Monday, October 25, 2010

காலப் புதிர்கள் - பாகம் இரண்டு

RHINO ELECTRONICS.

ரமேஷ் உள்ளே பதுங்கி பதுங்கி நுழைந்தான். கோட் சூட் போட்ட ஒருவர் ஒரு அறையிலிருந்து வெளியேறுவது தெரிந்தது. அவர் சென்றவுடன் வேகமாக உள்ளே நுழைந்தான்.

பாண்டியன் வெளியே சென்றவர் கார் சாவி எடுக்க மறந்தது நினைவிற்கு வந்தது. மீண்டும் தன் அறை நோக்கிச் சென்றார்.

ரமேஷ் ஆள் வரும் சத்தம் கேட்டதும் அருகே இருந்த ஒரு பீரோவின் பின்னால் ஒளிந்தான். உள்ளே ஒருவர் நுழைந்தார். அவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தான். அவர் ஒரு சிறு கதவின் பக்கம் சென்றார் ஆட்கள் யாரும் இல்லை என்ற நினைப்பால் சாதாரணமாக எண்களை தட்டினார், ரமேஷின் கண்கள் அதை மிக கவனமாக பதிவு செய்தது.

பாண்டியன் சாவியை எடுத்துக் கொண்டி வெளியே சென்றார். ரமேஷுக்கு ஆச்சரியம். அந்த கதவின் பின்னால் என்ன இருக்கும் பணமா ஏதாவது முக்கியமான ஃபைலா? பார்த்து விடுவோமே! என தன் மனதில் ஞாபகம் வைத்திருந்த அந்த எண்களை அழுத்தினான். கதவு திறந்தது உள்ளே நுழைந்தான்.

உள்ளே ஒரு கருவி. கருவியில் டைம் மெஷின் என்ற எழுத்துக்கள். ரமேஷால் நம்ப முடியவில்லை. இது கால இயந்திரமா! சிரிப்புதான் வந்தது. நன்றாக கருவியை சுற்றிப் பார்த்தான். ம் இது என்ன காலத்தை காட்டுமா இல்லை அந்த காலத்திற்கே கொண்டு போகுமா? அதில் PICTURE என்பது அவனை கவர்ந்தது. ம். மனதில் ஒரு எண்ணம். நம் டார்கெட் இந்த ஊர்லதான் இருக்கான் அவன் நாளைக்கு எங்கே இருப்பான்னு பார்ப்போமா. சரி. பாக்கெட்டில் இருந்து ஃபோட்டோவை எடுத்தான். அதில் கவிஞர் தேவா சிரித்துக் கொண்டிருந்தார்.

----------------------

”சே தப்பிச்சிட்டான்”

”எவ்வளவோ ட்ரை பண்ணோம் முடியலையே”

ராம்சாமி தன் சகாக்கள் சௌந்தர், பாபுவுடன் புலம்பிக் கொண்டிருந்தார்.

“சார் ஆட்களை வரவழைத்து இந்த ஏரியாவை நல்லா தேடச் சொல்வோம?”

“எப்ப ஆளுங்க வந்து, இந்த நைட்ல அது நடக்கிறதா அதுக்குள்ளே அவன் எங்கியோ போய்டுவான்”

“சரி வாங்க அவன் தங்கியிருந்த இடத்தை இன்னொரு முறை சோதனை போடலாம் ஏதாவது தடயம் கிடைக்கலாம்,”

மூவரும் அப்பகுதியை விட்டு கிளம்பினார்.

-------------

ஆச்சரியமாக இருந்தது ரமேஷுக்கு. இப்படி நடப்பதுச் சாத்தியமா? இது உண்மையா? அந்த கருவியில் ஃபோட்டோ வைத்து ஹெட்போனை மாட்டி பட்டனை அழுத்தினால், அவனுக்கு படக்காட்சி தோன்றியது.

”சார் வாங்க சார் வாங்க சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்”

”அப்படியில்லை தம்பி நான் சொன்னா செய்வேன்”

”நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் சார்”

“எங்க வீடு பேச்சுலர்ஸ் வீடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”

தேவா இரண்டு பேருடன் பேசிக் கொண்டே ஒரு வீட்டில் நுழைவது தெரிந்தது.

ஹெட்போனை கழற்றிவிட்டு யோசித்தான் ரமேஷ். அந்த வீட்டை எங்கோ பார்த்தது போல் இருந்தது.

ரமேஷ் அதற்கு பின் கருவியில் Place என்பதை பார்த்தபோது அது தான் இப்போது இருக்கும் இடத்தை காண்பித்தது. இப்போதுதான் ஞாபகம் வருகிறது. போலீஸ் துரத்தி வந்த போது இந்த வீடு வழியாக ஓடி வந்தேனல்லவா!

தேதி நாளை தேதி. நாளை தேவா இங்கே வருகிறார். டார்கெட் நம்மளை தேடி வருது! சரி ம் இந்த கம்பெனியில் பின்பக்கம் வந்த வழியே தப்பி விடலாம். காலையில் இந்த வீட்டுப்பக்கம் செல்ல வேண்டியது சந்தர்ப்பம் பார்த்து .............

ஒருவேளை இதெல்லாம் பொய்யாக இருந்தால்... பிறகு பார்த்துக் கொள்ளலாம். துப்பாக்கியை தொட்டுப் பார்த்துக் கொண்டான் ரமேஷ்.

-----------------------------------------------

காலை.

இரவெல்லாம் தூக்கம் வரவில்லை செல்வாவிற்கு. இரவு நடந்த சம்பவங்கள் அவன் மனதை அழுத்திக் கொண்டே இருந்தன. குறிப்பாக திருடன் காம்பவுண்டிற்குள் குதித்ததும் போலீஸ் விசாரித்ததும்....

காலை பேப்பரை புரட்டி பார்த்தான். அந்த திருடன் பற்றியோ கம்பெனி பற்றியோ எந்த தகவலும் இல்லை. அதைப் பற்றி நினைக்க வேண்டாமென்றாலும் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது. இன்று வேலை இல்லைதானே. ஒரு முறை அங்கே சென்று பார்த்து விட்டு வருவோமா. பயம் வந்தாலும் போவதென தீர்மானித்தான் செல்வா.

-----------

”ஐயாம் இண்டர்போல் ஆபிசர் அருண் பிரசாத்”

”வெல்கம் சார் நாங்க என்ன செய்யனும்” என்றார் ராம்சாமி.

”சார் மொரீஷியசில் வேறு ஒரு கேஸ் விசயமாக ஒருத்தனை விசாரிக்கிறப்பொ ஒரு முக்கியமான விசயம் தெரிய வந்தது.”

ராம்சாமி, பாபு, சௌந்தர் மூவரும் அவர் சொல்வதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

”இந்தியாவுக்கு தற்சமயம் வந்திருக்கிற என் ஆர் ஐ ஒருத்தரை முன்விரோதம் காரணமா கொலை பண்ண போறாங்க. கில்லரும் அவரை அந்த நாட்டிலிருந்தே ஃபாலோ செய்து வந்திருக்கான்.”

”அந்த என் ஆர் ஐ பேர் தேவா. அந்த கில்லர் நேம் ரமேஷ்” மூவரும் திடுக்கிட்டு நிமிர்ந்தனர்.

“நீங்க அந்த கில்லரை தேடுறதா சொன்னதால விசாரிக்க வந்தேன்”

மூவரும் இரவு நடந்த சம்பவங்களை சொன்னார்கள்.

”சரி அப்படின்னா உடனடியா மிஸ்டர் தேவாவை அலர்ட் பண்ணனும்”

உடனே பாபு தகவல்களை சேகரித்தார். கவிஞர் தங்கியிருந்த இடத்தின போன் நம்பரை கண்டு பிடித்து விசாரித்தார்.

“சார் தேவா காலையிலேயே தனியா எங்கேயோ கிளம்பி போய்ட்டாராம்”

”எங்கே”

“எங்கேன்னு தெரியலை ஆனா போரூர்க்கு போக எவ்வளவு நேரம் ஆகும்கிறத பற்றி ரிஷப்னிஷ்ட்கிட்ட விசாரிச்சிருக்காரு”

”போரூர்.... நாமை கில்லரை தப்பிக்க விட்ட இடம்”

”தேர் இஸ் சம்திங்.... கமான் கெட் ஹரி அப்” நால்வரும் கிளம்பினர்.

(அடுத்த பாகத்தில் முடியும்)

3 comments:

  1. மேலும் படிக்க>>> இது என்ன வித்தை?

    ReplyDelete
  2. //அப்பாதுரை said... //
    பிளாக் Dashboard-> Designல் நீங்கள் விரும்பும்படி அங்கே வரவழைக்கலாம்!

    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete