Saturday, February 12, 2011

BLACK RIVER - அத்தியாயம் இரண்டு

பாகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருக்குன்னு நினைக்காதீங்க சின்னதா போட்டா சுவாரசியமா இருக்காது. மேலும் கதையும் நகராது. அதான். மன்னித்துக் கொள்ளுங்கள்!


அத்தியாயம் இரண்டு


மொரிஷியஸ்.

மங்குனி, செல்வா, பாபு மூவரும் உட்கார்ந்திருந்தனர்.

”எப்படி சார் இங்கே புதையல் இருக்குன்னு கன்ஃபார்மா சொல்றீங்க?”

”சொல்றேன் அதுக்கு முன்னால் நாம மூணு பேரும் 2 வருஷத்துக்கு முன்னால் இந்த மொரிஷியசில் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம் நினைவிருக்கா?”

“ஆமாம் சார் பழங்கால கடற்கொள்ளையர்களின் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி அது.”

“அதில் ஒரு முக்கியமான ஆனால் நீங்கள் நம்பாத விஷயம் ஞாபகம் இருக்கா?”

“ம்... இருக்கு சார்! கடற்கொள்ளையர்கள் பற்றி ஆராய்ச்சியின் போது கிடைத்த சில குறிப்புகளின்படி சுமார் கிபி 1750ஆம் வாக்கில் கேங்குலா நாட்டை சேர்ந்த ஒரு கப்பலை கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்கள். அக்கப்பலில் கேங்குலா நாடு மிகவும் போற்றும், மதிப்பு மிக்க சில பொருட்கள் இருந்துள்ளன. அதை காப்பாற்ற அந்த நாட்டு வீரர்கள் போராடினர் அந்த மதிப்பு மிக்க பொருட்கள் அதாவது புதையலை எங்கேயோ பதுக்கி விட்டு அதன் குறிப்பை கொண்டு செல்ல முயற்சித்து அவர்கள் தோற்றுவிட்டார்கள். ”

“ஆமாம் சரிதான் ஆனால் அந்த புதையல் இன்னும் இங்கேதான் உள்ளது என நான் சொன்னதை நீங்க இரண்டு பேரும் நம்பலை.”

“ஆமாம் சார் ஒண்ணு அந்த குறிப்பு கொள்ளையர்கள் கிட்ட கிடைச்சிருக்கணும், இல்லை கேங்குலா நாட்டை சேர்ந்தவங்க கிட்டேயே கிடைச்சிருக்கணும். எப்படியிருந்தாலும் புதையல் இங்க இருக்காது சார்!”

மங்குனி புன்னகைத்தார். “அப்படி கிடைச்சிருந்த அந்த குறிப்புகள் எனக்கு எப்படி கிடைக்கும்?”
”என்ன சார் சொல்றீங்க உங்களுக்கு அந்த குறிப்புகள் கிடைச்சதா?”

”ஆமாம் ஆராய்ச்சி முடிந்து நீங்க போன பிறகு எனக்கு இங்கேதானே வேலை இருந்தது. வழக்கம்போல என்னோட தொல்பொருள் ஆராய்ச்சிகளை பார்த்து
கொண்டிருந்த ஒரு நாள் ஒரு படிமம் கிடைத்தது. அது மனித உடலின் படிமம். அதனருகே இருந்த ஒரு சிறு ஓலைச்சுருளுக்குள் அந்த தோல் குறிப்புகள் இருந்தன.” மங்குனி சிறிது நிறுத்தி விட்டு அவர்களை பார்த்தார். பாபுவும் செல்வாவும் அவரையே இமை மூடாமல் பார்த்து கொண்டிருந்தனர்.

“அந்த குறிப்புகள் பற்றி அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது புதையல் குறிப்பு என அவர்களுக்கு தெரியாது. அதைப் பற்றி பிறகு பார்க்கலாம் என அவர்கள் விட்டு விட்டார்கள். ஆனால் நான் யாருக்கும் தெரியாமல் அந்த குறிப்புகளை கூட வேலை செய்யறவங்க யாருக்கும் சந்தேகம் வராமல் நகலெடுத்துக் கொண்டேன்!”

”சார் இந்த குறிப்பு அந்த புதையலுடையது என்று எப்படி சொல்றீங்க” என்றான் பாபு.

