட்டம். அதே சமயம் பிரசாத்திடம் தன்னைப் பற்றியோ தான் தேட வந்திருப்பது பற்றியோ சொல்ல அவர் விரும்பவில்லை. ஆனால் நேற்றைய சம்பவம் அவரை மாற்றி முடிவெடுக்க வைத்தது. இந்நேரம் அவர்கள் உஷாராகி இருப்பார்கள். அதனால் நான்காவது குறிப்பை நாமே முதலில் எடுத்து விட வேண்டும். அதன் பின் எப்படியாவது மீதியை அவர்களிடமிருந்து எடுக்க வேண்டும். நான்காவது குறிப்பை பார்த்து கொண்டிருந்தார். 1bomb church. அதில் o அடிக்கப்பட்டிருந்தது.

அப்போது பிரசாத் வந்தான்.

“உடம்பு எப்படி இருக்கு சார்”

“உடம்பு நல்லாயிருக்கு பிரசாத். இங்கே சர்ச் ஏதாவது இருக்கா குறிப்பா bயில் ஆரம்பிக்கும் சர்ச்”

”bயில் ஆரம்பிக்கும் சர்ச்...Bacia church, bambus church, Barretta church, Bathsheba church என நாலு சர்ச் இருக்கு சார் எதுக்கு கேட்கிறீங்க?”

“இரண்டாவதா சொன்னியே பேம்பஸ் சர்ச் அங்க போகலாம் வா”

-------------------------------------------------------------------------------------

சீக்கிரமாகவே காலையில் யாரிடமும் சொல்லாமல் சதீஷை கூட கூட்டிக் கொள்ளாமல் தனியாக நாகாவை பிடிக்க வேண்டுமென்ற வேகத்தோடு சௌந்தர் தந்த தகவல்படி அவர்கள் மறைவிடத்திற்கு தனியாக சென்று கொண்டிருந்தார் பாண்டியன்.

அதே நேரம்............

”நாகா! டிபார்ட்மெண்டை சேர்ந்த நம்ம ஆள் தகவல் தந்தான். அந்த பாண்டியன் தனியா நம்மளை பிடிக்க நம்ம இடத்துக்கு வரப் போறாராம். அவருக்கு எப்படி நம்ம இடம் தெரிஞ்சிருக்கும் நாகா?” கவலையோடு பேசினான் யோகேஷ்.

நாகா கோபமாக கத்தினான்... “சௌந்தர்.......!”

-------------------------------------------------------------------------------------

“சார் நேற்று வந்தவன் யாரா இருக்கும்”

“தெரியலை யாரா இருந்தாலும் நம்ம புதையல் வேட்டைக்கு இடையூறு வந்தாச்சு நாம சீக்கிரமா எல்லாத்தையும் முடிச்சாகனும்.”

“சார் இன்னும் ஒரு பெட்டிதான் பாக்கி அப்புறம் மொத்தம் 7 படங்களாயிடும் ஏழு எழுத்துக்களாயிடும்! C N A A S A இன்னும் ஒரு எழுத்து. அப்புறம் இந்த வார்த்தைகள் வேற இருக்கு”

“நான் ஆராய்ந்த வரைக்கும், குறிப்புகளை வச்சி பார்க்கிறப்ப அந்த நாலாவது இடம் பேம்பஸ் சர்ச்சாதான் இருக்கும் வாங்க போகலாம்”

“சார் மிச்ச பெட்டிகளை பத்திரமா வச்சிட்டு வரேன்”

“வேண்டம் செல்வா அது நம்ம கூடவே இருக்கட்டும் அந்த தோல்பையில் எடுத்துக்க இங்க இருப்பதும் ஒரு வகையில் ரிஸ்க்தான்”

மூவரும் சர்ச்சை நோக்கி கிளம்பினார்கள்.

-------------------------------------------------------------------------------------

கூட்டணி பற்றி இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட போகிறது. ஜனாதிபதி முக்கிய அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு! மாலை முடிவு வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” டிவியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் அதை கவனிக்காத அளவுக்கு கடையில் இருந்த ராம் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். தனக்கு ஏன் அந்த பயங்கர விஷயம் தெரிய வேண்டும்! என்ன செய்வது! குழப்பமாக இருந்தது!

