Monday, October 25, 2010

காலப்புதிர்கள் - பாகம் மூன்று (இறுதிப் பாகம்)

யோகேஷ் மற்றும் ஜெயந்த் வாசலில் காத்திருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் டாக்ஸியில் இருந்து இறங்கினார் தேவா.

”சார் வாங்க சார் வாங்க சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்”

”அப்படியில்லை தம்பி நான் சொன்னா செய்வேன்”

”நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் சார்”

“எங்க வீடு பேச்சுலர்ஸ் வீடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”

”எங்களால இன்னமும் நம்ப முடியலை நாங்க நேற்று வெறும் ஆட்டோ கிராஃப் வாங்கத்தான் வந்தோம் சும்மா கூப்பிட்டோம் ஆனா...”

”உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அதான் கூப்பிட்டதால நானே தனியா வந்தேன் ஆனா ரொம்ப நேரம் இருக்க முடியாது 1 அவர்ல கிளம்பிடுவேன்.” புன்னகைத்தபடியே சொன்னார் தேவா.

”நீங்க வந்ததே பெரிய சந்தோசம். காபி சாப்பிடுங்க சார்”

“ஆஹா நான் காபி டீ சாப்பிடுறதில்லப்பா”

”அப்போ கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வரேன்”

”எதுக்குப்பா”

”இல்லை சார் வரேன்” சொல்ல சொல்ல கேட்காமல் கிளம்பினான் ஜெயந்த்.

அவன் வரும் பேசலாம் என பேச ஆரம்பித்தனர் தேவாவும் யோகேஷும்.

இவ்வளவு நேரம் வீட்டருகில் இருந்து கவனித்து கொண்டிருந்த ரமேஷ் எழுந்திரித்தான். உள்ளே இருவர் மட்டுமே... சமாளிக்கலாம். துப்பாகியை தயாராக்கி கொண்டு வீட்டருகே சென்றான்.

------------------------------------

”சார் இந்த இடம்தான் அவனை கோட்டை விட்டோம்”

”இங்கே நிறைய கம்பெனி வீடுங்கல்லாம் இருக்கு.”

”அப்ப ஒன்னு பண்ணுங்க. முதலில் எல்லா வீட்டையும் விசாரிப்போம் எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சு தேடுங்க” போலீஸ் அருண், ராம்சாமி, பாபு, சௌந்தர் தலைமையில் கிளம்பியது.

-----------------------------------------

செல்வா 3வது முறையாக சுற்றி விட்டு சலித்துக் கொண்டான். ஒன்னும் தெரியலை எல்லாம் அமைதியா இருக்கு இதுக்குமேல சுத்தறது வேஸ்ட் ஏற்கனவே அந்த வாட்ச்மேன் ஒரு மாதிரியா பாக்கிறான். இவ்வளவு வந்தது வேஸ்டா போச்சே சலித்து வண்டியெடுத்து சிறிது தூரம் போயிருப்பான்.

”ஹலோ நீங்க எங்க இங்க” என்னும் குரல் கேட்டது. செல்வா வண்டியை நிறுத்தி பார்த்தான். ஜெயந்த. இரவில் லிஃப்ட் கேட்டவன். இவன் இங்கேயா?

”என்ன ஞாபகம் இல்லை நைட் பார்த்தோமே கவிஞரை பார்த்தோமே இப்பக் கூட அவர் எங்க வீட்டில தான் இருக்கார்” அவன் பாட்டுக்கு குதுகலமாக பேசிக்கொண்டு போனான்.

“எங்க வீடு இதோ இங்க கொஞ்சம் பக்கத்திலதான் வர்றீங்களா” யோசித்தான் செல்வா. சரி வந்ததுக்கு அங்க போய் கவிஞர்கிட்ட ஒரு ஆட்டோகிராஃப் வாங்குவோம்.

ஜெயந்த வண்டியில் ஏறிக்கொள்ள செல்வா கிளம்பினான். ஆனால் அவன் மனம் முழுவதும் திருடன் பற்றியே இருந்தது. கவனிக்காமல் எதிரே ஒரு கார் மீது மோதப் போனான். மயிரிழையில் நகர்ந்தான்.

”சாரி சார் சாரி” என்றான் செல்வா. காரிலிருந்தவர் இவனை பார்த்துவிட்டு முறைத்து விட்டு கிளம்பினார். அவர் பாண்டியன்.

பாண்டியன் கொஞ்ச தூரம் காரை ஓட்டிய பிறகு மனதில் ஒரு ஸ்பார்க். அட நைட் டைம் மெஷினில் ஒருவனை சுடுவது போல் பார்த்தோமே அதில் சுடப்படுபவன் இந்த வண்டி ஓட்டிச் செல்பவன்தானே!

பாண்டியனுக்குள் வேகம் வந்தது. காரை திருப்பினார். பைக் தூரத்தில் புள்ளியாய் தெரிந்தது. சீறினார் வண்டியை.....

----------------------------------

ரமேஷ் துப்பாக்கியை நீட்டி மீண்டும் ஒருமுறை சொன்னான்.
”நகரு இல்லை உன்னையும் சுட வேண்டியிருக்கும்” யோகேஷ் யோசித்தான். இவ்வளவு நேரம் இவன் கூட சண்டை போட்டோம் தேவா வேற அடிபட்டு மயங்கி கிடக்கிறாரு எப்படி காப்பாத்தறது.

’’”எனக்கு வேற வழி தெரியலை” என்று யோகேஷை சுடச் சென்றான் ரமேஷ். அவன் மேல் யாரோ விழுந்தார்கள். அது ஜெயந்த்.
”யோகேஷ் இவன் யாரு”
”தெரியலை ஆனா தேவா சாரை கொல்ல வந்தான். நான் இவன் மேலே சேரை தூக்கி அடிக்க அது அவர் மேலே பட்டு மயங்கிட்டாரு இவன் சுடப்போனான் நீ வந்துட்டடே”

பேசிக்கொண்டே இருவரும். ரமேஷை அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ரமேஷ் அவர்கள் இருவரையும் எளிதாக சமாளித்தான். அவன் அனுபவம் அவனுக்கு கைகொடுத்தது. விரைவில் அவர்கள் இருவரை களைப்படையச் செய்தான் இருவரும் மிகவும் களைத்து விழுந்தார்கள். யோகேஷ் ஜெயந்த் இருவரின் கைகளையும் சண்டையில் கிழிந்திருந்த தன் சட்டையை அவிழ்த்து கட்டினான் ரமேஷ்.

இத்தனையும் கவனித்தாலும் பயந்துகொண்டே தான் தேடியவன் திருடனில்லை கொலைகாரன் என்று உணர்ந்து மேலும் பயந்து வாசலுக்கு வெளியே ஒளிந்துகொண்டிருந்த செல்வாவை அவன் கவனிக்கவில்லை.

தேவா மயக்கம் தெளிந்து எழுந்திருக்க முயன்றார்.

”ஓ மயக்கம் தெளிஞ்சிருச்சா நல்லது ” “சாரி நண்பா உனக்கும் எனக்கும் முன்விரோதம் இல்லை ஆனால் சொன்னாங்க செய்யறேன்” சுடச் சென்றான் ரமேஷ்.

தன் கண் முன்னால் ஒரு உயிர் போவதை விரும்பவில்லை செல்வா. பயத்தை அடக்கிக் கொண்டே கண்ணை மூடி வேகமாக ஓடி ரமேஷை மோதினான் இருவரும் விழுந்தார்கள்.

புதிதாக யார். குறுக்கே பல தடங்கல்கள் வெறி அதிகமாயிற்று ரமேஷிற்கு. துப்பாக்க்கியை தேடினான் அருகே கிடந்தது.

”ஹேண்ட்ஸ் அப்”

-----------------------------------

பாண்டியன் காரை நிறுத்தினார். எங்கே போனான் அந்த பையன். அவனுக்கு ஆபத்து இருக்கே! கவலையுடன் தேடினார்.

கொஞ்ச தூரம் நடந்த போது.....

”எல்லோரும் நகருங்க இல்லை இவனை சுட்டுருவேன்” ரமேஷ் செல்வாவின் தலையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தன் முன்னால் இருந்த போலீஸிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவனிடம் வெறி அதிகமாக இருந்தது தன் டார்கெட்டை கொல்வதற்கு எததனை இடைஞ்சல்கள் இவன் வேறு கடைசியில் போலிசும் வந்து விட்டது. எப்படியோ அந்த வீட்டில் இருந்து இவனை வைச்சே வெளியே வந்தாச்சு! இப்ப இங்க இருந்து தப்பிக்கனும்! தன் டார்கெட் தப்பியது அவனுக்கு ஆத்திரம். அதைவிட இப்போது அவன் தப்பிக்க வேண்டும்.


பாண்டியன் கவனித்தார். ஆ! அதே ஆள் இவன் தான் அந்த பையனை சுடுவான்! அச்சச்சோ எப்படி தடுப்பது! பாண்டியன் அவனுக்கு தெரியாமல் அவன் பின்பக்கமாக அருகில் சென்றார். அருகில் சென்ற போது....

ரமேஷ் இடுப்பருகே தழும்பு. பாண்டியன் இடுப்பில் உள்ளது போல்..

பாண்டியனுக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. அப்படியானால் இவன் என் சகோதரனா... என் சகோதரன் கொலைகாரனா இல்லை.

பாண்டியன் உணர்ச்சி வசப்பட்டு சத்தப் போட....

ரமேஷ் திரும்பி பார்த்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தான் செல்வா. செல்வா தப்பிப்பதை உணர்ந்த ரமேஷ் அவனை சுட்டான்.