“இந்த முத்திரை. இது கேங்குலா நாட்டு ராஜ முத்திரை. அதுவும் இது மிக நெருக்கமான அரச குடும்பத்தினர், குறிப்பாக அரசர், ராணி, இளவரசர், இளவரசி போன்றோருக்கான முத்திரை இது!”

”அப்படின்னா இது புதையல் பற்றிய குறிப்புதான்” “ஆமாம்”

அந்த குறிப்புகளை காண்பித்தார்.

2 light for ocean

2 fluid running in moving flow in this non moving

2 who have male and female living here

1 bomb church

”என்ன சார் ஒண்ணும் புரியலை”

“இது ஒவ்வொன்னும் ஒரு இடத்தை குறிக்குது அந்த எண்கள் எதுக்குன்னு தெரியலை”

“அப்போ புதையல் நாலா பிரிச்சு வச்சுருப்பாங்களா சார்”

“தெரியலை அந்த இடத்தில் பொருள் எங்கே இருக்குன்னும் தெரியலை ஆனா நாம உடனடியா அந்த இடங்கள் எதுன்னு கண்டுபுடிச்சு அங்கிருக்கிறதை எடுத்தாகனும்.”

”உடனேவா?”

“ஆமாம் அரசாங்கம் எப்ப என்ன நடவடிக்கை எடுக்கும்னு தெரியலை கொஞ்ச நாளில் தேர்தல் வேற வரப்போகுது. நாம தாமதிக்க வேண்டாம்”

“எங்கேன்னு போய் எதை கண்டுபிடிக்கறதுன்னே தெரியலையே” பாபுவும் செல்வாவும் சலித்துக் கொண்டனர்.

“அதுக்குதானே உங்களை கூப்பிட்டேன்”

“சரி முதல் வரி என்ன 2 light for ocean. அப்படின்னா கலங்கரை விளக்கம். அதுக்கு பக்கத்து மாவட்டத்துக்கு போகணும்ல” என்றான் செல்வா.

“இல்லை இப்ப இருக்கிற லைட் ஹவுஸ் கட்டி 120 ஆண்டுகள் தான் ஆகுது ஆனா இது நடந்தது கிட்டதட்ட 200 வருசத்துக்கு முன்னாடி அப்படின்னா அது பழைய லைட் ஹவுஸ்!” என்றான் பாபு

“so, நம்மோட முதல் டார்கெட் பழைய லைட் ஹவுஸ்!”

**************************************

அளவில்லாத மகிழ்ச்சியில் இருந்தான் ராம். அவன் எதிர்பார்த்த நாள் வந்து விட்டது. ஏஞ்சலினாவை பார்க்க போக வேண்டும். அப்போது கடையின் போன் ஒலித்தது. “ராம் உன்கிட்ட யாரோ அருண் பிரசாத் பேசனுமாம்”

இவன் எதுக்கு இப்ப போன் பண்ணுறான் என்று யோசித்து கொண்டே சென்றான் ராம்.
”ஹலோ அருண் என்னடா என்ன விஷயம்”

“என்ன விஷயமா, டேய் அடுத்த மாசம் உன் பாட்டியை பார்க்க இந்தியாவுக்கு போகப் போறேன்னு சொன்னேல்ல அது சம்பந்தமா சில பேப்பர்ல கையெழுத்து போட இன்னிக்கு வரேன்னியே”

அடடா மறந்துட்டேனே! “அது வந்து, சாரிடா, இன்னிக்கு கடையில் பயங்கர வேலை கடையை விட்டு நகர முடியாது நான் நாளைக்கு வரட்டா.”

“இல்லடா இன்னிக்குதானே கடைசி நாள். ம் என்ன பண்ணுறது? சரி நானே உன் கையெழுத்தை போட்டுடறேன்!” என்றான் அருண்.

“அதானே நீதான் சின்ன வயசில உங்கப்பா கையெழுத்தையே போட்டவனாச்சே ” என்று அவனை கிண்டல் செய்து விட்டு போனை வைத்தான் ராம்.

ஏஞ்சலினா! ஏஞ்சலினா! உன்னை பார்க்க வரேன். சே ஒரு காதலியை பார்க்க போறோம் ஒரு கிப்ட் வாங்க கூட கையில் இப்ப காசில்லையே மேரி மேடமும் கடைக்கு வரலை. அருண் கிட்ட கேட்க முடியாது! என்ன பண்ணுறது? ஆங்! பிரசாத்! பிரசாத் கிட்ட கேட்டு பார்க்கலாம்.

பிரசாத் டூரிஸ்ட் கைடாக இங்கே வேலை செய்கிறான். வந்த சில மாதங்களில் நட்பானவன். அவனுக்கும் தன்னைப் போல ஒரு தாத்தா மட்டும் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.

ராம் பிரசாத் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

**************************************

பிரசாத்  தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான். ரமேஷ் இங்கே நீண்ட நாள் தங்கப் போகிறார், நிறைய பணம் தருகிறார். அன்பாக பழகுகிறார். கொஞ்ச நாளைக்கு தனக்கும் தன் தாத்தாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை!

தூரத்தில் அவன் தாத்தா மாதவன் தன் வீட்டிற்கு பின்புறம் உள்ள அந்த சமாதியின் முன் அமைதியாக தியானம் செய்வது போல் நின்று கொண்டிருந்தார். அவர் இப்படித்தான் அடிக்கடி அந்த சமாதி முன் நிற்பார். அது பல ஆண்டுகளாக எப்போது வைக்கப்பட்டது என தெரியாமல் இருக்கும் ஒரு சமாதி. கோவில் போல. பிரசாத் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவன். அவன் தாத்தாவின் தாத்தா பழங்குடி பெண்ணை திருமணம் செய்து அவர்களுடனே அவர்கள் பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடித்தவர். அவன் தாத்தா மாதவன் தம் பாரம்பரியம் பற்றி அடிக்கடி சொல்வார். நேர்மையானவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர் என என்னென்னவோ சொல்வார். இப்படித்தான் நடக்க வேண்டும் என சொல்வார். ஆனால் பிரசாத் நேர் எதிர். அவனுக்கு வறுமை பிடிக்கவில்லை பணக்காரனாவதே அவன் குறிக்கோள். ஆனால் தப்பு செய்யும் எண்ணம் இதுவரை வரவில்லை.

தாத்தா பிரசாத்தை பார்த்தவுடன் அருகே வந்தார். பின் சிறிது நேரம் கழித்து இருவரும் ஒன்றாக சாப்பிட்டனர். ”தாத்தா ஒரு புது ஆளை ஊர் சுற்றி காட்டணும் அவர் கூடவே இருக்கணும்.  நல்ல வருமானம் கிடைக்கும். இந்த மாசம் நமக்கு பிரச்சினை இருக்காது!” மாதவன் அமைதியாகப் புன்னகைத்தார். “இப்போ அவரை பழைய லைட் ஹவுஸை சுற்றிக் காட்ட போறேன் வர லேட்டாகும்.”


பிரசாத் கிளம்பும்போது ராம் வந்தான். “எப்படி இருக்கே பிரசாத் எப்படி இருக்கீங்க தாத்தா?” “நல்லா இருக்கோம்பா” ”தாத்தா நானும் ராமும் இப்படியே கிளம்பறோம்”
“என்னடா விஷயம்” “ஒண்ணுமில்ல கொஞ்சம் பணம் வே(ணு)னும் அவசரமா”

”எதுக்கு” ராம் உண்மையான காரணம் சொல்லவில்லை. பிரசாத் பணம் தந்த பிறகு வாங்கி கொண்டு சென்றான் காதலியை காண!

**************************************
பழைய லைட் ஹவுஸ்.

பிரசாத் ரமேஷுக்கு அந்த இடத்தை சுற்றிக் காட்டினான். ரமேஷ் “நீ இங்கேயே இரு, நான் கொஞ்சம் தனியா இருக்கணும்” என்றார். பிரசாத் விநோதமாக அவரை பார்த்துட்டு கொஞ்சம் விலகிச் சென்றான்.

**************************************
”ஏன் லேட்?”

கேள்வி கேட்ட ஏஞ்சலினாவின் அருகில் தயக்கதுடன் உட்கார்ந்தான் ராம்.

“அதை யேன் கேட்கிற கிளம்புற நேரத்தில ஒரு பிரண்டு ஃபோன் பண்ணிட்டான். அவன் கிட்டயிருந்து தப்பிச்சு இன்னொருத்தனை பார்க்க போனேன். அவனை பார்த்துட்டு வரப்ப என் கடையோட ஓனர் மேரி என்னை பார்த்துட்டாங்க. அவங்க வீட்டு கொஞ்ச அங்க பக்கத்தில் இருந்தது. அவங்க கடையில் இல்லையா என கேட்க எப்படியோ கஷ்டப்பட்டு வந்தேன்”

“நீங்க வர வரைக்கும் காத்துகிட்டு இருந்தன்னா, யாரோ 3 பேர் சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தாங்க. எனக்கு ஒரு மாதிரியா போச்சு.”

“சரி விடு நாம பேசுவோம்”

“என்னது?”

“நீ சொல்ல வந்தது.....”

ஏஞ்சலினா வெட்கப்பட்டாள். எப்படி சொல்வதென தயங்கினாள். ராம் மெதுவாக அவள் கையை பிடிக்கச் சென்றான்.

“டேய் ராம் நீ எங்கடா இங்க?”

திடுக்கிட்டு திரும்பினான் ராம். எதிரே பிரசாத் நின்று கொண்டிருந்தான். ஏஞ்சலினா குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

இவன் எங்க இங்க வந்தான் என்று நினைத்து கொண்டே “பிரசாத் நீயா எப்படி இருக்கே?”

“எப்படி இருக்கேவா இப்பத்தானடா கொஞ்ச நேரத்துக்கு முன்னால பார்த்தோம். ஆமா இது யாரு”

“இது.. இது.. வந்து... என்னோட.. என்னோட...”

”ம். இதுக்குத்தான் என்கிட்ட காசு வாங்கினாயா? சரி நடத்து நடத்து” சொல்லிவிட்டு சென்று விட்டான் பிரசாத்.

ராம் தர்மசங்கடத்துடன் ஏஞ்சலினாவை பார்த்தான். அவள் அமைதியாக கேட்டாள்.

“எதுக்கு காசு வாங்கினீங்க?”

ராம் என்ன செய்வதென்று விழித்து விட்டு பாக்கெட்டிலிருந்து அந்த பரிசை எடுத்தான். ஒரு ஆணும் பெண்ணும் உள்ள சிறிய சிலை, ஒரு சிறிய செயின், ஒரு ரோஜா மூன்றையும் அவளிடம் கொடுத்தான்.

“வாவ்! சூப்பர்!” அவள் மிகவும் மகிழ்ச்சியாகி அதை வாங்கி கொண்டாள். பின் அவனை காதலோடு பார்த்தாள்.

“ராம் என் மனசு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நான் ரொம்ப நாளா உங்க கிட்ட சொல்ல நினைச்சது என்னன்னா..... ராம் ஐ.... ”


”தம்பி”

யார்ரா அது மறுபடியும்! ராம் திரும்பினான். அங்கே ஒரு கண்ணாடி அணிந்த நபரும், உடன் இருவர் நின்று கொண்டிருந்தனர்.
“என்ன சார்?” “இல்ல தம்பி கொஞ்ச நேரம் முன்னால என் பர்ஸ் இங்க விழுந்துடுச்சு அதான் தேடு(ட)னும். கொஞ்ச அப்படிக்கா போகா முடியுமா”


”என்ன சார் என்னென்னமோ சொல்றீங்க” ராம் எரிந்து விழுந்தான்.

”இல்லப்பா அது இங்கே தான் விழுந்துருக்கணும் கொஞ்சம் பணம் வச்சிருந்தேன்.”

அவர்கள் இங்கிருந்து செல்ல மாட்டார்கள் என ராமுக்கு புரிந்தது. ராமும் ஏஞ்சலினாவும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள்.

”ராம் நான் கிளம்பறேன். லேட்டாயிடுச்சு மாமா திட்டுவாரு.”

“என்ன ஏஞ்சலினா இப்படி சொல்றே, நாம பேசவே இல்லையே”

“ஆமா ராம் ஆனா நான் லேட்டா போக முடியாது. ம் ஒன்னு பண்ணுங்க நாளைக்கு மத்தியானம் நீங்க எங்க வீட்டை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி பீச் ஓரமா ஒரு வீடு இருக்கில்ல அங்க வந்திருங்க. யாரும் இருக்க மாட்டாங்க. அது எங்க மாமா அவர் பிரண்டுங்க கூட பேச கட்டியிருக்கார். வழக்கமா மத்தியான நேரத்தில எங்க மாமா வர மாட்டார்.”

ராம் அரை மனதுடன் சரி என சொன்னான். “சரி போய்ட்டு வா ஏஞ்சலினா” ஏஞ்சலினாவும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து சென்றாள்.

சே இன்னைக்கு எதிர்பார்த்து வந்தது நடக்கவே இல்லையே அங்க மேரி மேடம் அப்புறம் இங்க பிரசாத் அந்த மூணு பேரு வேற! அவர்களை பார்த்தான். பர்சை தேடுற மாதிரியா தேடுறாங்க! ஏதோ ஒண்ணு! மொத்ததில என் பிளான் நாசமா போச்சு!!! புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

**************************************

”செல்வா பாபு என்ன நல்லா தேடினீங்களா?”

“தேடினோம் சார் அந்த இடத்தில் ஒண்ணும் இல்ல”

”இதோ பாருங்க மத்த இடத்தில 3 பேரும் தரவோ தேடிட்டோம். இங்க அந்த பொண்ணு இருந்ததால விட்டுட்டோம் இங்கதான் நிச்சயம் இருக்கும். ஆங்! அதோ பாருங்க. ஒரு சின்ன ஓட்டை!”

அதனுள் கையை விட்டான் செல்வா. உள்ளே எதுவோ தட்டுப்பட்டது. போராடி அதை வெளியே எடுத்தான். அது ஒரு சிறிய பெட்டி. அதில் அந்த ராஜமுத்திரை!!!
அதைக் கண்டவுடன் மூவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அந்த பெட்டியை மறைவாக கொண்டு சென்று அதை கஷ்டப்பட்டு திறந்தனர். உள்ளே இரண்டு படங்கள் இருந்தன. ஒன்று நெருப்பின் படம், மற்றொன்று ஒரு திடகாத்திரமான மனிதன். மேலும் அந்த படங்களின் பின்னால் இரு ஆங்கில எழுத்துக்கள். C மற்றும் N. எல்லாம் படமும் எழுத்தும் ஏதோ மூலிகை மையால் கையால் வரையப்பட்டவையாக இருந்தாலும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் தெளிவாக புரியும்படி இருந்தன.

"சார் இதென்ன ஆங்கில எழுத்து?"

“ஆமாம் கேங்குலா நாட்டின் மொழி ஆங்கிலம்தான் இது எதையோ சொல்லுது. இப்ப புரியுது! அந்த குறிப்பில் இருந்த எண்கள் படங்களின் எண்ணிக்கையை குறிக்குது அப்படின்ன 2,2,2,1 மொத்தம் ஏழு படங்கள் நான்கு இடத்தில் கிடைக்கும்!”

”இந்த ஆங்கில எழுத்துக்கள் எதை குறிக்குதுங்கிறதை எல்லா படமும் கிடைச்ச பிறகுதான் தெரியும். படம் என்ன சொல்லுதுன்னும் தெரியலை. எல்லாத்தையும் சேகரிச்சாதான் புதையல் பற்றிய முழு விவரமும் தெரியும்.”

“எல்லா படத்தையும் சேகரிச்சாதான் விவரமே தெரியுமா?? எப்ப புதையல் கிடைக்குமோ”

”சரி இங்க நின்னு பேச வேணாம் வாங்க ரூமுக்கு போவோம்”

அதுவரை அவர்களை தூரத்திலிருந்து மறைவாக கவனித்துக் கொண்டிருந்த ரமேஷ் பிரசாத்தை தேடி கிளம்பினான்.

**************************************
அந்த மறைவிடம் கொஞ்சம் இருளாக இருந்தது. அங்கே அந்த மூவர் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“நாகா நாம எத்தனை நாளைக்கு இப்படியே தப்பிச்சு போய்கிட்டு இருக்கிறது?”

“இதோ பார் சௌந்தர்! இந்த தொழிலுக்கு வந்துட்டா அதையெல்லாம் பார்க்க முடியாது. எப்பவும் நமக்கு ரிஸ்க்தான்”

“பார்த்தியா நீயே சொல்ற ரிஸ்க்குனு அப்புறம் எதுக்கு நம்மளுக்கு இந்த தொழில்?”

“ஹா ஹா ஹா! இந்த தொழிலா!! ஏதோ புத்தர் மாதிரி பேசற நீயும் இதைத்தான் இத்தனை நாளா செஞ்சுகிட்டு இருக்கே”

“ஆமா யோகேஷ் இல்லைன்னு சொல்லலை! ஆனா இப்ப நம்மை மூணு பேரையும் புடிச்சு குடுத்தா பரிசுங்கிற அளவுக்கு போயிடுச்சு. இதுக்கு மேல....”

“அதுக்காக போலீஸ்ல சரணடைய சொல்றீயா? உன் பேச்சே சரியில்லையே! இதோ பார் நீயே நினைச்சாலும் நமக்குன்னு இருக்கிற சில வேலைகளை முடிக்கிற வரைக்கும் இந்த கேங்கை விட்டு விலக முடியாது”

“நாகா நீதான் எங்களுக்கு தலைவன். இப்ப நம்ம மூணு பேர்தான் இதில் இருக்கோம். இது என்ன கேங்க்! அந்த வேலைகள் இருக்குதான். இல்லைன்னு சொல்லலை! ஆனா அந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் நம்மை மேலே வெறியா இருக்காரே”

“அதுக்கு காரணம் நாகாதான். அவரை அந்த அளவுக்கு காயப்படுத்தினா அதுவும் ஒரு போலீஸ்காரனுக்கு கோபம் வராதா?”

“யோகேஷ் அவன் கோபம் என்னை என்ன செய்யும்?? நீங்க இரண்டு பேரும் உறுதியா இருந்தா நம்ம வேலைகள் ஸ்மூத்தா நடக்கும்! அந்த இன்ஸ்பெக்டரை சமாளிக்கறது ஈஸி!”

”அது அவ்வளவு சுலபமில்லை” கையில் துப்பாக்கியுடன் இன்ஸ்பெக்டர் பாண்டியனும் சப் இன்ஸ்பெக்டர் சதீஷும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.
(தொடரும் ...)



31 comments:

  1. வணக்கம், நண்பரே, block river ரொம்ப ஸ்மூத்தா போகுது.. :))
    நல்லா எழுதியிருக்கீங்க சூப்பர்..

    ReplyDelete
  2. //”அது அவ்வளவு சுலபமில்லை” கையில் துப்பாக்கியுடன் இன்ஸ்பெக்டர் பாண்டியனும் சப் இன்ஸ்பெக்டர் சதீஷும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.
    (தொடரும் ...)//

    மிகுந்த எதிர்பார்ப்புடன்........ :))

    ReplyDelete
  3. மிக்க நன்றி மாணவரே!

    ReplyDelete
  4. கதை நல்லா போயிட்டு இருக்கு,தொடர்ந்து எழுதுங்க நண்பரே

    ReplyDelete
  5. கேங்குலா இப்படியொரு நாடு இருக்கா? இதுவும் உங்க விளையாட்டா?

    ReplyDelete
  6. நமக்கு ஏதும் guest performance இருக்கா..... கொழந்தைக்கு தலைமறைவு கேரக்டர் ஏதும் இருந்தா குடுங்க...

    ReplyDelete
  7. //டெனிம் said...//
    வாங்க டெனிம்! ரொம்ப நன்றி!:-)

    இந்த கதையில் உங்களுக்கு பெர்மாஃபன்ஸ் இல்லை. ஆனால் அடுத்த கதையில் உங்களை ஹீரோவா போடலாமான்னு பார்க்கறேன்:-) கொழந்த ஏற்கனவே தலை மறைவில் இருக்கிறார் கதையிலுமா:-)

    ReplyDelete
  8. //பாரத்... பாரதி... said...//
    ரொம்ப நன்றி!
    உண்மையாலுமே கேங்குலான்னு ஒரு நாடு இருக்கு. அதுவும் மொரிஷீஸ்க்கு அருகில் ஆப்பிரிக்காவில்:-)
    கதை எழுதும் முன் சில தகவல்கள் தேடிப்பார்த்துதான் ஆரம்பிச்சேன். ஒரு ரியாலிடிக்காக!

    ReplyDelete
  9. முதல் பாகத்த படிக்காதவங்களும் புரியற மாதிரி கதைய நகர்த்தியிருக்கீங்க.

    ReplyDelete
  10. //பாரத்... பாரதி...

    முதல் பாகத்த படிக்காதவங்களும் புரியற மாதிரி கதைய நகர்த்தியிருக்கீங்க. //

    ரொம்ப நன்றி! ஆனா எல்லாப் பாகங்களிலும் சில தொடர்புகள் மற்ற பாகங்களுடன் இருக்கும்!:-) பின்னாடி வ்ர பாகங்களில் தெரியலாம்!

    ReplyDelete
  11. //ஆமாம் அரசாங்கம் எப்ப என்ன நடவடிக்கை எடுக்கும்னு தெரியலை கொஞ்ச நாளில் தேர்தல் வேற வரப்போகுது. நாம தாமதிக்க வேண்டாம்”//

    அது சரி...

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. சில வார்த்தைகள் சிவப்பு வணணத்தில் இருக்கிறது. போஸ்ட் புரடெக் ஷனில் டைரக்டர் ஏமாந்த இடங்கள் அப்படினு விமர்சனத்தில் சி.பி.செந்தில் குமார் உங்கள வெளுத்து வாங்கப்போறார்..

    ReplyDelete
  15. ////ஆமாம் அரசாங்கம் எப்ப என்ன நடவடிக்கை எடுக்கும்னு தெரியலை கொஞ்ச நாளில் தேர்தல் வேற வரப்போகுது. நாம தாமதிக்க வேண்டாம்”//

    அது சரி...///
    :-)) எல்லா நாடுமே அப்படித்தானே!:-)

    ReplyDelete
  16. //சில வார்த்தைகள் சிவப்பு வணணத்தில் இருக்கிறது. போஸ்ட் புரடெக் ஷனில் டைரக்டர் ஏமாந்த இடங்கள் அப்படினு விமர்சனத்தில் சி.பி.செந்தில் குமார் உங்கள வெளுத்து வாங்கப்போறார்..//

    ஆமாங்க கவனிக்கலை!:-) சரி செஞ்சிடுறேன்!

    ReplyDelete
  17. கதை நல்லா போகுது.....அப்படி ஒன்றும் பெரிய பாகமாக தெரியவில்லை........இப்படியே தொடருங்கள்..

    ReplyDelete
  18. அப்பறம் அந்த PDF பண்றதுக்கு.......

    ReplyDelete
  19. சூப்பர்..சூப்பர்..சூப்பர்..

    -----தாத்தா மாதவன்

    ReplyDelete
  20. flash cut உத்தி கொஞ்சம் குழப்புது.. இருந்தாலும் சுவாரசியம்.

    ReplyDelete
  21. இது படிச்ச மாதிரி இருக்கு ?

    ReplyDelete
  22. //flash cut உத்தி கொஞ்சம் குழப்புது.. இருந்தாலும் சுவாரசியம்.//

    ReplyDelete
  23. நல்லாதான் எழுதுராங்க... நம்மதான் வீக்கா?
    அருமை..

    ReplyDelete
  24. //வைகை said... //
    மிக்க நன்றி! பிடிஎஃப் ரெடி பண்ணிட்டேன்!

    ReplyDelete
  25. //Madhavan Srinivasagopalan said...//
    ஹி..ஹி.. மாதவன் தாத்தா!

    ReplyDelete
  26. //அப்பாதுரை said... //
    மிக்க நன்றிங்க! சுவாரசியத்திற்காகதான் அப்படி எழுதினேன். மிக்க நன்றி!

    ReplyDelete
  27. //கோமாளி செல்வா said... //
    பின்னே நீங்களும்தானே புதையலை தேடுறீங்க!

    ReplyDelete
  28. //பாரத்... பாரதி... said... //
    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  29. //sakthistudycentre-கருன் said... //
    மிக்க நன்றி! யாருமே வீக்கில்ல! அதுக்குன்னு வாய்ப்பும் நேரமும் வரனும்!

    ReplyDelete
  30. terro paandianthan - police inspectera? hahaha...

    ReplyDelete