கடையில் வேறு மதியம் மேரி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அருண் வேறு இன்று ஏதோ நல்ல முடிவு சொல்ல போவதாக சொன்னான். என்ன செய்தி வரப்போகுதோ! அவன் ஃபோனிற்காக காத்திருந்தான். தொலைபேசி மணி அடித்தது.

“ராம் நான் அருண் பேசறேன்”

“சொல்லுடா விஷயம் என்னாச்சு”

“எங்க எடிட்டர்கிட்ட விஷயத்தை சொல்லிட்டண்டா அவர் சில நல்ல உயரதிகாரிகள் இருக்காங்க அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு, நான் உனக்கு சொல்றேன்”

”மேடம் வீட்டுக்கு வேற மதியானம் வேலைக்கு போகனும்னு கடையில் சொல்லிட்டாங்கடா”

“ஓ! அப்படியா சரி! அப்படி நீ வேலையை முடிச்சுட்டு ஒரு மூணு மணிக்கு பத்திரிக்கை ஆபிஸ்க்கு வந்துடு”

“அப்ப ஏஞ்சலினா?”

“அந்த பொண்ணை இப்ப டிஸ்டர்ப் பண்ணாத விஷயம் நல்லபடியா முடியட்டும் அதுவும் நம்ம கூட வந்தா அதுக்குதான் பிரச்சினை, ஏன்னா சம்பந்தபட்டவர் அவர் மாமா”

“ஆமா நீ சொல்றது சரிதான்! சரி நீ சொன்ன மாதிரியே வரேண்டா”

போனை வைத்து விட்டு யோசித்தான். எதற்கும் ஒரு முறை ஏஞ்சலினாவை  தொடர்பு கொள்ளலாம் என முயன்றான் ஆனால் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. அவனுக்கு கொஞ்சம் கலக்கமா இருந்தது. ஒரேகுழப்பம்! மன அமைதியில்லாமல் தவித்தான். தன் குழப்பத்தை யாரிடம் சொல்வது?? அவனுக்கு பிரசாத் ஞாபகம் வந்தது. சரி அவனை போய் பார்ப்போம் அட்லீஸ்ட் மனசாவது ரிலாக்ஸ் ஆகும்!

கடையில் லீவ் சொல்லிவிட்டு மதியம் நேராக மேடம் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு பிரசாத் வீட்டிற்கு கிளம்பினான் ராம்.


-------------------------------------------------------------------------------------

தன் ஃபோன் எங்கே? தூங்கும்போது அருகில்தானே வைத்தோம். காணோமே ஏஞ்சலினா தேடிக் கொண்டிருந்தாள். சரி வெளியே தேடலாமென்று கதவை திறக்க போனாள் ஆனால் கதவு வெளியே தாளிடப்பட்டிருந்தது. யார் அது தாழ்ப்பாள் போட்டது.

“மாமா மாமா” கத்தினாள். யாருமே வரவில்லை. எந்த பதிலுமில்லை. வீட்டில் யாருமில்லையா. மாமா ஒருவாரம் வேலைக்காரர்களுக்கு லீவ் அளித்து அனுப்பியது ஞாபகம் வந்தது. நாளை தன் பிறந்தநாள்! மாமா ஏதோ திட்டத்தோடு இருக்கிறார் என அவளுக்கு புரிந்தாலும் இப்போது ஏன் அடைத்து வைத்தார். ஒருவேளை ராமுடனான காதல் அவருக்கு தெரிந்து விட்டதோ! அச்சச்சோ அப்படியானால் ராமுக்கு ஆபத்தாயிற்றே!. அவர் ஒரு கொலைக்கு வேறு திட்டிமிட்டிருக்கிறார் அது என்னைக்கு நடக்க போகிறதோ!

ஏஞ்சலினாவிற்குள் கலக்கமும் பயமும் அதிகரித்தது அங்கிருந்து தப்பிப்பது எப்படி என யோசித்தாள். பாத்ரூம் வெண்டிலேட்டர் வழியே வெளியேறுவதென முடிவெடுத்தாள்.

அதேநேரம்.. அவளை கடத்துவதற்காக ஜெயந்த்-பிரபாகரால் அனுப்பப்பட்ட மொட்டைத்தலை குமார் தன் முகத்தழும்பை கீறிக் கொண்டே அவள் வீட்டருகே வந்தான்.

-------------------------------------------------------------------------------------

ராம் தூரத்திலிருந்து அந்த ஏழுவண்ண நிலத்தின் அழகை ரசித்துக் கொண்டே நடந்தான். ஆனாலும் ஒரு ஓரத்தில் அவன் மனம் குழப்பத்தில் இருந்தது.

“ராம்” குரல் கேட்டும் திரும்பாமல் யோசனையிலிருந்தான்.

“ராம் ராம்” பலமாக குரல் எழ திரும்பினான். மாதவன் தாத்தா நின்று கொண்டிருந்தார்.

“என்ன ராம் என்ன யோசனையிலிருக்கே?”

“ம் ஒன்னுமில்ல தாத்தா”

“ஒன்னுமில்லையா எனக்கு தெரியுது நீ ஏதோ குழப்பத்தில இருக்கே. என் கிட்ட சொல்ல கூடாதா?”

“அது வந்து தாத்தா, ஒரு.. ஒரு.. குற்றம் பற்றிய தகவல் எனக்கு தெரிஞ்சிச்சு ஆனா அதை நான் நேரா போலீஸ்ல சொல்லாம்னா அவங்க நல்லவங்களா இல்லாம இருந்தாங்கன்னா எனக்கு ஆபத்து. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. என் ரிப்போர்ட்டர் ஃபிரண்டுகிட்ட சொன்னேன் அவன் எடிட்டர்கிட்ட பேசிட்டு சொல்றேன் சொன்னான் ஆனா இன்னும் முடிவு தெரியலை அதான் குழப்பமா இருக்கு”

மாதவன் புன்னகைத்தார்...“நல்ல போலீஸ்கிட்ட அந்த விசயத்தை சொல்லணும் அவ்வளவுதானே”

“ஆமா தாத்தா”

“கவலையை விடு எனக்கும் பிரசாத்துக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தெரியும் அவர்கிட்ட சொன்னா போது எல்லாம் பார்த்துக்குவார் ”

“தாத்தா அவர் எப்படி....”

“கவலைப்படாதே அவர் ரொம்ப நல்லவர். பேரு சதீஷ். அவரோட இன்ஸ்பெக்டரும் நல்லவர்தானாம் பேர் கூட பாண்டியன்னு நினைக்கிறேன். இரு. சதீஷோட ஃபோன் நம்பர் என் கிட்ட இருக்கு”

மாதவன் ஃபோன் செய்தார் சதீஷுக்கு. பாண்டியன் எங்கே சென்றார் என்ற குழப்பத்தில் சதீஷ் இருந்தபோது அவரின் ஃபோன் அடித்தது. சதீஷ் பேசினார். மாதவன் ராம் சொன்ன விஷயங்களை சொன்னார். ராமும் நேரில் எல்லாவற்றையும் சொல்வதாக சொன்னான். என்ன விஷயம் என புரியவில்லை. ஆனால் மாதவன் சொல்வதால் அந்த ராமை பார்க்கலாம் என  முடிவு செய்தார் சதீஷ். மாதவன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டுக்கு அருகில் தான் இருப்பதாகவும் அங்கே ராமை வரச் சொன்னார்.

ராம் மனதில் சிறிது சந்தோசத்தோடு மாதவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சதீஷை பார்க்க கிளம்பினான்.

-------------------------------------------------------------------------------------

பாம்பஸ் சர்ச்.

சர்ச்சின் பின்புறமிருந்து அந்த பெட்டியை எடுத்தார் ரமேஷ். கேங்குலா நாட்டின் ராஜ முத்திரை அதை பரிவோடு தடவினார். பெட்டியை கஷ்டப்பட்டு திறந்தார் அதில் ஒரு படம் இருந்தது. ஒரு சமுத்திரம்-கடலின் படம். கடலில் பறிபோன புதையல் அவருக்கு ஞாபகம் வந்தது.