அவனைக் காப்பாற்ற பாண்டியன் குறுக்கே சென்று அவனை தள்ளினார். குண்டு பாண்டியனின் தோள் பட்டையில் பாய்ந்தது. போலீஸ் ரமேஷின் கையை சுட்டது.

”சுடாதீங்க அவன் என் பிரதர் சுடாதீங்க” கதறினார் பாண்டியன். ரமேஷ் அதிர்ச்சி ஆச்சரியம் கலந்து பார்த்தான்.

---------------------------

ஒரு நாளுக்குள் எத்தனை சம்பவங்கள் எத்தனை முடிச்சுகள். காலம் போகும் பாதையை அறியவே முடியவில்லை.
கவிஞனுக்காக உருகும் ரசிகன், கொல்லத் துடிக்கும் கொலைகாரன், எதற்கோ வந்து மாட்டிக்கொண்ட நான், காப்பாற்றியவர் கொலைகாரனின் சகோதரர். சிறுவயதில் பிரிந்தவர் சேர்ந்தனர். அவர்கள் நிலை பாவம்.

செல்வா மலைப்பாக யோசித்தான். தன் தைரியம் பற்றி கூட ஆச்சரியப்பட்டான். காலம் போகும் பாதையை அறியவே முடியவில்லை.
ஆச்சரியத்தோடு அன்றைய நிகழ்ச்சியை ஆரம்பித்தான்.. “ஹலோ நான் உங்க செல்வா பேசறேன்”


காலம் போடும் புதிர்கள் ஏராளம்..
அதற்கான விடைகளை அது மட்டுமே சொல்கிறது............


------------முற்றும்-------------

இந்த கதையை சுருக்கமா எழுதிட்டேன். இல்லைன்ன வழவழான்னு ஆகிடும். கொஞ்சம் சினிமேட்டிக்கா இருக்கலாம். பிடிக்காததை சொல்லுங்க.

13 comments:

 1. கதை யின் கடைசி டிவிஸ்ட் அருமை

  ReplyDelete
 2. சார்,சொல்றேனேன்னு தவறா நினைக்காதீங்க

  1.கமெண்ட் போடறவங்க பொறுமைசாலியா எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது,இது அவசர உலகம்,மாடரேஷன் எடுங்க.டக்னு கமெண்ட் போடற மதிரின் செட் பண்ணுங்க.

  2.ஃபாலோயர் ஆக க்ளிக் பண்ணூனா 14 நிமிஷமா போகவே இல்ல.அது என்னனு பாருங்க.


  3.உங்க நண்பனா ஆலோசனைதான் சொன்னேன்,அட்வைசா நினைக்காதீங்க

  ReplyDelete
 3. . காலம் போகும் பாதையை அறியவே முடியவில்லை.

  idhuஇதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்

  ReplyDelete
 4. சார்,மீண்டும் எனை மன்னிக்கனும்,நீங்க போட்டியில் ஜெயிச்சு கலக்கீடீங்க,நான் இன்னும் பரிசு அனுப்பாம சொதப்பறேன்,உங்க அட்ரஸ் என் மெயில்லஃ மாட்டிக்கிச்சு(ஏதோ பிராப்ளம் ஓப்பன் ஆகலை)எனவே உங்க அட்ரஸை என் செல் நெம்பருக்கு எஸ் எம் எஸ் பண்ணவும். 9842713441

  ReplyDelete
 5. //சி.பி.செந்தில்குமார் said....//
  மிக்க நன்றி! வேர்ட் வெரிஃபிகேசன் எடுக்க மறந்துட்டேன்! அவ்வளவுதான் நீங்கள் அட்வைஸ், ஆலோசனை எதுவும் செய்யலாம்! தாராளமாக!
  அப்புறம் என்னை சார்னு சொல்லாதீங்க! உங்க அனுபவம் வயது முன்னால் நான் சிறுவன்!

  ReplyDelete
 6. என் முகவரி அனுப்புகிறேன்!

  ReplyDelete
 7. மூணு பாகமும் இப்போ தான் படித்தேன்...நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. //அப்பாவி தங்கமணி said...//
  நன்றிங்க!

  ReplyDelete
 9. எல்லாம் சேர்த்து இப்போது தான் படித்தேன்.

  எம்.ஜி.ஆர் பழைய படம் பார்த்த மாதிரி இருக்கு.
  நிறைய சினிமேடிக் நிகழ்வுகள். ரசிக்க முடிந்தது. வாழ்த்துக்கள்.

  கடை வரிகளில் கவிதை நயம்.

  ReplyDelete
 10. Nicely written.. all the best for you :-))

  ReplyDelete
 11. yov. எப்பய்யா போஸ்ட் போட்ட. சொல்லரதில்லையா. சரி விடு . சூப்பர்

  ReplyDelete
 12. //அப்பாதுரை said... //
  நன்றி சார்!

  //Ananthi said... //
  மிக்க நன்றிங்க!

  //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... //
  பிளாக் ஆரம்பிச்ச உடனே உடம்பு சரியில்லாம போச்சுங்க!

  ReplyDelete