Monday, February 21, 2011

BLACK RIVER - அத்தியாயம் ஆறு

நண்பர்களே தொடர்ந்து பொறுமையாக படித்து வருவதற்கு மிக்க நன்றி!



அத்தியாயம் ஆறு


ராம் சதீஷை பார்க்க ரெஸ்டாரண்டை நோக்கி நடந்தான். திடீரென அவனுக்கு ஒரு எண்ணம் வந்தது. அருணிடம் இதை சொன்னால் என்ன? அவனுக்கும் அவன் எடிட்டருக்கும் பாவம் தொல்லை தந்து விட்டேன்! அருண்பிரசாத்துக்கு ராம் ஃபோன் செய்தான்.

“அருண் நான் ராம் பேசறண்டா”

“சொல்லுடா! எடிட்டர் இப்பத்தான் பேசுனார், கமிஷ்னர்  கிட்ட பேசப் போயிருக்கார். அவர் மதியம் என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு சொல்றாராம். நீ மதியம் மேல வந்துடு!”

”இல்லடா இங்க என் ஃபிரண்டு ஒருத்தர் மூலமா ஒரு போலீஸை பார்க்க போறேன், அவர்கிட்ட சொல்லலாம்னு”

”என்னடா சொல்றே? இப்ப எதுக்கு திடீர்னு,  சரி அவர் நல்லவரா?”

“இல்லடா அவர் நல்லவர்தானாம் சரி நீயும் கூட வந்தா நல்லாதான் இருக்கும்”

“அப்படியா சரி நீ எங்க இருக்க” “ஓ அந்த ரெஸ்டாரண்ட் பக்கமாவா சரி நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க வந்துடுறேன் நாம இரண்டு பேரும் சேர்ந்து போய் அவரை பார்ப்போம் நான் என் எடிட்டர் சொன்னதையும் சொன்னா நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும்”

ராம் ஃபோனை வைத்து விட்டு அருணுக்காக காத்திருக்க தொடங்கினான்.

---------------------------------------------------------------------------------

“ஓடாத நில்லு”

“ஓடாத சௌந்தர் நீ எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாது!”

நாகாவும் யோகேஷும் சௌந்தரை வேகமாக துரத்தி ஓடிக் கொண்டிருந்தனர்.

சௌந்தர் மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. நாம் பாண்டியனுக்கு தகவல் கொடுத்தது இவங்களுக்கு எப்படி தெரிந்தது. பாண்டியன் வரதுக்குள்ளே தப்பிச்சிட்டாங்களே. நான்தான் சொன்னேன்னு வேற தெரிஞ்சு போச்சு, இவங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது?

உயிர் பயம் சௌந்தரை வேகமாக ஓட வைத்தது. சந்து பொந்துகளில் ஓடினான். பின்னால் துரத்தி வந்த நாகாவும் யோகேஷும் சௌந்தர் எங்கே சென்றான் என தேடினர்.

“எங்கே போனான் தெரியலை மவனே மாட்டினான் அவ்வளவுதான்”

“சே மிஸ் பண்ணிட்டமோ”

“நாகா அந்த கலர் கலரா இருக்கே மணல்திட்டு அந்த பக்கமாதான் அவன் போனான் வா போய் பார்ப்போம்!”

---------------------------------------------------------------------------------

வண்டியில் துப்பாக்கி முனையில் இருந்த ரமேஷும் பிரசாத்தும் அமைதியாக இருந்தன. பிரசாத் என்ன பேசுவது என தெரியாமலும் தன் வீட்டை நோக்கி செல்கிறார்கள் என்ற அதிர்ச்சியாலும் எதுவுமே பேசாமல் இருந்தான்.

“சார் ஏழு வண்ண மணல்திட்டுக்கு வந்தாச்சு இங்கே எங்க கான்வாஸ் பழங்குடி மக்களை தேடுறது”

“பார்ப்போம் அதோ அந்த வீட்டருகே ஒரு பெரியவர் நிக்கிறார் பார் அவர்கிட்ட கேப்போம்”

“தாத்தா வணக்கம்”

“வணக்கம்”

“இங்க பழங்குடி மக்கள், குறிப்பா கான்வாஸ் பழங்குடி மக்கள் எங்க இருப்பாங்கன்னு தெரியுமா”

“எதுக்கு கேக்கிறீங்க?”