“அந்த பெட்டியை எங்கிட்ட தந்திடுறியா”

குரல் கேட்டு திரும்பினார் ரமேஷ் அங்கே பாபுவும் செல்வாவும் நின்று கொண்டிருந்தனர்.

“அந்த படத்தை எங்கிட்ட தா”

“முடியாது” என்றார் ரமேஷ்.

“தரலைன்னா இவன் உயிர் போயிடும்” அங்கே மங்குனி துப்பாக்கி முனையில் பிரசாத்தை பிடித்து வைத்திருந்தார்.

பிரசாத்தை தனியாக விட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு!

“ம் பெட்டியை தா”

பெட்டியை தருவது போல் மங்குனி மேல் பாய்ந்தார் ரமேஷ் அவரின் துப்பாகியை தட்டி விட்டு  சண்டை போட்டார். மங்குனி, பாபு, செல்வா, பிரசாத், ரமேஷ் ஐவரிடையே கடும் சண்டை நிலவியது.

ஆனால் இடையில் துப்பாக்கியை கைப்பற்றிய செல்வா பிரசாத்தை மீண்டும் பிடித்தான்.

“ஹா ஹா இப்ப எங்கிட்ட வாலாட்டலாம்னு நினைக்காதே! பாபு, அந்த பெட்டியை எடு”

“சார்....”கத்தினான் பாபு.

“என்ன”

“அங்கே பாருங்க” சண்டையில் கிழிந்திருந்த ரமேஷின் சட்டை வழியாக அவரின் நெஞ்சில் பச்சை குத்தப்பட்டிருந்த கேங்குலா நாட்டின் ராஜ முத்திரை தெரிந்தது.

“இது கேங்குலா நாட்டு ராஜ முத்திரையாச்சே அப்படின்னா இவன் கேங்குலா ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் புதையலை பற்றி எல்லாம் தெரிஞ்சிருக்கு!”

“மரியாதையா சொல்லு புதையலை பற்றி உனக்கு எப்படி தெரியும் என்ன தெரியும்?”

ரமேஷ் அமைதியாய் இருக்க “நீ எதுவும் பேசலன்னா இவன் தலை போயிடும்”

“ரமேஷ் சார் என்ன சார் புதையல் அது இதுன்னு சொல்றாங்க” பிரசாத் கேட்டான்.

“என்னை மன்னிச்சிடு பிரசாத் நான் சீக்ரெட் ஏஜெண்ட் இல்ல. எங்க ராஜ குடும்பத்த சேர்ந்த புதையல் பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டது. அதை தேடதான் நான் வந்தேன் . இவங்களும் அதை பறிக்க ஆசைப்படுறாங்க”

“இவன்கிட்ட என்ன பேச்சு நீ எங்க கேள்விக்கு பதில் சொல்”

ரமேஷ் சிறிது அமைதியானார். தன் நாட்டை நினைத்துக் கொண்டார். பிரசாத்தை பார்த்தார் பின் பேசினார். ”எனக்கு அந்த எழுத்துக்கள் பத்தியோ பெட்டியில் உள்ள வார்த்தைகள் பத்தியோ தெரியாது. ஆனா அந்த படங்கள் பத்தி தெரியும்.”

“என்ன சொல்லு”

“நிறங்கள். இதுதான் அந்த காலத்திலிருந்து எங்களுக்கு கிடைச்ச ஒரே குறிப்பு. அப்புறம் இப்ப இந்த குறிப்புகள். அதை வச்சு பார்க்கிறப்ப இந்த ஒவ்வொரு படமும் ஒரு நிறத்தை குறிக்குது.”

“நிறமா என்ன நிறமா இருக்கும்” யோசிக்க ஆரம்பித்தார்.

ரமேஷ் தன் ராஜாங்க நடப்புகளின் படி சொன்னார்.

