துணைக்கு என் தம்பி மற்றும் அவன் நண்பர்கள் இருவரை அழைத்துக் கொண்டேன். இதில் மணி என்பவன் மிகவும் தைரியசாலி(அப்படித்தான் நினைத்தோம்). எனக்கும் என் தம்பிக்கும் கொஞ்சம் பயம் இருந்தாலும் தயாரானோம்.
ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும்.
இதுதான் தரையில் வரைய வேண்டிய படம் |
டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம். அனைவரும் சேர்ந்து “ஆவி நண்பரே வருக! ஆவி நண்பரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி நண்பரே வருக! ஆவி நண்பரே வருக!” என அழைக்க வேண்டும்.
பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும். உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும். அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம்,இல்லை என சொல்ல yes, noவையும் காண்பிக்கும். ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர்
தானாக நகர்வது தெரியும்.
இப்படித்தான் அந்த புத்தகத்தில் எழுதி இருந்தது.
பகலில் நாங்கள் தயாரானோம். அறையை மூடி ஜன்னல்களை சாத்தி விட்டோம். நான் படத்தை வரைந்தேன். பிறகு மின்விசிறி, விளக்கு எல்லாவற்றையும் அனைத்து விட்டோம். நான்கு பேரும் சுற்றிலும் உட்கார்ந்திருந்தோம்.
மெழுகுவர்த்தியை கொளுத்தினேன். அது உடனே பற்றிக் கொண்டது. மேலும் வழக்கத்தை விட மிக பிரகாசமாசமாக எரிந்தது. அதைப் பார்த்த உடனே, மணி,” ஆ!!!” என கத்திக் கொண்டே கதவை திறந்து வெளியே ஓடி விட்டான். அவனை அழைத்து வருகிறேன் என போன என்
தம்பியும் அவன் நண்பனும் கூட வரவில்லை. என் முயற்சி தோல்வியடைந்தது. அதற்கு பிறகு யாரையும் அழைத்தாலும் வரவில்லை.
இன்னும் காத்திருக்கிறேன் என்றாவது ஒருநாள் ஆவியுடன் பேச.........
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!
ReplyDeleteஎஸ். கே அடுத்த வட்டி சென்னை வரும் பொது சொல்லுகிறேன் நம்ம ரெண்டு பேரும் முயற்ச்சி செய்து தான் பார்போம் எனக்கும் இந்த ஆசை உண்டு .
ReplyDeleteஉண்மைலேயே நல்லா இருக்கு ., அந்த மணி ரொம்ப தைரியசாளியாம்ல ..
ReplyDelete//அருண் பிரசாத் said...//
ReplyDeleteஆமாம்! ஆமாம்!
//இம்சைஅரசன் பாபு.. said...//
உங்கள் யாருக்காவது விருப்பமிருந்து ஆள் கிடைத்தால் முயற்சித்து பாருங்கள்!
//ப.செல்வக்குமார் said...//
இது உண்மையாகவே நடந்தது. பலர் வெளியே தைரியசாலியாக காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளுக்குள் பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார்கள்!
உங்க நண்பர் மணி மாதிரிதான் நிறைய பேர் இருக்காங்க...
ReplyDeletesuper! :)
ReplyDeleteஹா ஹா ஹா... என்னா தைரியம்?? ஹ்ம்ம்.. இப்படி தான் பீதிய கிளப்பணும்...!!
ReplyDeleteரெம்ப நன்றிங்கோ.. படத்த பாத்து.. இங்க டென்ஷன் ஆகுது..!!
:))
ReplyDelete:D Lol...wish you a very happy diwali my friend.
ReplyDeleteஎஸ்கே சார்.முதல்லே அந்த முரையை டிரை பண்ணி ஆவியுடன் பேசிவிட்டு அடுத்து ஒரு பதிவைப்போடுங்கோ.
ReplyDelete;-))
ReplyDeletehappy diwali
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனக்கு இதுமேல நம்பிக்கை இல்லை ஆனால் ஆவி என்பது உண்மையென அமெரிக்க விஞ்சானிகள் கூட நிருபித்திருக்கின்றார்கள் .
ReplyDeleteஎதுக்கும், உங்களுக்கு வெற்றி கிடைத்தால் சொல்லுங்கள் நானும் பேசுவதற்க்கு முயற்ச்சி செய்கின்றேன்.
உலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
I had a person who claimed to b talking to ghosts like this.But it was not real.Try again SK.If u succeed,post it.
ReplyDeleteஏன்ன்ன்ன்ன்?
ReplyDeleteஆமா, நம்பரே காணோமே, வருசத்தை எப்படி சொல்லும் ஆவி?
ReplyDeleteஇதன் தமிழ்நாட்டு வடிவம் இருக்கு தெரியுமோ?
இதை ட்ரை பண்ணிப் பாருங்க.. ரெடியா?
ரெண்டு பேரா சேந்து ட்ரை பண்ணலாம். புருசன் மனைவி, இல்லை நண்பர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனா பொதுவான ஆவி இருக்கணும்... நண்பர்கள்னா ரெண்டு பேருக்கும் பொதுவான ஆவி - இறந்த நண்பர், ஆசிரியர், அந்த மாதிரி. சும்மா தெருவுல போற ஆவியைக் கூப்பிட முடியாது. கலந்துக்கற ரெண்டு பேருக்கும் இமோசனல் தொடர்புள்ள மனிதரின் ஆவியைத் தான் வரவழைக்கணும் (ஆமா, இல்லாட்ட ஜிம்மியோட ஆவியைக் கூப்பிடக்கூடாது பாருங்க, பிடுங்கி வச்சாலும் வக்கும்). இறந்து போன அதே ஊர் இடமா இருந்தா இன்னும் உசிதம். இது ரூல் நெம்பர் 1.
ஆவிக்கும் உங்களுக்கும் பொதுவான சின்னம் ஒண்ணை எடுத்துக்குங்க - இதுக்கு வெங்கடாஜலபதி, சிவன், முருகன் இந்த மாதிரி படங்கள் ரொம்ப ஹேண்டி. (நான் வெங்கடாஜலபதி படத்தை வச்சு ட்ரை பண்ணியிருக்கேன்; என் நண்பன் ஜேம்ஸ் வீட்டில் வேளாங்கண்ணி மாதாவை வச்சு ஒரு தடவை எங்க குடலை உருவிட்டான்). ஆவியும் வெங்கடாஜலபதியையோ க்ருஷ்ணனையோ ஜீசசையோ நம்பியிருந்திருக்கணும். இது ரூல் நெம்பர் டூ.
ஒரு சதுரம் வரைஞ்சு ஆம், இல்லை என்று எதிரெதிர் எல்லைகளில் எழுதிக்கொள்ளவும். நடுவில் வட்டம் போட்டு ஒரு அகல் விளக்கோ, மெழுகுவத்தியோ ஏத்தி வைக்கவும். விளக்கை சின்ன ஓட்டை இருக்குற ஒரு வட்ட பாத்திரத்தால் மூடி வைக்கவும். அதன் மேல் ஒரு ஸ்பூனையோ, ரொம்ப பயமாக இருந்தால் நீளமான கரண்டியோ வைக்கவும். சதுரத்துக்கு வெளியே உட்கார்ந்தால் கரண்டி அ ஸ்பூனை லேசாக பிடிக்கும் அளவுக்கு நீளமாக இருக்கட்டும் (அல்லது சதுரம் சின்னதாக இருக்கட்டும்). ஆவி சதுரத்துக்குள் நிற்பதாகவோ அல்லது தலைகீழாகத் தொங்கியபடி கையை மட்டும் நீட்டி, ஸ்பூன்/கரண்டி பிடித்தவர் கையைத் தொட்டு நகர்த்துவதாக ஐடியா இங்கே. அதுக்கேத்த மாதிரி சதுரமோ ஸ்பூனோ கரண்டியோ ஏற்பாடு பண்ணிக்குங்க. இது ரூல் நெம்பர் 3.
ஆமாம்-இல்லை, சரி-தவறு, உண்டு-இல்லைங்கற மாதிரி பதில் வரும் கேள்விகள் தான் கேக்கலாம். தெரிஞ்ச பதில்களைத் தான் கேள்வியா கேக்கலாம். லாட்ரி விழுமா, ஜெயலலிதா ஆட்சிக்கு வருவாங்களா எல்லாம் நாட் அலவுடு. ஆனா தெரியாத பதில்கள் சிலது கேக்கலாம். ஆவிக்கு ஜோசியம் தெரியாது. சாவறதுக்கு முன்னால நம்மள மாதிரி இருந்தவங்க தானே, செத்தப்புறம் புதுசா ஞானம் வந்துருமா? இறந்து போன பொதுவான இன்னொருத்தர் பத்திக் கேக்கலாம் - உதாரணமா அம்மாவைப் பாத்தீங்களா? உயில் எழுதினீங்களா? (ஆவியைக் குழப்பினீங்கனா கஷ்டமா போயிடும். அதனால் கேள்விங்களை மொதல்லயே ரிகர்ஸ் பண்ணி வச்சுக்குங்க. யார் எதைக் கேக்கப் போறீங்கன்னும் ரிகர்ஸ் பண்ணிக்குங்க). ரிமெம்பர், ஆவியை உணருவதற்குத் தான் இந்த உத்தியே தவிர ஆவியை வச்சு வித்தை காட்டுறதுக்கு இல்லை. அப்படி ஏதாவது எண்ணம் இருந்தா இந்த விளையாட்டுக்கு வராதீங்க, விபரீதமா போயிரும். இது ரூல் நெம்பர் 4.
ஏத்தின விளக்கைத் தவிர வேறே எந்த வெளிச்சமும் இருக்கக் கூடாது. கண் தெரியாம போயிடும்னு பயந்தா ஒரு ப்ளேஷ் லைட்டை ஆன் பண்ணி வச்சு போர்வையால மூடி வையுங்க - வெளிச்சம் ரொம்ப நேர்ல வர மாதிரி வேண்டாம் - ஏன்னா ஆவியைப் பாக்க முடியாது - இன் கேஸ் ஆவியைப் பாக்கணும்னு தோணிச்சுனா. ரொம்ப ஒண்ணும் தெரியாது - கை கால் மூக்கு எல்லாம் நிஜ ஆவிக்குக் கிடையாது. ஆவியோட வருகையை உணரணும்னா வெளிச்சம் ரொம்பக் குறைவா இருந்தா நல்லது.
இனிமே ஆவியை வரவழைக்க வேண்டியது தான். உங்களுக்கும் அழைக்கப்போற ஆவிக்கும் பொதுவான பாட்டு, இசை ஏதாவது இருந்தா அதை பாடுங்க அ டேப்/சிடி போடுங்க. (லைட்டை அணைக்கறதுக்கு முன்னால இதெல்லாம் சரியா ரிகர்ஸ் பண்ணிப் பாத்துக்குங்க).
ReplyDeleteஎதிரெதிரே உக்காந்து கை கோத்துக்கொள்ளவும். உங்க வலது கை எதிரே இருக்குறவரோட இடது கை. எக்ஸாட்டம் கோத்துக்கணும். கோத்துக்கிட்ட உள்ளங்கைகள் பாத்திரத்து இஞ்சு ரெண்டு இஞ்சு மேலே இருக்கட்டும். ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் அப்படியே இருங்க - பின்னணி இசை/பாட்டு மெதுவா இருக்கட்டும். ஒரு நிமிஷம் ரெண்டு நிமிசத்துல உங்க ரெண்டு பேர் மனசும் கொஞ்சம் ரிலேக்ஸ் ஆனதும் நீங்க அழைக்கப்போற ஆவியை மனசுல நெனச்சுக்குங்க. வெங்கடாசலபதியோ ஜீசசோ என்ன படம் வச்சீங்களோ அதையும் நெனச்சுக்குங்க. ரெண்டு பேரும் மெதுவான குரல்ல ஒரே நேரத்துல "வெங்கடாஜலபதி, வாரும். அப்பனைக் கொண்டு வாரும்" அப்படி ஏதாவது எளிமையா சொல்லுங்க. இங்கே அப்பன்னு நான் சொல்றது ஒரு வேளை இறந்து போன அப்பாவோட ஆவியோட பேசணும்னு இருந்தா - ஆவிக்கு ஏத்த மாதிரி மாத்திக்குங்க. விடாம சொல்லுங்க. கொஞ்ச நேரத்துல ஸ்பூன் அ கரண்டி லேசா ஆடும். ரேட்லிங்க் கேக்கும். ஆவி வந்தாச்சுனு அர்த்தம்.
கோத்துட்டிருந்த கைகளை மெதுவா சீரா ஒரே நேர் கோட்டுல எடுத்துக்குங்க. பாத்திரத்தையோ ஸ்பூன்/கரண்டியையோ தட்டி விட்டுறாதீங்க. எடுத்ததும் மொதல்ல கேக்கறவங்க ஸ்பூன்/கரண்டியோட நுனியைப் பட்டும் படாம பிடிச்சுக்குங்க (ஸ்பூன் நுனி எந்தப்பக்கம் இருக்குதோ அவர் முதல் கேள்வியை ஆரம்பிக்கட்டும் - ரிகர்ஸ் பண்ணிக்குங்க). கேள்விகளை அமைதியாக எந்த வித உணர்ச்சியும் வெளிக்காட்டாம கேளுங்க. முக்கியம். முக்கியம்.
கேள்வியைக் கேட்டுட்டு, "ஆமாம்னா ஒரு அடி அடிங்க வெங்கடாஜலபதி"னு (அ ஜீசஸ்) அதே குரல்ல சொல்லுங்க. ஒரு வினாடி ரெண்டு வினாடில ஸ்பூன்/கரண்டி பாத்துரத்துல ஒரு தட்டு தட்டும், இல்லை அமைதியா இருக்கும். ரொம்ப நேரம் அமைதியா இருந்தா இல்லைனு அர்த்தம். அடுத்த கேள்விக்குப் போகலாம்.
அமைதியா இருந்தா ஆவியே வரலைனு விதண்டா வாதம் செய்ற கட்சினா - ஆமாம்னு சொல்ற கேள்விங்களா மொதல்ல கேட்டு வையுங்க (உதாரணமா 'என் பேரு அப்பாதுரை தானே?' நான் கேட்பேன். என் எதிர்ல உக்கந்திருக்கவர் பேரு இன்னது தானேனு கூட கேக்கலாம்).
கடைசி கேள்வி மட்டும் "இங்கிருந்து போய்விடுவாய் இல்லியா"னு ஆமாம் வரமாதிரி கேளுங்க. ரொம்ப முக்கியம். விளக்கைப் போட்டதும் ஏடாகூடம் தவிர்க்கணும்னா ஆவி போயிரணும். கடைசி கேள்வி முடிஞ்சதும், வெங்கடாஜலபதி (ஜீ)
ஞாபகம் வச்சுக்குங்க - தெரிஞ்ச ஆவி தானே? பயப்படவேண்டிய அவசியமே இல்லை. போரடிச்சுக்கிடந்த ஆவிக்கு இது ஒரு ரிலீஸ்னு வையுங்க. ரொம்ப நேரம் ஆவியோட பேசிட்டிருக்காதீங்க. ஜஸ்ட் எஞ்சாய் தி அனுபவம். அவ்ளோ தான். மிஞ்சிப் போச்சுனா அரை மணி இருட்டுல உக்கந்திருக்கப் போறீங்க. ஆனா ஆவியை உணரும் சந்தர்ப்பம் கெடச்சதுனா - யுனீக் இல்லீங்களா? எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதில்லை இந்த அனுபவம். வைதீஸ்வரன் கோவில் நாடி படிக்கப் போறவங்க அத்தனை பேருக்குமா நாடிச் சுவடு கிடைக்குது? எஞ்சாய்.
(டி1: ஆவி வேறே - பேய் பிசாசு வேறே. ஆவிகளுக்கு அலையறதைத் தவிர வேறு வேலை/சக்தி கிடையாது).
(டி2: என்னோட உண்மையான பெயர் அப்பாதுரை இல்லை - என்னைத் தேடி வரவேண்டாம் :)
Interesting..
ReplyDeleteஆமா அந்த ஆவிக்கு எழுதப்படிக்கத் தெரியலேன்னா என்ன செய்யும்?
ReplyDeletepannikutty sir, nenga kathu kudunga sir........
Deleteஎதுக்குப்பா...டம்ளரு, மெழுகுவர்த்தி.... ஆவிவர்றதுக்கு இட்லி அவிச்சா போதாது...
ReplyDeleteஇது பற்றி நானும் புத்தகங்களில் படித்திருக்கிறேன்..நீங்கள் எழுதியது இன்னும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது
ReplyDeleteaavi allam illengo
ReplyDeletepoluran
payamaa irukkuthu
ReplyDeleteஎஸ்.கே! பங்காளி! உங்க அனுபவம் டாப்பா இருக்குது! சுத்த பயந்தாங்கோளிகளா இருந்திருக்காங்க உங்க கூட்டாளிகள்! வேணும்னா நான் வரேன். சொல்லுங்க!
ReplyDeleteநண்பர் அப்பாதுரை நல்லா விளக்கமாகவே சொல்லி இருக்கிறாரு! ரெண்டு முறைகளையும் டரைப் பண்ணிப் பார்க்கலாம்! என்ன சொல்றீங்க!
//guru said...//
ReplyDeleteஉண்மைதாங்க!
//ஜீ... said...//
நன்றிங்க!
//Ananthi said...//
:-) நன்றி!
//காலப் பறவை said...//
நன்றி!
//R.Kamal said...//
நன்றி சார்!
//ஸாதிகா said...//
இப்போதைக்கு டிரை பண்ற நிலைமையில இல்லையே மேடம்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//சிநேகிதி said...//
மிக்க நன்றி!
//மகாதேவன்-V.K said...//
மிக்க நன்றி! நம்பிக்கை இருக்குதோ இல்லையோ ஆனா தெரிஞ்சிக்கிற ஆர்வம் எல்லோரிடத்திலும் உண்டு!
//அன்புடன் மலிக்கா said...//
மிக்க நன்றிங்க!
//Muniappan Pakkangal said...//
ReplyDeleteநன்றி சார்! நிச்சயம் முயற்சித்த பின் சொல்கிறேன்!
//ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...//
என்ன கேட்கிறீங்கன்னு புரியலை! வருகைக்கு நன்றி!
//அப்பாதுரை said...//
நம்பர் மறந்துட்டேன். அதை போட்டுட்டேன்.
நீங்க ஆவி அமுதா மாதிரி மீடியம் வச்சி ஆவிகிட்ட பேச வழி சொல்றீங்க! இது ரொம்ப நல்ல வழிதான்!
நான் இப்போ டிரை பண்ணும் நிலையில் இல்லை. ஆனா என்றாவது ஒருநாள் முயற்சிக்கிறேன்.
//அப்பாதுரை said...//
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்!
//பதிவுலகில் பாபு said...//
மிக்க நன்றிங்க!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...//
ஆரம்பிச்சுட்டீங்களா! :-) ஆவியானா எல்லாமே தெரிஞ்சிடும் சார்!:-)
வருகைக்கு நன்றி!
//நாஞ்சில் பிரதாப்™ said...//
நல்ல யோசனைதான்! ஆனால் இட்லி பதில் சொல்லாதே!:-)
வருகைக்கு நன்றி!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...//
மிக்க நன்றிங்க!
//polurdhayanithi said...//
இருக்கோ இல்லையோ ஆர்வம் இருக்கில்லையாங்க! வருகைக்கு நன்றி!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
ஒரு மாபெரும் வீரர் இப்படி சொல்லலாமா?
வருகைக்கு நன்றி!
//என்னது நானு யாரா? said...//
நன்றி நண்பரே!
ஆனா நான் இப்போ ட்ரை பண்ணும் நிலைமையில இல்லை அதான். நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க கூட முயற்சி செஞ்சு பாருங்க!
nalla pathivu bro///
ReplyDelete//தீயஷக்தி... said...//
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
I am ready where are you know
ReplyDeleteMy name shiva call me 9941273808
ReplyDelete