“அது.. அது வந்து, நாங்க ஆராய்ச்சி மாணவர்கள். இவர் எங்க புரொஃபசர். பழங்குடி மக்கள் அவர்களின் நாகரீகங்கள், அவர்களின் இன்றைய நிலை பற்றி ஆராயறோம் அதைப் பற்றி கவர்மெண்டுக்கும் எழுதிப் போடுவோம் அதுக்குதான்” பாபு சரளமாக பொய் சொன்னான்.

“அப்படியா நல்ல விஷயம் அது ஏன் குறிப்பா கான்வாஸ் பழங்குடி மக்களை பற்றி கேட்கறீங்க”

மங்குனி பேசினார் “அதுவா, அவங்க ரொம்ப பழமையான இனத்தை சேர்ந்தவங்களா அவங்க ரொம்ப குணமுடையவர்கள்னு கேள்விப்பட்டிருக்கோம்”

“ஆமா அவங்க நேர்மையானவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர் நானும் கான்வாஸ் இனத்தை சேர்ந்தவன்தான்”

“நீங்களா” 

”என்னைபார்த்தா இந்தியன் மாதிரி இருக்கா என் தாத்தா இந்த பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு இவங்க கூடவே வாழ ஆரம்பிச்சவர். இப்ப எங்க இனத்தை சேர்ந்தவங்க ரொம்ப இல்லை இந்த மொரீசியஸ் தீவிலேயே நாலைஞ்சு குடும்பம்தான் இருக்கும். இந்த பகுதியில் நானும் என் பேரன் மட்டும்தான் இருக்கோம்”

வந்த வேலை சுலபமாக முடிந்ததை உணர்ந்த மங்குனி பாபுவிற்கு சைகை காட்ட ரமேஷை அழைத்து வந்தான்.

“பெரியவரே இது என்னன்னு தெரியுதா” ரமேஷின் மார்பில் இருந்த முத்திரையை காண்பிக்க, மாதவனின் கண்கள் விரிந்தன.........

---------------------------------------------------------------------------------

”ஜெயந்த் நீ அந்த ஜானை கவனி! நான் உள்ளே போய் சைலண்டா ஆண்டர்சனையும் அவர் காதலியையும் முடிச்சிடுறேன்.” பிரபாகர் சொல்லிவிட்டு வீட்டின் பின்பக்கமாக மெதுவாக சென்றான்.

ஜெயந்த் மனதில் குமார் வெற்றிகரமாக ஏஞ்சலினாவை கடத்துவானா என்ற எண்ணமே இருந்தது. அதே மனதுடன் தோட்டத்தில் இருக்கும் ஜானை தேடி மெதுவாக நகர்ந்தான்.

---------------------------------------------------------------------------------

வெண்டிலேட்டர் வழியே மெதுவாக இறங்கிய ஏஞ்சலினா, தன் வீட்டு காம்பவுண்டிற்கு ஒரு மொட்டை தலைக்காரன் உள்ளே நுழைவதை பார்த்தாள். உடனே அருகிலிருந்த இரும்பு குழாயை கையில் எடுத்துக் கொண்டாள்.
அவன் பின்பக்கம் சென்று அந்த மொட்டை தலைக்காரனின் தலையில் ஓங்கி அடித்தாள். அவன் அங்கேயே விழுந்தான். ஏஞ்சலினா அவசர அவசரமாக வெளியே சென்று ஒரு டாக்ஸி பிடித்து ராமின் கடை நோக்கி சென்றாள்.

அதே நேரம் பிஎஸ்வியின் கார் வீட்டருகே வந்தது.

---------------------------------------------------------------------------------

”இது யார்? நீங்கல்லாம் உண்மையாகவே யாரு?” மாதவன் அதிர்ச்சியாக கேட்டார்.

“பெரியவரே இந்த முத்திரையை பார்த்தவுடனே ஏன் அதிர்ச்சியானீங்க இதை பற்றி தெரிஞ்சதை சொல்லிடுங்க”

“இல்ல எனக்கு ஒண்ணும் தெரியாது”

“மரியாதை சொல்லுங்க”

அங்கே செல்வா பிரசாத்தை அழைத்து வந்தான்.

பிரசாத் “தாத்தா” என கூப்பிட்டான்.

“பிரசாத் நீ எப்படி இவங்ககிட்ட”

“ஓ இவன்தான் உன் பேரனா நல்லதா போச்சு இப்ப நீ உண்மைய சொல்லலன்னா மூணு பேர் உயிரும் போயிடும்”

“இல்லை  எனக்கு எதுவும் தெரியாது நான் எதுவும் சொல்ல மாட்டேன்”

ரமேஷ் பேசினார் “பெரியவரே நான்தான் கேங்குலா நாட்டின் கடைசி வாரிசு. எங்க நாட்டு புதையலை தேடித்தான் நான் வந்தேன் இவங்களும் அதை அடைய ஆசைப்படுறாங்க”

மாதவன் சிறிது நேரம் கண்மூடி யோசித்து விட்டு, தன் பாதத்தை தூக்கி பார்த்தார். அவர் பாத்திலும் கேங்குலா நாட்டு முத்திரை இருந்தது. இந்த முத்திரை பற்றி ஒரு நாள் சொல்வேன் என தாத்தா சொன்னது பிரசாத்துக்கு ஞாபகம் வந்தது.

“நீங்க அந்த புதையலுக்கு உரிமையானவர்தான். பல ஆண்டுகளுக்கு முன் இந்த புதையலை எடுத்துகிட்டு கேங்குலா நாட்டு இளவரசர் இங்க இருந்த எங்க இனத்து ஆள் ஒருத்தர்கிட்ட வந்தார். அவர் எங்கிட்ட ஒரு உதவி கேட்டர் இந்த முத்திரையை நெஞ்சில் தாங்கி வருபவரிடம் புதையலை ஒப்படைக்க வேண்டும். இந்த இடம் பற்றிய குறிப்புகளை அவர் நாட்டுக்கு அனுப்பிவிடுவதா சொன்னாராம். ஆனா அப்படி யாரும் வரலை ஆனா எங்க ஆளுங்க அவங்க வரப்ப ஒப்படைக்கருதுக்காக அந்த புதையலை பரம்பரை பரம்பரை பாதுகாத்துட்டு வரோம்.”

“இந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு மரியாதையா புதையல் எங்கேன்னு சொல்லு”

“முடியாது கெட்டவங்க கையில் அந்த புதையல் சிக்க விடமாட்டேன்.”

“சொல்லைன்னா எல்லோரும் செத்துடுவீங்க”

“வேண்டாம் பெரியவரே புதையல் எனக்கு வேண்டாம் அதனால உயிர்கள் போறதை விரும்பலை நான்”

அப்போது பாபு கத்தினான். ”சார் புதையல் எங்கே இருக்கும்னு தெரிஞ்சிடுச்சு”

“என்ன சொல்றே”

“அந்த பெட்டிகளில் இருந்த வார்த்தைகள் one people sleeping peacefully அப்படின்னா அது அதோ அந்த சமாதியை குறிக்குது நினைக்கிறேன்”

மாதவன் பதட்டப்படுவதை கவனித்த மங்குனி புன்னகைத்தார். “ஆமான்னு இவர் பதட்டமே சொல்லுதே அது கரெக்டுனு,  வா போகலாம்”

பிரசாத் வியந்தான். இத்தனை நாள் புதையல் அருகே இருந்த போது நேர்மையாக ஏழ்மையில் ஏன் தாத்தா வாழ்ந்தார், அவர் சொன்னாரே நேர்மையாக இருப்பது கொடுத்த வாக்கை காப்பாற்றுவது தன் இனத்தின் கொள்கை என்று நானும் அந்த இனம்தானே! அப்படியானால் இந்த புதையல் இந்த கெட்டவர்களிடம் சிக்க விடக் கூடாது!

வேகமாக பாபு மீது பாய்ந்தான் துப்பாக்கி எகிறி விழுந்தது. பிரசாத் பாபுவுடன் சண்டை போட, ரமேஷை மங்குனி தடுத்தார். போராட்டங்கள் நடக்கும்பொழுது.....

“நிறுத்துங்க இல்லைன்னா இவர் காலி!” செல்வா துப்பாக்கியுடன் மாதவனை குறி பார்த்திருந்தான்.

எல்லாம் கைமீறி போனதை பிரசாத்தும் ரமேஷும் உணர்ந்தனர்.

“இதோ பாருங்க ஒழுங்கா எங்க சொல்படி நடந்தா உயிர் மிஞ்சும் இல்லான்ன அவ்வளவுதான்”

வேறு வழியின்றி ரமேஷும் பிரசாத்தும் முன்னே நடக்க பாபுவும் மங்குனியும் அந்த சமாதி அருகே சென்றனர்.

“இந்த சமாதியின் மேல் கல்லை நகர்த்தி உள்ளே இருப்பதை தரணும் இதான் எங்களுக்கு சொல்லப்பட்டது நாங்க யாரும் அதை பார்த்ததில்லை” என்றார் மாதவன்.

அவர்கள் கல்லை நகர்த்தினர். உள்ளே ஒரு சுரங்கப் பாதை பாதை தெரிந்தது. உள்ளே ஆறு பேரும் சென்றனர்.

இவற்றையெல்லாம் வீட்டின் பின்புறம் இருந்து ரகசியமாக பார்த்து கொண்டிருந்தனர் நாகாவும் யோகேஷும்........

---------------------------------------------------------------------------------

ரெஸ்டாரண்டில் காத்திருந்த சதீஷுக்கு பாண்டியனிடமிருந்து அழைப்பு வந்தது. சதீஷ் ரெஸ்டாரண்டில் இருப்பதை அறிந்து அங்கே வந்து சேர்ந்தார் பாண்டியன்.

”சே நான் போறதுக்குள்ளே அவனுங்க தப்பிச்சிட்டாங்க சதீஷ்”

“சார் நீங்க யார்க்கும் சொல்லாம போனது தப்பு சார்! ஆமா அப்புறம் எப்படி அவங்களுக்கு தகவல் போச்சு”

“நான் போற தகவலை கமிஷ்னர்கிட்ட மட்டும் சொல்லியிருந்தேன் அவர் அவங்களுக்கு துணை போவார்னு நினைக்கவே இல்லை! அவங்க ஆளு ஒருத்தன் அப்ரூவரா ஆக தயாரா இருந்தான். சே! எல்லாம் மிஸ்ஸாயிடுச்சு!”

“சார் நீங்க அவங்களையே எப்பவும் நினைக்கிறதால ரொம்ப பதட்ட படுறீங்க. நீங்க நேர்மையானவர் நல்லவர் ஆனா உங்க கோபம் உங்களை தடுமாற வைக்கும் யோசிக்க விடாது.”

சதீஷின் பேச்சில் இருந்த உண்மையை இருந்த பாண்டியன் அமைதியாக இருந்தார்.

“சார்  மனசை வேற கேஸ்ல திசை திருப்புங்க. இப்ப கூட ஒருத்தன் ஏதோ ஒரு கேஸ் விஷயமா என்னை பாக்க வர்றன்ன நீங்க விசாரிங்க நல்ல யோசனை சொல்லுங்க”

பேசிக் கொண்டிருந்த பாண்டியன், சதீஷ் முன் மூச்சு வாங்க ஓடி வந்து நின்றான் சௌந்தர்.

---------------------------------------------------------------------------------

ராமின் கடைக்கு சென்ற ஏஞ்சலினா அவன் இல்லாததை தெரிந்து கொண்டாள் அவன் வெளியே சென்று விட்டு மதியம் மேரி வீட்டு செல்வதை கேள்விப்பட்டாள். மதியம் ஆகப் போவதால் மேரியின் முகவரி வாங்கி கொண்டு அங்கே கிளம்பினாள்.

அதே நேரம் தன் வீட்டிற்குள் நுழைந்த பிஎஸ்வி உள்ளே மயங்கி கிடந்த குமாரையும் ஏஞ்சலினா தப்பிச் சென்றதையும் அறிந்து அதிர்ந்தாள்.
குமாரை அடித்து விசாரித்தார். குமார் தான் ஜெயந்த், பிரபாகரால் அனுப்பப்பட்டதையும், ஏஞ்சலினாவை கடத்த வந்ததையும். பிஎஸ்வி பேசியவற்றை ஆதாரமாக கொண்டு அவரை பிளாக்மெய்ல் செய்ய போவதையும் உளறினான்.

“என்கிட்டேயே டபுள்கேம் ஆடுறாங்களா அவங்களை விடப்போறதில்ல”

எஸ்கேவுக்கு ஃபோன் செய்தார். “எஸ்கே திட்டத்தில் சின்ன மாறுதால் நானே நேரடியாக களத்தில் இறங்க போறேன். நீ கவலைப்படாத எல்லாம் நல்ல படியா முடியும்.”

குமாரை அடித்து மயங்கச் செய்து ஒரு அறையில் போட்டு பூட்டினார். இப்போ ஏஞ்சலினாவை விட ஆண்டர்சன்தான் முக்கியம். சாம் ஆண்டர்சனின் காதலி வீட்டை நோக்கி கிளம்பினார் பிஎஸ்வி.

---------------------------------------------------------------------------------

”நாமளும் உள்ளே போலாமா” கேட்டான் யோகேஷ்.

“வேண்டாம் இங்கேயே இருப்போம் ஏதோ புதையல் அது இதுன்னுறாங்க எப்படியும் வெளியே எடுத்துட்டு வருவாங்கல்ல அப்ப பார்த்துப்போம்”

உள்ளே நுழைந்த ஆறு பேருக்கும் நீண்ட வருடங்களாக யாரும் வராத அந்த இடத்தின் தோற்றம், வாசனை எல்லாமே ஒரு வித கலக்கத்தை தந்தது. பிரசாத்தும் மாதவனும் தங்கள் வாக்கை காப்பாற்ற முடியாததை எண்ணி மிகவும் வேதனையடைந்தனர். ரமேஷும் தங்கள் ஐஸ்வர்யம் மீண்டும் பறிபோவதை எண்ணி வேதனை அடைந்தார்.

அவ்விடம் மோசமாக இருந்தபோதும் அவர்கள் தேடி வந்ததை கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்படவில்லை. அங்கே கேங்குலா நாட்டு முத்திரையும் கான்வாஸ் பழங்குடி மக்களின் சின்னமும் கொண்ட ஒரு பழங்கால பெட்டி இருந்தது. அதை கஷ்டப்பட்டு மங்குனி திறந்தார். உள்ளே ஐந்து நகைகள் இருந்தன. ஆனால் ஒவ்வொன்றிலும் ஏராளமான நவரத்தின கற்கள் ஒளிவீசின.

மங்குனி சந்தோசத்தின் கத்தினார். “ஆஹா! இதான் இதான் இந்த ஒவ்வொரு நகையும் எத்தனை எத்தனை கோடி போகுமோ ஆஹா நாம ஜெயிச்சிட்டோம் இந்த நகை இனிமே நமக்குதான் சொந்தம்! நமக்குதான் சொந்தம்!”

“சாரி சார், இனி இந்த நகைகள் எனக்கு மட்டும் தான் சொந்தம்” செல்வா தன் கையில் இருந்த துப்பாக்கியை மங்குனியின் நெற்றிப் பொட்டில் வைத்தான்.

(அடுத்த பாகத்தில் முடியும்)


22 comments:

  1. “சாரி சார், இனி இந்த நகைகள் எனக்கு மட்டும் தான் சொந்தம்” செல்வா தன் கையில் இருந்த துப்பாக்கியை மங்குனியின் நெற்றிப் பொட்டில் வைத்தான்.//

    மொக்கை துப்பாக்கிதான?

    ReplyDelete
  2. (அடுத்த பாகத்தில் முடியும்)//

    Excellent. Super. Nice

    ReplyDelete
  3. சாம் ஆண்டர்சனின் காதலி வீட்டை நோக்கி கிளம்பினார் பிஎஸ்வி.///

    தலைவர் சாம் ஆண்டர்சன் வாழ்க
    தலைவர் சாம் ஆண்டர்சன் வாழ்க
    தலைவர் சாம் ஆண்டர்சன் வாழ்க
    தலைவர் சாம் ஆண்டர்சன் வாழ்க
    தலைவர் சாம் ஆண்டர்சன் வாழ்க
    தலைவர் சாம் ஆண்டர்சன் வாழ்க
    தலைவர் சாம் ஆண்டர்சன் வாழ்க

    - தலைவர் பன்னிக்குட்டி

    ReplyDelete
  4. பேசிக் கொண்டிருந்த பாண்டியன், சதீஷ் முன் மூச்சு வாங்க ஓடி வந்து நின்றான் சௌந்தர்.//

    மூச்செல்லாம் இப்ப விக்கிறாங்களா?

    ReplyDelete
  5. அதே நேரம் பிஎஸ்வியின் கார் வீட்டருகே வந்தது.//

    எதே நேரம்?

    ReplyDelete
  6. ராம் ஃபோனை வைத்து விட்டு அருணுக்காக காத்திருக்க தொடங்கினான்.//

    அருண் இப்போ சென்னைல இருக்காரு.

    ReplyDelete
  7. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... //
    மிக்க நன்றி!

    செல்வாவின் துப்பாக்கி மொக்கையாக இருந்தாலும் குண்டுகள் பயங்கரமாக துளைக்கும்!

    //Excellent. Super. Nice // மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  8. //தலைவர் சாம் ஆண்டர்சன் வாழ்க //
    வாழ்க! வாழ்க!

    //மூச்செல்லாம் இப்ப விக்கிறாங்களா?//
    ஆமாம்! நல்ல காத்து கிடைக்கிறதே இல்ல!

    //எதே நேரம்?//
    அதே நேரம் அதே இடம்!

    //அருண் இப்போ சென்னைல இருக்காரு.//
    ஃபிளைட் புடிச்சி போவாருங்க!

    ReplyDelete
  9. எங்க போனாலும் இந்த போலீசு தொல்லை தாங்க முடியலபா...ஹிஹி

    ReplyDelete
  10. ஆஹா... கிடச்சிடுச்சி.. புதையல் கிடைச்சிடுச்சி.. சீக்கிரம் அடுத்த பாகம்

    ReplyDelete
  11. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அதே நேரம் பிஎஸ்வியின் கார் வீட்டருகே வந்தது.//

    எதே நேரம்////////



    இதுக்குதான் பதிவ ஒழுங்கா படிக்கணும்.

    ReplyDelete
  12. சூப்பர் எஸ்.கே....

    ReplyDelete
  13. என்ன இன்னும் ஒருத்தரும் சாகாம இருக்காங்க இது க்ரைம் கதைக்கு இழுக்கு

    ReplyDelete
  14. //வைகை said...//
    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  15. //ராஜகோபால் said...//
    எனக்கு கதையில் கூடா யாரையாவது சாவடிக்க அவ்வளவா புடிக்காதுங்க!:-))

    ReplyDelete
  16. சாரி சார், இனி இந்த நகைகள் எனக்கு மட்டும் தான் சொந்தம்” செல்வா தன் கையில் இருந்த துப்பாக்கியை மங்குனியின் நெற்றிப் பொட்டில் வைத்தான்.///

    எஸ் கே அண்ணே எல்லாம் நல்லா இருக்கு...:)) ஆனா எனக்கு இந்த கடைசி வரிகள படிச்சப்போ சிரிப்புதான் வருது ...... பேசாம நீங்க மங்குனி கைல துப்பாக்கிய கொடுத்திருக்கலாம்....செல்வா கைல கொடுத்ததால என்னவோ சிரிப்புதான் வருது...

    ReplyDelete
  17. கலக்குங்க.....எஸ் கே... நல்லா போய்கிட்டு இருக்கு.... அடுத்த பதிவை விரைவில் எதிர் பார்க்கிறோம்

    ReplyDelete
  18. //என்ன இன்னும் ஒருத்தரும் சாகாம இருக்காங்க இது க்ரைம் கதைக்கு இழுக்கு..//


    ஏன் இந்த கொலை வெறி?

    ReplyDelete
  19. //எனக்கு கதையில் கூடா யாரையாவது சாவடிக்க அவ்வளவா புடிக்காதுங்க!:-))//

    எம்பூட்டு நல்லவரு நீங்க..

    ReplyDelete
  20. என்ன இன்னும் ஒருத்தரும் சாகாம இருக்காங்க இது க்ரைம் கதைக்கு இழுக்கு..:) ATHUKKAGA selva vai onnum pannidatheenga..


    ...அப்போ எந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் டேர்றோர் என்னும் ஏன் வரலை

    ReplyDelete
  21. // எஸ் கே அண்ணே எல்லாம் நல்லா இருக்கு...:)) ஆனா எனக்கு இந்த கடைசி வரிகள படிச்சப்போ சிரிப்புதான் வருது ...... பேசாம நீங்க மங்குனி கைல துப்பாக்கிய கொடுத்திருக்கலாம்....செல்வா கைல கொடுத்ததால என்னவோ சிரிப்புதான் வருது... //

    கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே ..
    (அப்பிடி போட்டுடுங்க எஸ்.கே.., அப்புறாம் யாரு கேள்வி கேக்குறாங்கணு பாத்துரலாம்....

    ReplyDelete