நெருப்பு- சிவப்பு, வலிமை(யான மனிதன்) - பழுப்பு, மகிழ்ச்சி(யான குழந்தை)-மஞ்சள், (கோழிக்குஞ்சு) பாதுகாக்கப்படுதல்-பச்சை, சொர்க்கம்-நீலம், அலங்காரமான பெண்- கருநீலம், கடல்-ஊதா

“சார் இது ஏதோ வானவில் நிறம்போல இருக்கே”

”இல்லை இது ஏதோ இடத்தை குறிக்குதுன்னு நினைக்கிறேன்.” ரமேஷ் சொன்னார்.

”சார் இப்ப ஞாபகம் வருது இங்க ஒரு ஏழுவண்ண மணல்திட்டு இருக்கு” என்றான் பாபு.

”சரி இந்த எழுத்துக்கள் வார்த்தைகள்”

”வார்த்தைகள் one  sleeping peacefully people புரியலையே”

“இந்த எழுத்துக்கள்  C N A A S A V என்னவா இருக்கும் Canavas, Casvana, Cavanas,...Ca  ”

"இரு...I got it! அது CANVAS அவங்க ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவங்க. அவங்க அந்த பகுதியில் இருக்கலாம். அப்போ அந்த ஏழுவண்ண திட்டு போனா தெரிஞ்சிடும் அந்த வார்த்தைகளும் என்னான்னு!"

”சார் அப்போ இவங்க”

”இவங்களையும் கையை கட்டி வாயை அடைச்சி நம்ம வந்த வண்டியில ஏத்து”

அதுவரை அமைதியாக ஆச்சரியத்தோடு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பிரசாத் அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.

ஏனெனில் அவன் வீடு அந்த ஏழு வண்ண திட்டு அருகில்தான் உள்ளது. மேலும் அவனும் அந்த கேன்வாஸ் பழங்குடி இனத்தை சேர்ந்தவன்.

அப்படியானால்........

-------------------------------------------------------------------------------------

அந்த ஒதுக்குபுறமான வீட்டின் முன்னால் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து தன் பொய்த் தோற்றத்தோடு பிரசிடெண்ட் சாம் ஆண்டர்சன் இறங்கினார். அவருடன் அவர் செகரெட்டரி ஜானும் மாறுவேஷத்தில் இறங்கினார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஆண்டர்சன் ஏதோ சைகை காண்பிக்க, ஜான் காரை செட்டில் விட்டு விட்டு வீட்டின் பக்கவாட்டில் இருந்த சிறு தோட்டத்தில் நுழைந்தார். ஆண்டர்சன் தன் காதலியை காண வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்.

அதுவரை தூரத்தில் ஓர் மறைவிடத்திலிருந்து பைனாகுலரில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரும் ஜெயந்தும் எழுந்து வீட்டை நோக்கி நடந்தனர்.


(தொடரும்........)


13 comments:

 1. இனிய காலை வணக்கம் நண்பரே :)

  ReplyDelete
 2. இன்னும் எத்தனை பாகம் உள்ளது? :)

  ReplyDelete
 3. @ மாணவன்

  வணக்கம் நண்பரே! இன்னும் 2 பாகங்கள்தான்!

  ReplyDelete
 4. செம ஜூப்பரு..
  கண்டினிவ் , நண்பா..

  ReplyDelete
 5. ஜோதி கதை மாதிரி இதுவும் முடியாதா?

  ReplyDelete
 6. கதை செம டெம்போவுல போகுது.. கலக்கல்

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. உங்கள் கதையின் தூண்டுதலால் நானும் ஒரு சின்ன கதை எழுதி இருகிரேன் நேரம் கிடைக்கும் போது படிக்கவும்.

  விடியாத இரவுகள்
  http://enpakkangal-rajagopal.blogspot.com/2011/02/blog-post_5697.html

  ReplyDelete
 9. முன்கதை சுருக்கம் போட்டா நல்லா இருக்குமே, எல்லா தொடரையும் படிக்க முடியல. நெறைய வீட்டுக்கு போகணும்ல.

  ReplyDelete
 10. மிக வேகம்
  அடுத்த பதிவிருக்கு.....
  மீதம் உள்ள பகுதி படித்து
  விமர்சனம்..

  ReplyDelete
 11. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete